Showing posts with label ரச வகைகள். Show all posts
Showing posts with label ரச வகைகள். Show all posts

Sunday, September 23, 2012

பருப்பு ரசம், பருப்பு ரசம், பருப்பு ரசம்

பருப்பு ரசம்                          By: Savithri Vasan


பொதுவா  ரசம் வைக்கரோம்னா  சாம்பாருக்கு பருப்பு போட்டு
இருந்தால் அதில் நீராக இருத்து   அதை கொதிக்கும்  ரசத்தில் விட்டு
விளாவி  அதை ரசமாக வைப்போம் . அனால் இது பிரத்யேக பருப்பு
ரசம் .


தேவை:-

துவரம்பருப்பு  1/2 ஆழாக்கு
புளி : எலுமிச்சை அளவு (புளி கரைசல் தயார் செய்ய)
தக்காளி:            : 2
மஞ்சள் பொடி : கொஞ்சம்
குழம்பு பொடி  2 டீஸ்பூன்
பெருங்காயம் : கொஞ்சம்
உப்பு : தேவைக்கேற்ப

தாளிக்க:-

கடுகு, மிளகாய் வெத்தல்

கருவேப்பிலை , கொத்தமல்லி




பருப்பை வேக வைக்கவும்


புளி  கரைத்து , கொஞ்சம் சாம்பார் பொடி போட்டு, பெருங்காயம்
உப்பு சேர்த்து , தக்காளி நறுக்கி போட்டு கொதிக்க வைக்கவும்

பொடி வாசனை போக கொதித்ததும் , வேகவிட்ட பருப்பை
நன்றாக மசித்து இதில் போட்டு 10 நிமிடம் கொதிக்க விடவும்

கடுகு , மிளகாய் வற்றல் நெய் விட்டு தாளிக்கவும்

கருவேப்பிலை , கொத்தமல்லி சேர்க்கவும் .






குறிப்பு:- தக்காளியை நெய் விட்டு வதக்கி போட்டால் சுவை கூடும்

                  தக்காளியை நன்றாக கைகளால் நசுக்கி போட்டும் செய்யலாம்

                  தனியாக ரசப்பொடி செய்து போட்டால் அதன் சுவை அலாதி

                  ஈய சொம்புல வைங்க  அப்புறம் சுவைய சொல்லுங்க

ரசம் பருப்பு ரசம் , ஈயசொம்பில் வைத்த சுவையான ரசம் வேணுமா


வேப்பம்பூ ரசம்

வேப்பம்பூ ரசம்                                      By:Savithri Vasan






இது சிம்பிள் ஆனா ரொம்ப அவசியமான ரசம்
நம்ம ஆரோக்கியத்திற்கு


புளி  கரைத்து , உப்பு சேர்த்து 1/2 ஸ்பூன் குழம்பு பொடி போட்டு
வெத்த மிளகாய் 2 கிள்ளி  போட்டு நல்லா கொதிக்க விடவும்

கொதித்ததும் தண்ணீர் விட்டு விளாவவும்





கடுகு தாளித்து போட்டு , பிறகு வேப்பம்பூவை சிறிது
எண்ணை  விட்டு பொன்வறுவலாக வறுத்து  ரசத்தில்
போடவும் .




அவ்வளவுதான் வேப்பம்பூ ரசம் தயார்



பூவிலே சிறந்த பூ குஷ்பூ இல்லைங்க வேப்பம்பூ (ரசம்)





மைசூர் ரசம்

கம , கம  மைசூர் ரசம் ,                       By:-Savithri Vasan


சரசங்கள் பலவிதம் , சலனங்கள் பலவிதம் ,ரசனைகள் பலவிதம்
ரசங்கள் பலவிதம் , அதில் மைசூர்  ரசமும் ஒருவிதம்



தேவையானவை:-

துவரம் பருப்பு : 1 ஆழாக்கு
தக்காளி             :  2
புளி                      : எலுமிச்சை அளவு
மஞ்சள் பொடி :  கொஞ்சம்
பெருங்காயம்  :  கொஞ்சம்
உப்பு                    :  தேவைக்கேற்ப
கருவேப்பிலை:
கொத்தமல்லி :

பொடி செய்ய:-

தேங்காய் துருவல் 2 டீஸ்பூன்
கடலைபருப்பு           2 டீஸ்பூன்
தணியா                        2 டீஸ்பூன்
மிளகு                            1 டீஸ்பூன்
மிளகாய் வத்தல்      4 Nos.

