Showing posts with label சிற்றுண்டி வகைகள். Show all posts
Showing posts with label சிற்றுண்டி வகைகள். Show all posts

Sunday, December 22, 2013

இடியாப்பம் (பலதானிய மாவு ) - Multi Grain Idiyappam

இடியாப்பம் (பலதானிய மாவு )  By Velammal Gurusamy 







இன்னைக்கு எங்கள் காலை உணவு ,கார குழிப் பணியாரமும் இனிப்பு இடியாப்பமும் .குழிப்பணியாரத்தைப் போலவே இடியாப்பமும் சாப்டா சுவையா இருந்தது 


 பொடித்த வெல்லம்,
துருவிய தேங்காய் ,
கொஞ்சம் நெய் ,
சிறிது ஏலப்பொடி சேர்த்து கிளறி சாப்பிட்டோம் .

சிகப்பு பச்சரிசி ,
சோளம் ,
மக்காச் சோளம் ,
கம்பு ,
ராகி ,
சம்பாக் கோதுமை
சோயா 

இவற்றை எடுத்துக் கொண்டு ,அரிசி தவிர மற்றவற்றை கைபொறுக்கும் சூட்டிற்கு வறுத்து மாவாக அரைத்துக்கொண்டேன்.
அதில் தேவையான மாவை எடுத்து உப்பு ,எண்ணெய் சிறிது சேர்த்து கொதிக்கும் நீரை ஊற்றி ,இடியாப்பம் புழியும்பதத்திற்கு பிசைந்தேன்.இடியாப்ப உழக்கில் பிழியும் போது இலகுவாக வந்தது .

இனிப்பு இடியாப்பம் குழந்தைகளுக் கேற்ற சத்தான உணவு.மற்றவர்கள் சைட்டிஷ் விரும்பியதைச் சேர்த்து சாப்பிடலாம் .

Saturday, December 7, 2013

வீட் மசாலா பைப்ஸ் (Wheat Masala Pipes)



வீட் மசாலா பைப்ஸ் (Wheat Masala Pipes) By Velammal Gurusamy





இது செய்ய மோல்டு வேண்டும் .அதாவது அலுமினிய பைப் .அது பத்து செ .மீ .நீளமும் .இரண்டு செ .மீ .விட்டமும் உள்ள அலுமினிய பைப்கள் ஆறு வேண்டும் .இது எல்லா ஹார்டு வெயர் (Hardware)கடைகளிலும் கிடைக்கும் .இதைச்செய்ய நானே கடைக்குப் போய் வாங்கி வந்தேன்.


ஒருகப் கோதுமை மாவோடு ஒரு டேபிள்ஸ்பூன் பட்டரும் ,சிட்டிகை உப்பும் சேர்த்து கெட்டியாக பிசைந்து அரை மணி நேரம் ஊறவைத்தேன் .இதனுள் ஸ்டப் செய்ய வெஜிடபிள்ஸை வேகவைத்து ,கெட்டியான வெஜிடபிள் மசாலா தயார் செய்தேன்.


மாவை சின்ன பூரிகளாக இட்டு ,மோல்டின் மேல் ரோல் செய்து ,கடைசி முனையை கரைத்த கோதுமை மாவினால் ஒட்டினேன் .மிதமான தீயில் இரண்டிரண்டாகபோட்டு பொன்னிறமாக பொரித்தேடுத்தேன்.

ஆறியதும் வீட் பைப்ஸ் மொறு மொறுப்பாக கையில் கழன்று வந்து கண்சிமிட்டியது .வெஜிடபிள்ஸை ஸ்டப் பண்ணியதும் .பைப்பின் பக்குவம்,
கைபக்குவத்திற்கு போக தயாரானது .

Friday, November 22, 2013

சுசினி அடை (சுரைக்காய் அடை )



சுசினி அடை (சுரைக்காய் அடை )

By :Velammal Gurusamy




அடைகள் பலவிதம் .ஒவ்வொன்றும் ஒரு விதம் .அதில் போடும் காய்களும் பல விதம் ஒவ்வொன்றின் சுவையும் ஒருவிதம் .இப்படி ஒரு பாட்டு மாதிரி பாடணும்னு தோணுது .



பலரது  கை பக்குவத்தால் பலவகையான சுவையான அடை வகைகள் 
நமது ரெசிபி டாக்குமெண்டை நிரப்பி விட்டன .நான் இங்கு சுரைக்காய்க்கு பதிலாக சுசினி என்னும் காயைபோட்டு அடை பண்ணியிருக்கிறேன்.

இது உருவத்தில் வெள்ளரிக்காயைபோல இருந்தாலும்சுவையில் சுரைக்காயை ஒத்திருக்கிறது .

