Showing posts with label துகையல் வகைகள். Show all posts
Showing posts with label துகையல் வகைகள். Show all posts

Tuesday, November 19, 2013

திடீர் துகையல்

திடீர் துகையல் பொடி by Velammal Gurusamy 




அன்றாட அவசர உலகில் எவ்வளவோ 
திடீர் திடீர் பொருட்கள் வந்துவிட்டன 
உணவை சேர்த்துதான் சொல்கின்றேன் 
அந்த திடீர் உணவு வகைகளை கடைகளில் 
வாங்கி செய்து ருசிப்பதை விட அவற்றை 
நாமே வீட்டில் தயார் செய்து வைத்துக்கொண்டால் 
பயமின்றி உபயோகப்படுத்தலாம் 

ஒரு துகையல் அரைக்க வேண்டும் என்றால் 
உடனே , அதற்க்கு வேண்டிய பொருட்களை 
வறுத்து மிசியில் அரைத்து செய்யவேண்டும்.
மின்சாரம் தட்டுப்பாடாக இருக்கும் காலமிது 
காஸ் சிலிண்டர் 12லிருந்து 9 ஆகா குறைக்கப்பட்ட 
காலம் .



ஒரு கப் மிளகாய் வத்தல் ,
ஒரு கப் தோலோடு உடைத்த உளுத்தம் பருப்பு ,
ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு ,
ஒரு டீஸ்பூன் பெருங்காயப்பொடி ,
ஒருகைப்பிடி கறிவேப்பிலை .

இவற்றை எண்ணெய் விட்டு நன்கு சிவக்க வறுத்து மிக்சியில்பொடித்து வைத்துக்கொள்ளுங்கள் .கொரகொரப்பாக இருந்தாலும் பரவாயில்லை . 
இதை வைத்துக்கொண்டு நீங்கள் எந்ததுகையல் விரும்பினாலும் 
பண்ணலாம்.

இதில் பலவிதங்கள் இருக்கு.
 
பூண்டு ,வெங்காயம் ,
இஞ்சி மஞ்சள் ,
மல்லி ,
புதினா ,
மேத்தி ,
கத்திரி,
காபேஜ்,
தக்காளி,
காரட்,

மாங்காய் தோல்,
சௌவ்சௌவ் தோல் 
பீர்க்கங்காய் ஆரஞ்சு இவற்றிந்தோல் ,இவற்றையெல்லாம் எண்ணெய் 
விட்டு வதக்கி ,தக்காளி தவிர மற்றதிற்கெல்லாம் புளிசேர்த்து அரைக்கவேண்டும் .சிலகாரமாகவும் சில இனிப்பாகவும் உள்ளவை .அதற்கு ஏற்றால்போல் பொடியின் அளவை கூட்டி குறைத்துக் கொள்ளலாம் .

முதலில் பொடியை குறைவாக போட்டு அரைத்து டேஸ்ட் பார்த்து விட்டு பிறகு பொடியின் அளவை கூட்டுங்கள் .

இன்னும் லெப்ட் ஓவர் சமைத்த காய்களிலும் பண்ணலாம்.
பண்ணும் முறை கரெக்ட்டாக வந்துவிட்டால் நீங்கள் தான் துகையல் சாம்ப்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி.

ரயில் மலை காடுபகுதியில் ஓடும்போது மட்டுமே கத்தும் 
ஸ்டேஷன் அருகில் வந்தவுடன் சூப்பராக விசில் கொடுக்கும்.
ரயிலின் உள்ளிருப்பவர்களுக்கு ஊருக்கு வந்துவிட்டோம் 
என்று சந்தோஷம். ஸ்டேஷனில் இருப்போருக்கு ஊருக்குபோக 
ரயில் வந்ததில் சந்தோஷம். 

சந்தோஷம் உங்கள்  செயலிலேயே இருக்கு .என்ஜாய் .

ஒரு துகையல் அரைக்க வேண்டும் என்றால் 
உடனே , அதற்க்கு வேண்டிய பொருட்களை 
வறுத்து மிசியில் அரைத்து செய்யவேண்டும்.
மின்சாரம் தட்டுப்பாடாக இருக்கும் காலமிது 
காஸ் சிலிண்டர் 12லிருந்து 9 ஆகா குறைக்கப்பட்ட 
காலம் .