தாளிக்க: கடுகு, மிளகாய் வெத்தல்






முதல்ல பருப்ப வேகவையுங்க




அதுக்குள்ள  புளி கரைத்து அதில் தக்காளி நறுக்கி போட்டு
மஞ்சள் பொடி , பெருங்காயம் உப்பு சேர்த்து கொதிக்க விடுங்கள்


இந்த ரெண்டுக்கும் இடைப்பட்ட நேரத்தில் மேல சொன்ன
தேங்காய், கடலைப்பருப்பு, தனியா, மிளகு, மிளகாய் வற்றல்
எல்லாம் கொஞ்சமா எண்ணை விட்டு வறுத்து , மிக்சில போட்டு
பொடி பண்ணி வச்சிடுங்க




இப்ப என்ன பருப்பு வெந்தாச்சு , அடுப்பில கொதிக்கவிட்ட புளி
தண்ணில  வெந்த பருப்ப போட்டு , இந்த  பொடிய சேருங்க
நல்லா 10 நிமிஷம் கொதிக்க விடுங்க .





கடுகு, மிளகாய்வற்றல் நெய் விட்டு  தாளிங்க

கருவேப்பிலை , கொத்தமல்லி போடுங்க

ஒரு கப் எடுங்க , கொஞ்சம் ரசம் அதுல விட்டு சூடா சுவைங்க




மணம் கமழும்  மைசூர் ( ரசம் ) நம்ம வீட்டு சமையல் அறையில் 

Thursday, September 13, 2012

பைனாப்பிள் ரசம்(Pinapple Rasam)

பைனாப்பிள்  ரசம்


பழமாய் சுவைக்கலாம் , பழரசமாக சுவைக்கலாம் , ஏன்
பருப்பு ரசமாகவும் சுவைக்கலாம் வாருங்கள் பைனாப்பிள்
போட்டு ரசம் செய்வது எப்படி என்று அறிந்துகொள்வோம்


பைனாப்பிள் நல்ல பழமாக 4 துண்டுகள் தெரிவு செய்து கொள்ளுங்கள்


பிற தேவைகள் :-

தக்காளி           1
துவரம் பருப்பு    1/2 ஆழாக்கு
புளி கரைசல்       1 கப் 
காரப்பொடி          2 ஸ்பூன் 
பச்சை மிளகாய்  2
உப்பு                     தேவைக்கேற்ப 
பெருங்காயம்      1 ஸ்பூன் 
இஞ்சி                  கொஞ்சம்
மஞ்சள் போடி     கொஞ்சம் 
கருவேப்பிலை   கொஞ்சம் 
கொத்தமல்லி      கொஞ்சம் 
கடுகு , மிளகாய் வற்றல் தாளிக்க  




பருப்பை வேக வைத்து நன்றாக மசித்து கொள்ளவும் , 

ஒரு பாத்திரத்தில் பைனாப்பிள் துண்டுகள் போட்டு , கரைத்த புளி கரைசல் 
சேர்த்து , மஞ்சள் பொடி, உப்பு, பெருங்காயம் சேர்த்து , தக்காளியை பொடி 
பொடியாக நறுக்கி போடு , 1 டம்பளர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து 
கொத்துக்க விட்டு, நன்றாக மத்து கொண்டு மசித்து விடவும் , பிறகு இதனுடன் 
வேகவைத்த பருப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும் .

அடுப்பில் இருந்து இறக்கி , கொஞ்சம் பைனாப்பிள் துண்டுகள் சேர்த்து 
கொஞ்சம் கருவேப்பிலை, கொத்தமளி சேர்க்கவும் . நெயில் கடுகு 
தாளிக்கவும்.



சுவைக்க , மனமுள்ள பைனாப்பிள்  ரசம் , இதோ உங்கள் முன்னே , 
ஜூஸ்  மாதிரி குடிங்க , இல்ல சாதம் போட்டு சாப்டுங்க , அது உங்க 
விருப்பம் .