அடைமாவு தயாரிக்க , 

ஒரு கப் இட்லிஅரிசி ,
அரைக்கப் கடலைப்பருப்பு ,
அரைக்கப் துவரம்பருப்பு ,
ஒருடேபிள்ஸ்பூன் உழுந்து(உளுந்து) .
மிளகாய் வத்தல் - 5
இஞ்சி 1 துண்டு
பெருங்காயம் - 1 டீஸ்பூன்

அரிசியை தனியாகவும் ,பருப்பை தனியாகவும் மூன்று 
மணிநேரம் ஊறவைக்கவும் 

முதலில் அரிசியோடு, மிளகாய் வத்தல் ,இஞ்சி ,உப்பு ,பெருங்காயப்பொடி சேர்த்து கொரகொரப்பாக அரைத்துவிட்டு பருப்பையும் கொரகொரப்பாக அரைத்து அதோடு சேர்த்து ,இன்னும் பொடியாக நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலையும் கலந்து வைத்துவிட்டு ,சுரைக்காயை தோல்நீக்கி துருவி அதையும் கலந்து மிதமான தீயில் தோசைக் கல்லில் நல்லெண்ணெய் விட்டு மெல்லிதாக சுட்டெடுத்தேன் .சைட்டிஷ் இல்லாமல் நான் அப்படியே சாப்பிடுவேன் .

எங்க ஊரில் திருநெல்வேலி அடைக்கு அவியல் தான் சைட்டிஷ் ,தேங்காய் சட்னியும் சூப்பராய் இருக்கும் சுரைக்காய் அடை எப்படி இருக்குதென்று சுட்டு சுவைத்து பார்த்து சொலுங்கள் .

Thursday, November 21, 2013

இலை கொழுக் கட்டை


இலை கொழுக் கட்டை




 
கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல ,பலநாட்கள் தேடியது 
ஒருநாள் எதிர் பாராமல் கிடைத்தால் இப்படிச் சொல்வார்கள் .இலை கொழுக்கட்டை பண்ண பூவரசு இலையைத்தேடினேன் .

நேற்று தற்செயலாக கடைக்குச் செல்லும் வழியில் ,காலில் சிவப்புநிற 
பூ ஒன்று தட்டுப்பட்டது .கையில் எடுத்து பார்த்தால் அது பூவரசம்பூ .
அண்ணாந்து பார்த்தால் பூவரசமரம் .உடனே எனக்கு கிழக்கே போகும் 
ரயில், பாட்டு நாபகத்துக்கு வந்தது .

"பூவரசம்பூ பூத்தாச்சு ,பொண்ணுக்கு சேதி வந்தாச்சு ."

எனக்கு கொழுக்கட்டை பண்ணச்சொல்லி சேதி வந்தாச்சு கொஞ்சம் இலைகள் பறித்துக் கொண்டேன் .


பச்சரிசியை ஊறவைத்து மாவாக்கி அதோடு வெல்லம் ,ஏலப்பொடி,துருவிய தேங்காய் கொஞ்சம் சேர்த்து ,தளர்வாகப் பிசைந்து ,சிறிய வட்டங்களாகத் தட்டி சுத்தம் செய்த இலைகளில் வைத்து மூடி ,ஆவியில் வேகவைத்து எடுத்தேன் .
சுவைத்து பார்த்ததும் காவேரி போல பொங்கியது மனசு .

ஓட்ஸ் கார பணியாரம்

ஓட்ஸ் கார பணியாரம் -  By Velammal Gurusamy


அம்மா வேலம்மாள் குருசாமி அவர்கள் தித்திக்கும்
ஓட்ஸ் பணியாரம் செய்முறை தந்தார்கள்

எனக்கு சர்க்கரை தாக்கம் உண்டு ஆகவே அவர்களிடம்
ஓட்ஸ் கார பணியாரம் வேண்டும் என்று கேட்டேன்
உடனே கைவசம் உள்ள குறிப்பை தொலைபேசியில்
குடுத்தாங்க

நாங்களும் குறித்துக் கொண்டு செய்து குதுகலித்து
மகிழ்ந்தோம்.




ஓட்ஸ் 1 கப்
பெரிய வெங்காயம் 2
பச்சை மிளகாய் 2
இஞ்சி துண்டு 1
தயிர் 1 கப்

ஓட்ஸ் வறுத்து பொடி செஞ்சு , வெங்காயம், பச்சை மிளகாய்
இஞ்சி துண்டு எல்லாம் தயிருடன் சேர்த்து கலந்து மாவாக்கி
சிறிது நேரம் ஊறவைத்து




பணியாற குழியில் மாவை ஊற்றி , பணியாரம்
செஞ்சு சுவைத்து மகிழுங்கள்



நல்ல கார சட்னி செஞ்சு , இதோட சேர்த்து சாப்பிட்டு
சுவைத்து மகிழுங்கள் 

ஸ்பைசி ரவுண்ட்ஸ் - ஜாலி ஜாலி ஸ்பைசி ரவுண்ட்ஸ்




ஸ்பைசி ரவுண்ட்ஸ்   By: Velammal Gurusamy (Spicy Rounds)

குழந்தைகள் தினமும் ஏதாவது புது புதுவகையான 
தின்பண்டங்கள் கேட்கும் பொது நாம் திக்கு முக்காடி 
போய்விடுகின்றோம்.   அதற்காக வெளியே கடைகளில் 
விற்கும் வாயில் பெயர் நுழையாத பொருட்களை வாங்கி 
கொடுத்து , குழந்தைகள் உடல் நலத்தை கெடுக்க நாமே 
மூல காரணமாக இருக்கலாமா !