இது போன்ற ஒரு பொடி நம் கைவசம் இருந்தால் 
இவை கொஞ்சம் மிச்சப்பட வாய்ப்பு உள்ளது 
நாமும் கொஞ்சம் செஞ்சுதான் பார்ப்போமே 


Sunday, September 9, 2012

வெங்காய தொக்கு

வெங்காய தொக்கு

பெரிய வெங்காயம் 1/2 கிலோ





வெத்த மிளகாய்        100 கிராம்
புளி                                    25 கிராம்
உப்பு                                தேவைக்கேற்ப


வெங்காயம் தோல் உரித்து , பொடி பொடியாக நறுக்கி
மிளகாய் வத்தல் , உப்பு , புளி  இவை அனைத்தும்
ஒன்றாக போட்டு மிசியில் அரைக்கவும்




ஒரு வாணலியில் நிறைய(100 grm) எண்ணை விட்டு
கடுகு தாளித்து , அரைத்த வெங்காய விழுதை
போட்டு நன்றாக 15 நிமிடம் கிளறவும்

இப்பொழுது  சுவையான நாள் பட உழைக்ககூடிய
வெங்காய தொக்கு  தயார்.



சாதாரண துகையல் 2 நாட்களுக்கு மேல் தாங்காது

இவ்வாறு செய்யப்படும் தொக்கு குறைந்தது
ஒரு மாத காலம் வரை உபயோகப்படுத்த முடியும்


**ஷெல்ப்  லைப் : 1 மாதம் ---** Expiry Date 1 month from the Date of Preparation 


பொதினா (புதினா) மல்லி துகையல்

                                 பொதினா (புதினா) மல்லி துகையல்


புதினா உடலுக்கு நல்ல ரத்த ஓட்டத்தை கொடுக்கும்
ஒரு மருத்துவகுணம் வாய்ந்த  தாவரம்.



புதினாவை சுத்தம் செய்து ஆய்ந்து , வாணலியில்
என்னை விட்டு வதக்கி வைத்துக்கொள்ளவும் .

கொத்தமல்லி சுத்தம் செய்து பச்சையாக அப்படியே சேர்க்கவும்

உளுத்தம் பருப்பு , பச்சை மிளகாய் , வதக்கி வைக்கவும்

முதலில் மிக்சியில் பச்சை மிளகாய், பொதினா , கொத்தமல்லி
கொஞ்சம் புளி,உப்பு  சேர்த்து மைய அரைக்கவும் , இறுதியில்
வறுத்த உளுத்தம் பருப்பை போட்டு ஒரு சுற்று மிகயில்
அரைத்து எடுக்கவும்

கடுகு உளுத்தம் பருப்பு தாளித்தால் நலம் !!!



சுவையான பொதினா , மல்லி தொகையால் தயார்

இட்லி, தோசை,  இவைகளுக்கு பக்க பலமான
துகையல்

ஏங்க சாதம் போட்டு , இந்த தொகையல போட்டு
பிசைஞ்சு சாப்பிட்டா வலிக்குமா ?

நல்லா இருக்கும் செஞ்சு சாப்டுங்க , உடம்புக்கு
நல்லது




(புதிதான) --  பொதினா, கொத்தமல்லி கூட்டணி துகையல்










Friday, September 7, 2012

கருவேப்பிலை துகையல்



கருவேப்பிலை துகையல் (தொவையல் )  By: Savithri Vasan



தேவையானவை:-
கருவேப்பிலை புதியதாக 




இஞ்சி .....................ஒரு துண்டு 
வெத்தமிளகாய்--5 
உப்பு ........................தேவைக்கேற்ப 
புளி ..........................கொட்டை பாக்கு அளவு 
பெருங்காயம் ..... சிறிது 
உளுத்தம் பருப்பு. 2 டீஸ்பூன்  

மிளகாய் மட்டும் தனியாக வறுத்துக்கொள்ளவும் 

உளுத்தம் பருப்பு தனியாக வறுத்து மிக்சியில் ஓன்று 
இரண்டாக உடைத்து வைத்துக்கொள்ளவும் 


மிக்சியில் கருவேப்பிலை, புளி , உப்பு , பெருங்காயம் ,இஞ்சி 
மிளகாய் வற்றல் போட்டு நன்றாக மசிய அரைத்துக்கொள்ளவும் 
இதோடு பொடி  செய்து வைத்த உளுத்தம் பருப்பு கலந்து கொள்ளவும் 

கடுகு தாளித்து போடவும் 



கருவேப்பிலை துகையல் தயார் 

எத்தனை நாள் எத்தனை முறை கருவேப்பிலை துகையல் 
அரைத்தாலும் , பிதுர்க்கள் தினத்தன்று அரைக்கும் துகையலின்  
சுவையே அலாதி .......இதை மறுத்துக் கூற எவரேனும் உண்டோ ???