பழ ரசமா , பைனாப்பிள் ரசமா , நீங்க சொல்லுங்க !!!

விளாம்பழ ஓடு ரசம்

விளாம்பழ ஓடு ரசம்


முன்னமே சொன்னேன் இல்லையா , விளாம்பழ பச்சடி
செய்முறையும் , அப்பா விளாம்பழ ஓட்ட தூக்கி போடதீங்கன்னு
அந்த ஓட்ட வச்சு ஒரு ரசம் பண்ணலாம்


இது ஒன்னும் பெரிய வேலையோ விஷயமோ இல்லை


நாம ஜீரகம் ரசம் வைக்கறோம் இல்லையா அந்த ரசத்துல
இந்த ஓட போட்டு நல்ல கொதிக்க விடுங்க , பழத்தை
தாங்கிய ஓடு சுவை அதிகமாக இருக்கும் .

ஜீரகம் ரசம் வைக்கும் பொது மிளகு சேர்க்க வேண்டாம்
மற்ற எல்லா பொருட்டகளும் சேர்த்துவிடவும் , என்ன மறந்து போச்சா
அதுனால என்ன திரும்ப ஒரு தடவை சொல்லறேன்

ஜீரகம் ......................... 3 ஸ்பூன்
துவரம் பருப்பு ..........2 ஸ்பூன்
தணியா  ......................2 ஸ்பூன்
மிளகாய் வற்றல் ....2
கருவேப்பிலை
புளி கரைசல்....2 கப்
சாம்பார் பொடி 1/2  ஸ்பூன்
உப்பு : தேவைக்கேற்ப
பூண்டு (தேவையானவர்களுக்கு)

ஒரு பத்திரத்தில் புளி கரைசல் விட்டு 1/2 ஸ்பூன்
சாம்பார் போடி  போட்டு , தேவையான உப்பு சேர்த்து
2 டம்பளர் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்

ஜீரகம், மிளகு, துவரம்பருப்பு , தணியா , கருவேப்பிலை
மிளகாய் வற்றல் எல்லாம் மிக்சியில் போட்டு அரைத்து
விழுதாக எடுத்து அடுப்பில் கொதிக்கும் ரசத்தில் விட்டு
நன்றாக கொதிக்க விடவும் . விளாம்பழ ஓட்டை அதில் போட்டு கொதிக்க விடவும் 

அடுப்பில்  இருந்து இறக்கி வைத்து கடுகு மட்டும் தாளிக்கவும்

வியக்கும் விளாம்பழ ரசம் தயார்

ஜீரக - மிளகு ரசம்

ஜீரக - மிளகு ரசம்

இது உடலுக்கு நல்லது இதில் சேர்த்திருக்கும்
பொருட்களை சார்ந்து . மிளகும், ஜீரகமும்
உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் பொருட்கள்.


தேவையானவை:



ஜீரகம் ......................... 3 ஸ்பூன்
மிளகு .......... ................3 ஸ்பூன்
துவரம் பருப்பு ..........2 ஸ்பூன்
தணியா  ......................2 ஸ்பூன்
மிளகாய் வற்றல் ....2
கருவேப்பிலை
புளி கரைசல்....2 கப்
சாம்பார் பொடி 1/2  ஸ்பூன்
உப்பு : தேவைக்கேற்ப
பூண்டு (தேவையானவர்களுக்கு)

ஒரு பத்திரத்தில் புளி கரைசல் விட்டு 1/2 ஸ்பூன்
சாம்பார் போடி  போட்டு , தேவையான உப்பு சேர்த்து
2 டம்பளர் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்

ஜீரகம், மிளகு, துவரம்பருப்பு , தணியா , கருவேப்பிலை
மிளகாய் வற்றல் எல்லாம் மிக்சியில் போட்டு அரைத்து
விழுதாக எடுத்து அடுப்பில் கொதிக்கும் ரசத்தில் விட்டு
நன்றாக கொதிக்க விடவும் .