இப்படி யோசித்ததின் விளைவுதான் , இன்று என் பேரக்குழந்தைகள் 
விரும்பி சாப்பிடும் ஸ்பைசி ரவுண்ட்ஸ் உருவானது




பஜ்ஜிதான் இப்படி உருமாறி வந்திருக்குது .குழந்தைகள் கிட்ட வெங்காய பஜ்ஜி ,வாழைக்காய் பஜ்ஜியை கொடுத்தா அவங்க காயை வெளியே எடுத்து போட்டுட்டு வெறும் தோலை மட்டும் சாப்பிடுவாங்க .




காயை வைக்காமல் பஜ்ஜி பண்ண இந்த ஒரு வழிதான் தெரிந்தது அது வெறும் மாவில் ஸ்பைசி ரவுண்ட்ஸ்






 .



பஜ்ஜி மாவு எல்லோருக்கும் தெரியும் .அதை கொஞ்சம் கெட்டியாகப் பிசைந்து ,கெட்டியான பிளாஸ்டிக் கவரில் சிறு துளையிட்டு ,கவருக்குள் மாவை வைத்து ,கேக்கில் ஐசிங் செய்வது போல் அல்லது ஜாங்கிரி பிழிவது போல் மிதமான தீயில் எண்ணெய்யில் பொரித்து எடுக்கவேண்டும் .வெறும் மாவு என்பதால் சீக்கிரம் வெந்து விடும் .உடனே திருப்பிப் போட்டு எடுத்து விட வேண்டும் .டேஸ்டியா ,சாப்டா குழந்தைகள் கடித்துச் சாப்பிட கச்சிதமாயிருக்கும்.

உங்கள் வீட்டு குழந்திகளுக்கும், பேரக்குழந்தைகளுக்கும்
கொடுத்து மகிழுங்களேன் 

Wednesday, November 20, 2013

ஓ ! இட் இஸ் பணியாரம் .ஓட்ஸ் பணியாரம்

ஓ ! இட் இஸ் பணியாரம்!!!        ஓட்ஸ் பணியாரம் 

By Velammal Gurusamy 



பள்ளியிலிருந்து வீடுதிரும்பி வந்த குழந்தை மம்மி பசிக்குது 
 என்பாள்.

லஞ்ச் சாப்பிட்டாயா என்று கேட்டால்? 

கொஞ்சம் சாப்பிட்டேன் என்பாள் .

தினமும் எல்லோர் வீட்டிலும் நடக்கும் நிகழ்ச்சிதான்.

சரி சரி கைகால் கழுவிட்டு ட்ரெஸ் மாத்திட்டுவா உனக்கொரு 
சர்பிரைஸ் காத்திருக்கு என்றுசொன்னால் ,சொன்ன வேலையை செய்துவிட்டு ஓடிவந்து டைனிங் டேபிள் மேல் இருப்பதைப்-
பார்த்துவிட்டு ,

ஓ !இட் இஸ் பணியாரம். சந்தோஷத்தில் சாப்பிட 
ஆரம்பிக்கிறது குழந்தை. தாயின் மனம் பூரிக்கிறது.

எப்படி செய்வது , கொஞ்சம் பார்க்கலாமா 

பணியாரம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். 

நான் ஒருகப் ஓட்ஸை லேசாகவறுத்து ,பொடித்து ,
அதோடு அரைக்கப் பொடித்த வெல்லம்,ஒரு பழம் ,
சிறிது ஏலப்பொடி ,தேவையான அளவு பால் சேர்த்து 
கரைத்து சிறிது நேரம் ஊறவைத்து .நெய்விட்டு பணியாரங்களாக சுட்டெடுத்தேன்.

சாப்பிட சுவை, குழந்தைகளின் கொண்டாட்டம்,
தாயின் குதூகலம் .அதுதான் ஓட்ஸ் பணியாரம்.

ஓடி பிடித்து விளையாடும் குழந்தைகளை 
ஓட்ஸ் பலகாரங்கள் கொண்டு கட்டி போடுங்கள்

Unl

Tuesday, November 19, 2013

வெஜிடபிள் ரிங்

வெஜிடபிள் ரிங்       By:Velammal Gurusamy 

தினம் தினம் பள்ளியிலிருந்து 
வரும் குழந்தைகளுக்கு 
நாம் என்ன கொடுப்பது என்று 
யோசித்துக் கொண்டு இருக்கும் 
வேலையில் , இப்படி ஒரு எண்ணம் 
தோன்றியது 

இதுபோல் செய்து கொடுத்ததும் எனது 
பேரக்குழந்தைகள் விரும்பி கேட்டு 
வாங்கி சாப்பிட்டனர்






கொழுக்கட்டைமாவில் வளையங்கள் செய்து அதில் காரட் , பீஸ் , காரன் இவைகளைப் பதித்து உப்பு மிளகுப்பொடி தூவி ஆவியில் வேகவைத்தேன் . அழகான வெஜிடபிள் ரிங் கிடைத்தது காரமான் சட்னியோடு சாப்பிட்டால் சுவை தரும்.