பிதுர்க்களின் ப்ரிதி கருவேப்பிலை துகையல் 

நமக்கும் அதுவே , அதுவே 











தேங்காய் துகையல்

தேங்காய் துகையல்  -  By:- Savithri Vasan

தேங்காய் துருவல் : 1 கப்
வெத்த  மிளகாய் :      5
பச்சை மிளகாய்   :      3
பெருங்காயம் : சிறிது
உப்பு ; தேவைக்கேற்ப
புளி  : கொட்டைப்பாக்கு அளவு




தாளிக்க :- கடுகு , உளுத்தம் பருப்பு




வாணலியில் சிறிது என்னை  விட்டு , மிளகாய், பெருங்காயம்
இரண்டையும் வறுத்துக்கொண்டு  அதை மிக்சியில் போட்டு
அரைத்து அதனுடன் தேங்காய் , உப்பு , புளி சேர்த்து நன்றாக
அரைத்துக்கொள்ளவும் .




தேங்காய் துகையல் ரெடி - கடுகு உளுத்தம் பருப்பு
தாளித்து பரிமாறவும்


சாதம் சூடாக போட்டுக்கொண்டு , ஒரு முட்டை சுட்ட எண்ணை
விட்டு பிசைந்து சாப்பிடுங்கள் , சுகத்தை கண்டு சுவைத்து
மகிழுங்கள். இதற்க்கு தொட்டுக்கொள்ள  பொரிச்ச குழம்பு
எல்லா வகையான பச்சடிகள் , மோர் குழம்பு, பச்சை மோர்குழம்பு
இப்படி பல பல உண்டு .

சுட்ட அப்பளம் , சுவையை சொல்லி மாளாது

தேங்கா துகையலுக்கு  ஏங்காதார் உண்டோ !!!







Thursday, September 6, 2012

பருப்பு துகையல்

பருப்பு துகையல்


தேவை:
துவரம் பருப்பு           2 கப்
தேங்காய் துருவல் 1 கப்
மிளகாய்வற்றல்      5
உப்பு : தேவைக்கேற்ப



வாணலியில் கொஞ்சம் எண்ணை விட்டு
துவரம்பருப்பு , மிளகாய் வற்றல் வறுத்துக்கொள்ளவும்

மிக்சியில்  தேங்காய் , மிளகாய் வற்றல் உப்பு , வறுத்த  பருப்பு
சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்





அவ்ளவுதாங்க  ரொம்ப சிம்பிள், வேலை முடிஞ்சுது
சாப்பிட வேண்டியதுதான் .


சாப்டிங்களா , , சாதம் போட்டு , நெய் போட்டு, தொட்டுக்க
மோர் குழம்பு, வெத்தக் குழம்பு , சீரக ரசம்  ....... எல்லாம்
நல்ல இருக்கும் இது கூட ,

நாளைக்கு செஞ்சு பாக்கலாமா


விரும்பி சுவைக்கும் துகையல் , பருப்புத் துகையல்



Monday, September 3, 2012

மிளகாய் தொக்கு


மிளகாய் தொக்கு...........By:- Savithri Vasan

இது வெறும் மிளகாய்ல மட்டும் செய்யறது
கொஞ்சம் காரம் ஆகாதவங்க பாத்து உபயோகிங்க
சமையல் குறிப்பு சொல்லறது ஈசி ஆனா அத
செஞ்சு சாப்பிட்டு விட்டு அவஸ்தை பட்டா
அது மகா பாவம் , ஆகவே எச்சரிகைகள் அவசியம்
 மிளகாய்   .........................10
பெருங்காயம் தேவைக்கேற்ப
உப்பு தேவைக்கேற்ப
கொட்டை பாக்கு  அளவு புளி

வாணலியில் கொஞ்சமா என்னைவிட்டு
பெருங்காயம் வறுத்து , மிளகாயை வதக்கி
எடுக்கவும்.

மிக்சியில் , மிளகாய் , பெருங்காயம் , உப்பு
புளி சேர்த்து நல்லா , நைசா அறைச்சிடுங்க
இப்ப மிளகாய் தொகையால் ரெடி
 இது நாம ஒரு மாசம் வரையிலும் வச்சு
உபயோகப்படுத்த இன்னமொரு ஸ்டெப்
இருக்கு.