அடுப்பில்  இருந்து இறக்கி வைத்து கடுகு மட்டும் தாளிக்கவும்

மிடுக்கான சீராக மிளகு ரசம் , கம , கமா , தயார்




சாப்பிடுங்க , அதுவும் எப்படி , சனிக்கிழமை / ஞாயிற்றுக்கிழமை
என்னை தேய்த்து குளித்துவிட்டு , பருப்பு துகையல் ,
சீராக ரசம் , இத்துடன் சுட்ட அப்பளம் ,

அப்புறம் என்ன நல்ல 2 மணிநேர தூங்குங்க , எழுந்தா
உடம்பு வலி இருந்த இடம் தெரியாம போகும் .


"ஜீரகமும், மிளகும் சீராக்கும்" உடல் உபாதையை 

Tuesday, September 11, 2012

பருப்பு அரைச்சுவிட்ட ரசம்

பருப்பு அரைச்சுவிட்ட ரசம்


அது என்ன பருப்பு அறைச்சுவிட்டது ,

ரசம் ஒன்பது வகை அதுதாங்க நவரசம்  நான் அத சொல்லல
அது கலை , இது சமயற்க்கலை இங்கயும் அவ்ளோ வகை இருக்கு


பருப்பு ரசம்
பருப்பு கரைத்து விட்ட ரசம்
பருப்பு அரைத்து விட்ட ரசம்
                     (அ )
பருப்பு நடத்திவிட்ட ரசம்
கண்டதிப்பிலி ரசம்
வேப்பம்பூ ரசம்
பைனாப்பிள் ரசம்
மைசூர் ரசம்
ஜீரகம் மிளகு ரசம்
காலிப்ளவர் ரசம்
பூண்டு ரசம்
எலுமிச்சை ரசம்
பயத்தம் பருப்பு ரசம்
கடலைப்பருப்பு துவரம் பருப்பு ரசம் 

இவ்ளோ இருக்குங்க , இன்னும் ஏதாவது விட்டுப்போனா 
எங்கிட்ட சொல்லுங்க நானும் தெரிஞ்சுக்கறேன்

இப்ப நாம தெரிஞ்சுக்கப்போறது பருப்பு நடத்திவிட்ட ரசம் (அ )
பருப்பு அரைச்சுவிட்ட ரசம்.



கொஞ்சம் துவரம் பருப்பு ஊறவைச்சுக்கோங்க

மத்தபடி சாதாரணமா இசை வைக்கராமாத்ரி ரசம் வைங்க

இந்த துவரம் பருப்பு கூட கொஞ்சம் கொத்தமல்லி
2 பச்சை மிளகாய் சேர்த்து மிக்சில  அரைச்சு ரசத்துல
சேர்த்து கொதிக்கவைங்க

அவ்ளவுதான் , இதன் சுவை தனி



Thursday, September 6, 2012

கொட்டு ரசம்

அள்ளிப் போட்டு ரசம் (கொட்டு ரசம்):- By Savithri Vasan


அன்றாடம் சமைக்கும் எவருக்கும் ஒருநாள்
சற்று அலுப்பு ஏற்ப்படும் ,  அது உடல் அலுப்பு
அல்லது மன சலிப்பு காரணமாக இருக்கும்.

இது போன்ற சமயங்களில் , வேண்டா வெறுப்பாக
ஒரு ரசம் சமைப்போம்  இதற்க்கு பெயர்தான்
அள்ளிப்போட்ட ரசம், அல்லது கொட்டு ரசம்

சரி இதுல அப்டி என்னதான் போடுவோம்
கல், மண் , குப்பையா போடுவோம் ,
ச்ச  ச்ச , அப்டில்லாம் ஒன்னும் இல்லைங்க

பாருங்களேன் இப்ப நான் என்ன என்ன போடறேன்னு

பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் , கொஞ்சம் புளி
துளி பெருங்காயம், 2 ஸ்பூன் குழம்பு பொடி,  கொஞ்சம்
உப்பு.



இவ்ளவுதாங்க , கொட்டு  ரசம் தயார்.

முடிஞ்சா கடுகு தாளிங்க , இருந்தா மல்லி , கருவேப்பிலை
போடுங்க.

எப்டி செஞ்சாலும் சுவை குறையாது.  சாப்டுங்க , சாப்டுங்க
சாப்டுகிட்டே இருங்க.

அவசர கோலம் அள்ளி தெளித்தாளாம் ........அள்ளிப் போட்டு ரசம்
அவளும் வைப்பாளாம்