நீங்களும் உங்கள் வீட்டில் செய்து , சுவைத்து பாருங்களேன் 
சுட்டிகளின் , கருத்தை , கண்ணைகவரும் வண்ண வண்ண 
நிறங்களில் வெஜிடபிள் ரிங் செய்து கொடுத்து 

Wednesday, May 15, 2013

வெஜிடபிள் இட்லி (Vegitable Idly)

வெஜிடபிள் இட்லி (Vegitable Idly)  by:- Savithri Vasan

இட்லி
ரவா இட்லி
கம்பு இட்லி
கேழ்வரகு இட்லி
ஓட்ஸ் இட்லி
குஷ்பு இட்லி
முருகன் இட்லி

இப்டி எவ்ளவோ இட்லி இருக்கு சாப்பிட நாமும்
கேளிவிபட்டிருக்கோம் சிலவற்றை ருசித்து இருக்கோம்
அந்த வகையில் வெஜிடபிள் இட்லி என்பது ஒன்று

சர்க்கரை நோய் தாக்கம் உள்ளவர்களுக்கு மருத்துவர்
பரிந்துரைப்பது 2 இட்லி அதுக்கு மேல சாப்பிடாதீங்க
ஏன்னா அதுல அரிசி சேர்ந்திருக்கு . அவர்களுக்காகவே
புரதம் நிறைந்த பருப்பு வகைகள், காய்கறிகள் , மற்றும் சில
தாவர வகை சேர்த்து தயாரிக்கப்படுவது இந்த வெஜிடபிள் இட்லி


தேவையானவை -

உளுத்தம்பருப்பு 1 கப்
பயத்தம்பருப்பு    1 கப்
ரவை                       2 டீஸ்பூன்

காய்கறிகள் :-

கேரட் 1
பீன்ஸ் 1௦௦ கிராம்
அவரைக்காய் 50 கிராம்
கொத்தமல்லி தழை கொஞ்சம்
கருவேப்பிலை கொஞ்சம்
பொதினா கொஞ்சம்

சரி தேவை தெரிந்தது , எப்படி தயாரிப்பது






 

மேலே சொன்ன பருப்பு வகை இரண்டையும் தனி தனியே
2 to 3 மணிநேரம் ஊறவைக்கவும் , தனி தனியே மிக்சியில்
அரைத்து (நன்றாக நைசாக)விடவும் . அரைத்த பின்பு
2 மாவையும் ஒன்றாக கலந்து 2 டீஸ்பூன் ரவை கலந்து
தேவைக்கேற்ப உப்பு சேர்த்து ,தட்டு போட்டு மூடி வைத்துவிடவும் .




இதற்கிடையில் , மேலே சொன்ன காய்கறிகளை
நன்றாக பொடி பொடியாக நறுக்கி வைக்கவும்
(காய்கறிகள் உங்கள் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளவும்)
இதனுடன் கொஞ்சம் , கொத்தமல்லி, கருவேப்பிலை, பொதினா
சேர்த்து துண்டு துண்டாக நறுக்கி வைக்கவும் .



3 மணி நேரம் மாவு நன்றாக பதப்பட்டதும் ( பொங்கி வரலாம்)
அதனுடன் நறுக்கி வைத்த காய் , தழைகளை சேர்த்து ,

பிறகு மாவை நன்றாக காய் தழைகள் சேரும் வரை கலந்து
பொதுவாக இட்லி செய்யும் முறையை பின்பற்றவும் .






இட்லி தட்டில்  எண்ணை தடவி , இந்த மாவை ஊற்றி
ஆவியில் (குக்கரில்) 20 நிமிடம் வைத்து இறக்கி விடவும்





இறக்கி 10 நிமிடம் ஆனதும் குக்கரை திறந்ததும்
உங்கள் முகம் மலரும் , வண்ண வண்ண வெஜிடபிள்
இட்லி சுவைக்க தயார்





இதற்க்கு எந்தவிதமான சட்னியும் ஏற்றதே , கொஞ்சம் காரம்
அதிகமாக இருக்கட்டும் சட்னியில்.