மீண்டும் வாணலியில் கொஞ்சம் அதிகமா
(5- ஸ்பூன் ) எண்ணை விட்டுக்கோங்க
அதுல கடுகு தாளிச்சு, இந்த அரைத்த துகையலை 
போட்டு நல்லா கிளருங்க (பத்து (10) நிமிஷம்)

***கிளறும்போது மிளகாய் நெடி அதிகமாக இருக்கும் 
எச்சரிக்கை தேவை, சமையலறை கற்றோற்ற்மாக 
இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும் 


SHELF LIFE-
இதனுடைய உபயோகிக்கும் காலம்
குறைந்தது 15-நாள் முதல் ஒரு மாதம் வரை.

கொஞ்சம் சூடா சாதம் , ஒரு ஸ்பூன் துகையல் , ஒரு முட்டை 
நெய்,  பிசஞ்சு சாப்ட்டு பாருங்க..... சுவை என்னன்னு சொல்லுங்க 

தோசைக்கு சைடு டிஷ் , தயிர் சாதத்துக்கு , ஹம்  சூபர் 

****பின்குறிப்பு இல்லை இது , பின்விளைவுகள் பற்றிய எச்சரிக்கை 
         காரம் ஒதுக்காதவங்க நாக்க கட்டுப்படுத்த முடியாம 
         சாப்பிட்டுவிட்டு , என்ன திட்டாதீங்க , விளக்கெண்னைக்கு 
         வேலை வைக்காதீங்க , விளக்கமா சொல்ல முடியாது 

பிடிகரனை துகையல்

பிடிகரனை துகையல் By: Savithri Vasan

வாழ்க்கையில் பிடிப்பில்லாதவன் கூட 
பிடிகரனை சாப்பாட்டை ஒரு பிடி பிடிப்பான் அப்டீன்னா 
பார்த்துக்குங்களேன் ..........  நாமும் ஒரு பிடி பிடிப்போமா ???




பிடிகரனை 8 ரெண்டு துண்டா
வெட்டி அடுப்பில் வேகவைக்கவும்
வெந்ததும் , தோல் உரித்து வைக்கவும்

பச்சைமிளகா- 4
நீட்டு மிளகா 6
(கொட்டைபாக்கு அளவு) புளி, 
கொஞ்சம் பெருங்காயம் 

இவை அனைத்தும் ஒன்றன்
பின் ஒன்றா போட்டு வதக்கி வைத்துக்கொள்ளவும்

மிக்சியில், வதக்கிய வற்றை போட்டு உப்பு சேர்த்து
அரைக்கவும் பிறகு அதனுடன் உரித்த
பிடிகரனை போட்டு சிறிதுநேரம் அரைத்து
எடுக்கவும்

கடுகு உளுத்தம்பருப்பு தாளிக்கவும்

துகையல் தயார் , சாப்பிட்டு சுவைக்கவும் .

எங்க சார் போறீங்க  வாழ்க்கையில் பிடிப்பு வந்திடுச்சா ? அட ஆண்டவா 
பிடிகரனைக்கு இவ்ளோ சக்தியா 

நம்ம வீட்ல பிடிகரனை வாங்கி இருக்காங்களா பாக்கலாம் !!!!

வல்லாரை துகையல் /சட்னி


வல்லாரை கீரையில் வக்கனைகள் 

கூட்டு, பொறியல், துகையல் இது போன்றவை 
செய்யலாம் , உண்மையிலேயே உடலுக்கு 
நல்லது, நினைவாற்றலை அதிகப்படுத்தும் 





 முதலில் துகையல் /சட்னி :- By:- Savithri Vasan
---------------------------------------
 அடுப்பில் வாணலி மிதமான சூட்டில்

ஒரு முட்டை எண்ணை விட்டு ,

பெருங்காயம் பொரித்து,

உளுத்தம் பருப்பு போட்டு,

சின்ன வெங்காயம்,

துருவிய தேங்காய் ,போட்டு வதக்கி ,

பிறகு கீரையையும் போட்டு வதக்கி

இறக்கி வைக்கவும்.

 சூடு சற்று ஆறியதும் , முதலில் புளி, உப்பு
பெருங்காயம் , வெத்த மிளகாய் ,தேங்காய் துருவல்
உளுத்தம் பருப்பு போட்டு அரைக்கவும்

பிறகு கீரையை சேர்த்து அரைத்துக்கொள்ளவும்

தேவைபட்டால் வெல்லம் சேர்க்கவும்

இப்பொழுது சுவையான துகையல் தயார் , என்ன சுவைப்போமா
சுகம் பெறுவோமா

நல்லாரை காண்பதும் நன்று அவர் சொல் கேட்பதும் நன்று
வல்லாரை உண்பது அதனினும் நன்று