சாம்பார் ஒரு நல்ல சைடு டிஷ் இதற்க்கு



இப்டி தட்டுல 4 இட்லி போட்டு , கொஞ்சம் சட்னி சாம்பார்
தனி தனியே கப்ல வெச்சு வீட்டில் இருக்கு பெரியவர் சிறுவர்
அனைவருக்கும் குடுத்து அசத்துங்க . பக்கத்ல இதமாதிரி 1 கப்
பில்டர் காபி வைக்க மறந்துடாதீங்க


என்னங்க எங்க அதுக்குள்ள எழுந்து போறீங்க ,
வெஜிடபிள் என்ன என்ன இருக்குன்னு பாக்க
போறீங்களா,  அப்ப உங்க வீட்ல இன்னைக்கு
மாலை டிபன் வெஜிடபிள் இட்லின்னு சொல்லுங்க
சபாஷ் ஜமாய்ங்க


வெரி வெரி டேஸ்டி வெஜிடபிள் இட்லி .....வெரிகுட் வெரிகுட்





Monday, October 29, 2012

காளிஃபிளவர் (Deep fry)

காளிஃபிளவர்  (Deep fry)

காளிஃபிளவர் பலவிதமான உணவுவகைகள் செய்து சாப்பிடலாம் , அவைகளில் மிகவும் அனைவராலும் விரும்பி சாப்பிடப்படுவது
 காளிஃபிளவர் (Deep fry) (Gopi Manchuriyan Dry)

  .

தேவை : காளிஃபிளவர்  -  1
காரப்பொடி                          -  2 டீஸ்பூன் 
மஞ்சள் பொடி                   -    சிட்டிகை 
கடலை மாவு                    -    2 டீஸ்பூன் 
சோள மாவு                       -    2 டீஸ்பூன் 
உப்பு                                      -    தேவைக்கேற்ப
எண்ணை                            -     200 ML




காளிஃபிளவர் நல்லா பூ பூவா கிள்ளி  எடுத்து  கொதிக்கும் தண்ணீரில் 
போட்டு நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும் 



ஒரு பாத்திரத்தில்  உப்பு, காரப்பொடி , சோள மாவு, கடலை மாவு  
தண்ணீர் தேவையான அளவு விட்டு நன்றாக ( பஜ்ஜிக்கு மாவு செய்வது போல்) 
தயார் செய்து கொள்ளவும்.

ஒரு வாணலியில் மிதமான சூட்டில் எண்ணை  விட்டு  கரைத்து வைத்துள்ள 
கலவையில் , சுத்தம் செய்து வைத்துள்ள காளிஃபிளவர் துண்டுகளை 
தோய்த்து  எண்ணையில் போட்டு பொன்வறுவலாக பொரித்து எடுக்கவும் 




இதை மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிடலாம் , எந்த உணவுக்கும் 
ஒரு பக்க உணவாக(Side Dish) எடுத்துக்கொள்ளலாம் 

Thursday, October 11, 2012

இடியாப்பம் - தேங்காய் பால்


இடியாப்பம்  - தேங்காய் பால்

தேவையான பொருட்கள்

புழுங்கல் அரிசி - 1/2 கிலோ
தேங்காய் துருவல் - 1/2 கப்
தேங்காய் (பால் செய்ய) - 1 தேங்காய்
சர்க்கரை - 1/4 கிலோ
ஏலக்காய் - 4
உப்பு - 1/4 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 1/4 தேக்கரண்டி

எப்படி செய்வது

 அரிசியை மூன்று மணி நேரம் ஊறவைக்கவும்.  ஊறிய அரிசியை நன்றாக கழுவி அதனுடன் துருவிய தேங்காயைப் போட்டு மிக்சியில் நைசாக அரைத்தெடுக்கவும்  மாவுடன் உப்பு சேர்த்து கலக்கவும். பிறகு இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, இட்லி தட்டில் நல்லெண்ணெய் தடவி இட்லியாக வார்க்கவும். இட்லியை சூடு ஆறுவதற்குள் இட்டியாப்ப குழலில் இட்டு பிழிந்து எடுக்கவும்.






தேங்காய்ப்பால் செய்வோம்

தேங்காய் துருவல் , சர்க்கரை  ஒன்றாக சேர்த்து , கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மிக்சியில் நைசாக அரைத்து , தேங்காய்ப்பால் பிழிந்து எடுக்கவும் (வடிகட்டி) பின் மீண்டும்  தேங்காய் சக்கையை மிக்சியில் போட்டு அரைத்து  பால் வடிகட்டி எடுக்கவும் , இந்த பாலுடன் , சிட்டிகை உப்பு , ஏலக்காய்
சேர்த்து  இடியப்பத்துடன்  பரிமாறவும் ,







இப்டி ஒரு இடியாப்பம் தேங்காய் பால் செஞ்சா , தலைல இடியே விழுந்த கூட நான் எழுந்திருக்க மாட்டேன்

சேமியா கிச்சடி



சேமியா கிச்சடி

தேவை

சேமியா  200 கிராம்

பெரிய வெங்காயம் 1 (துண்டு துண்டாக நறுக்கிக் கொள்ளவும் )
பச்சை மிளகார       2   (துண்டு துண்டாக நறுக்கிக் கொள்ளவும் )
காரட்                         1     (துண்டு துண்டாக நறுக்கிக் கொள்ளவும் )
மஞ்சள் போடி சிட்டிகை
உப்பு   தேவைக்கேற்ப




தாளிக்க:
கடலைப்பருப்பு  1 டீஸ்பூன்
கடுகு                    1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு     1 டீஸ்பூன்
இஞ்சி          1 துண்டு (துண்டு துண்டாக நறுக்கிக் கொள்ளவும்)
கருவேப்பிலை   2 கொத்து


அடுப்பில் வாணலியில்  2 டீஸ்பூன் எண்ணை  விட்டு , கடலைப்பருப்பு, கடுகு,
உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய், இஞ்சி துண்டு போட்டு வதக்கி பின் அதனுடன் , நறுக்கிய வெங்காயம், கரட்  போட்டு மேலும் நன்றாக வதக்கவும் , வெங்காயம் பொன்னிறமானதும் , 3 டம்பளர் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும் தண்ணீர் தளைத்து வந்ததும் அதில் சேமிய போட்டு  நன்றாக 5 நிமிடம்  கிளறவும்



அவ்வளவுதான் சேமியா கிச்சடி தயார் . சேமியாவிற்கு பதில் ரவை போட்டால்
ரவா கிச்சடி தயார்.




இதனுடன் , காரட்/ பீன்ஸ்/ உருளைக்கிழங்கு  என வேறு வேறு காய்கள்
சேர்த்து செய்தால் சுவை கூடும்.



இது சேமியா உப்புமா

Saturday, October 6, 2012

இட்லி உப்புமா

இட்லி உப்புமா

முதல் நாள் இரவு இட்லி மிச்சமா கவலையை விடுங்க
மறுநாள் காலை டிபன் சுலபம்.


தேவை  இட்லி 4
பெரிய வெங்காயம் 1
மிளகாய் தூள்  2 டீஸ்பூன்
உப்பு தேவைகேற்ப




தாளிக்க : ,கடுகு  உளுத்தம்பருப்பு


இட்லியை கைகளால் துண்டு துண்டா உதிர்த்து போடவும்
வெங்காயம் பொடி பொடியா நறுக்கி  வைக்கவும்

அடுப்பில் வாணலியில் சிறிது எண்ணை  விட்டு , கடுகு , உளுத்தம்பருப்பு
போட்டு தாளிக்கவும் , இதனுடன்  நறுக்கி வைத்த வெங்காயம் சேர்த்து
வதக்கவும் பிறகு உதிர்த்த இட்லி, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து  நன்றாக
கிளறவும் .



இதனுடன்  கருவேப்பிலை கொத்தமல்லி , அவரவர் சுவைக்கேற்ப
சேர்த்து சுவைக்கவும்

அவ்வளவுதான் இட்லி உப்புமா ரெடி


Thursday, October 4, 2012

காய்கறி வடை

காய்கறி வடை 

ஆமவடை, தொண்டி வடை, கீரைவடை , மசாலாவடை எப்படி , எவ்ளோ 
வடை செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க , ஆனா காய்கறி வடை செஞ்சு சாப்பிட்டு 
இருக்கீங்களா. வாரக்கடைசியில் வீட்டில் சில காய்கறிகள் மீதமாக 
இருக்கும் அதுவே உகந்த நேரம் , வாங் இப்ப காய்கறி வடை எப்டி செய்யறதுன்னு 
நாமும் தெரிந்து கொள்வோம்.


தேவையான பொருட்கள்

உளுந்தம்பருப்பு - 200 கிராம்
கடலை பருப்பு - 200 கிராம்
காய்கறிகள் - 300கிராம் (காரட், உருளை,பீன்ஸ் & கோஸ்பொடியாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் - 1 நறுக்கியது
இஞ்சி - துண்டு நறுக்கியது
மிளகாய் - 4
பெருங்காயம் - சிறிதளவு
கறிவேப்பிலை - பொடியாக நறுக்கியது
கொத்தமல்லி  - பொடியாக நறுக்கியது
எண்ணெய் - 1/2 லிட்டர்
உப்பு - தேவையான அளவு



பருப்பு ரெண்டும் சுமார் ஒரு  மணி நேரம் ஊறட்டும் 
மிக்சில கொஞ்சம் கொர, கொர பதத்தில் அறைச்சிடுங்க 

அரைத்த மாவில் கருவேப்பிலை, கொத்தமல்லி, வெங்காயம், நறுக்கி வைத்த 
காய்கறிகள், பெருங்காயம் (பொடி), உப்பு  சேர்த்து நல்லா கலந்து வைங்க 

அப்புறம் என்ன அடுப்பில் மிதான சூட்டில் குழிவான வாணலியில் எண்ணை 
வைத்து ,  ஒரு வாழை இல்லை துண்டு  , அல்லது பால் கவர் கையில் வைத்துக்கொண்டு 
இந்த மாவை சின்ன சின்ன வடைகளை தட்டி எண்ணையில் போட்டு பொரிச்சு 
எடுங்க ரெண்டு பக்கமும் நல்ல திருப்பி போட்டு எடுங்க 



சூடா சாப்டுங்க , 

தொட்டுக்கவா, அது உங்க இஷ்டம் நான் அப்டியே சாப்பிடுவேன் 
நீங்க வேணும்னா கொஞ்சம் கெட்சப் , இல்ல பிடித்தமான சட்னி 
செஞ்சு சாப்பிடுங்களேன்  

வித விதமான காய்கறிகளுடன் வித்தியாசமான வடை வேணுமா??? 

Tuesday, September 25, 2012

பிரட் உப்புமா (BREAD UPPUMA)

பிரட் உப்புமா (BREAD UPPUMA)   By:- Savithri Vasan



பிரட் வாங்குவோம் கொஞ்சம் மீந்து போகும் என்ன பண்ணலாம்

உப்புமா ஒரு நல்ல காலைநேர , மாலை நேர டிபன்
அதுவே பிரட் உப்புமாவ இருந்தா , அதேதான் ஐடியா



துண்டு செய்த பிரட்




தாளிக்க:-
வெங்காயம் 1
கடுகு ,
உளுத்தம் பருப்பு
மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை
கருவேப்பிலை
மிளகாய் வத்தல்/ பச்சை மிளகாய் - 2
உப்பு கலந்த தண்ணீர்





வாணலியில் / தவா  கொஞ்சம் எண்ணை
கடுகு , உளுத்தம் பருப்பு , ஏதாவது ஒரு வகை மிளகாய்
கருவேப்பிலை போட்டு தாளித்து அதில் துண்டு செய்த
பிரட் போட்டு , கிளருங்க , அதுல இந்த உப்ப்பு தண்ணி
கொஞ்சம் , கொஞ்சமா தெளித்து , கிளருங்க .





கிளு கிளுப்பான பிரட் உப்புமா ரெடிங்க


குறிப்பு:- இதுல தக்காளி சேர்க்கலாம் , 

Friday, September 21, 2012

காரடையான் நோன்பு அடை

காரடையான் நோன்பு அடை   BY:Savithi Vasan

இதுவும்  பெரும்பாலும் பண்டிகை ஒட்டி செய்யப்படும் பலகாரம்

மாசியும் பங்குனியும் கூடும் நேரம் செய்யப்படும் நோன்பிற்காக
செய்யப்படும் அடை இது.

இதில் வெல்ல அடை , உப்பு அடை என்று இரண்டுவகையான
அடைகள்

சரி பண்டிகை பற்றி தெரிந்து கொண்டோம்  , இனி செய்முறை அறிந்து
செய்து சுவைத்து மகிழ்வோம்

தேவையானவை :-

அரிசி ஊறவைத்து, நிழலாட உணர்த்தி , மிக்சியில் அரைத்து ,
அரைத்த மாவை சலித்து , அதை வாணலியில் போட்டு வறுத்து
எடுத்து வைக்கவும் .

முதலில் வெல்ல அடை :-

தேவையானவை:
அரிசிமாவு : 1 ஆழாக்கு
வெல்லம்   :  2 ஆழாக்கு
வெள்ளை காராமணி (50 கிராம்) முதல் நாள் இரவே ஊற வைத்து விடவும்
ஏலக்காய் : பொடி செய்து வைத்துக்கொள்ளவும்

செய்முறை:-

1 டம்பளர் தண்ணீர் விட்டு அதில் வெல்லம்  போட்டு கரைத்து , கொதிக்க வைத்து ,அழுக்கை அகற்றி சுத்தம் செய்து வைக்கவும் .

காராமணியை வேகவைத்து அதை வெல்லத் தண்ணீருடன் சேர்த்து
கொதிக்கவிடவும் , அதில் அரிசிமாவை போட்டு நன்றாக கிளறவும்
இதில் ஏலக்காய் பொடி சேர்க்கவும் .

மாவு கெட்டிப் பதத்தில் அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்

சூடு ஆறியவுடன் , சிறு சிறு அடைகளாக தட்டி , இட்லி தட்டில் வைத்து
ஆவியில் வைத்து எடுக்கவும் .




உப்பு  அடை :-

தேவையானவை :-
அரிசி மாவு 1 ஆழாக்கு
வெள்ளை காராமணி 50 கிராம்
தேங்காய் பல்லு பல்லாக நறுக்கியது
பச்சை மிளகாய்
வெத்த மிளகாய்
தாளிக்க "- கடுகு , உளுத்தம் பாப்பு

வாணலியில் எண்ணை  விட்டு , கடுகு, உளுத்தம் பருப்பு , மிளகாய் வத்தல்
பச்சை மிளகாய் ,  கருவேப்பிலை தாளித்து , 4 டம்பளர் தண்ணீர் விட்டு
வேகவைத்த காராமணி சேர்த்து , பல்லு பல்லாக நறுக்கிய தேங்காய் ,
தேவையான உப்பு போட்டு , தண்ணீர் கொதிவந்ததும் , அரிசிமாவை போட்டு
நன்றாக கிளறி அடுப்பில் இருந்து .

 சிறு சிறு அடைகளாக தட்டி இட்லி தட்டில்  வைத்து ஆவியில் வேகவைத்து
எடுக்கவும் .




பிறகு நோம்பு சம்பிரதாயங்கள் முடித்து




உருகாத வெண்ணையும் , ஓர்  அட்டையின் நோன்பும்
ஒருநாளும்  என்கணவன் எனைப்பிரியாதிருக்க

Thursday, September 20, 2012

திருவாதிரை களி

திருவாதிரை களி

ஆருத்திரா தரிசனம் அன்று மட்டுமே பெரும்பாலும் செய்யப்படும்
இந்த களி  சுவையில் சிறந்தது.

தேவையானவை:-

அரிசி 2 ஆழாக்கு
பயத்தம்பருப்பு 3/4 ஆழாக்கு
வெல்லம்  1/2 கிலோ
தேங்காய் துருவல் 1 மூடி
ஏலக்காய்   5
முந்திரி       10
நெய் 200 கிராம்



அரிசி , பயத்தம் பருப்பு இரண்டும் தனித்தனியாக வறுத்து , மிக்சியில்
தனித்தனியாக ரவை பதத்தில் பொடித்துக்கொள்ளவும் . இப்பொழுது
இரண்டும் ஒன்றாக சேர்க்கவும் .

வெல்லம்  சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும்


அடுப்பில் கெட்டியான பாத்திரம் ஏற்றி , அதில் வெல்லாம் கரைத்த
நீரை ஊற்றி அதில் தேங்காய் துருவல் சேர்த்து தண்ணீர் நன்றாக
கொதிவந்ததும்  பொடி செய்து வைத்துள்ள அரிசி + பயத்தம் பருப்பு
சேர்த்து நன்றாக கலந்து குக்கரில் வைத்து விடவும் .

நன்றாக 8 விசில் சத்தம் வரை அடுப்பில் வைத்து பிறகு , அடுப்பில்
இருந்து இறக்கிவிடவும் .

மேலே நெயில் முந்திரி பருப்பு வறுத்து போடவும் , ஏலக்காய் பொடி
செய்து போடவும் .

நெய் அதிகமாக விட்டு கிளறவும் - சுவை கூடும்

சுவையான திருவாதிரை களி  இதோ உங்களுக்காக



இதற்க்கு பிரத்தியேக கூட்டு ஓன்று உண்டு அதை 7 தான் கூட்டு
என்று அழைப்பார்கள் அதைப் பற்றி தனியாக பார்க்கலாம் 


பொதுவாக இதை 7 தான் கூட்டு என்று சொல்லுவார்கள்
ஆனால் நாம் போடக்கூடிய காய்களை பார்ப்போம்

உருளைக்கிழங்கு
சேப்பங்கிழங்கு
சேனைக்கிழங்கு
அவரைக்காய்
வாழைக்காய் (விருப்பம் இருந்தால் )
கொத்தவரங்காய்
பீன்ஸ்
கேரட்
பச்சை பட்டாணி
மொச்சை
பூசணிக்காய்
பரங்கிக்காய்
சர்க்கரைவள்ளிக்கிழங்கு
பெங்களூர் கத்தரிக்காய் (சௌ சௌ)

தேவையானவை
மேலே சொன்ன காய்கறிகள்
பருப்பு 2 கப் ( வேகவைத்தது)
புளித்தண்ணி கரைத்தது (4 கப்)

வறுத்து பொடி செய்ய தேவையானவை

கடலைப்பருப்பு
வரமிளகாய்
தேங்காய் துருவல்
தணியா 

வாணலியில் சிறிது எண்ணை விட்டு மேலே சொன்னவற்றை
தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும் , இதை மிக்சியில்
போட்டு பொடி செய்து வைத்துக்கொள்ளவும்

நறுக்கிய காய்களை கொஞ்சம் உப்பு சேர்த்து
தண்ணீர்விட்டு அடுப்பில் நன்றாக வேகவைக்கவும்

காய்கள் வெந்த நிலையில் கரைத்து வைத்த
புளிக்கரைசலை சேர்த்து உப்பு , பெருங்காயம்
சேர்த்து , அதனுடன் செய்து வைத்துள்ள பொடியை
சேர்த்து , வேகவைத்து தயார் நிலையில் உள்ள
பருப்பை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து
நன்றாக கொதிக்க விடவும் (கொதிக்கும் நேரம் அவரவர்
சுவைக்கும் திறனை பொருத்தது)

கடுகு உளுத்தம் பருப்பு தாளிக்கவும் , கருவேப்பிலை
போட்டு விடவும் .

அடுப்பில் இருந்து இறக்கி , செய்துவைத்த களி , கூட்டை
இறைவனுக்கு படைத்து , சுவைத்தால் சுவை கூடும்