Showing posts with label கதையல்ல நிஜம். Show all posts
Showing posts with label கதையல்ல நிஜம். Show all posts

Saturday, October 13, 2012

அம்மா கூபிடராள் எல்லாரும் சாப்பிட வாங்கோ

அம்மா கூபிடராள் எல்லாரும் சாப்பிட வாங்கோ


எல்லாரும் சாப்பிட வாங்கோ மணி 8.00 ஆச்சு


எனக்கு பசிக்கலம்மா , இது அக்கா , 

அம்மா
எனக்கு சாதம் வேண்டாம் இது அண்ணா


சீக்கிரம் சாப்பிட வாங்க .... நான் கைல பிசைஞ்சு போடறேன் !!!


அம்மாவின் இரண்டாவது அழைப்பு


அடுத்த அழைப்பு திட்டா மாறுவதற்குள் நான் எழுந்தேன்
தட்டை எடுத்துக்கொண்டு


வேண்டாம்ட , நானே கைல பிசைஞ்சு போட்டுடறேன்


அம்மா கைல பிசைஞ்சு போடறேன்னு சொன்னா ரெண்டு
காரணம் இருக்கும் , ஒன்னு கார்த்தால சமைச்சது நிறைய
அப்டியே இருக்கும் யாரும் சரியா சாப்பிட்டு இருக்க மாட்டா


இல்லைன்னா


ஏதாவது ஒன்னு வீட்ல குறைவா இருக்கும்


பெரும்பாலும் சாயந்திரம் ஸ்கூல் விட்டு வந்து குழம்பு
சாதம் சாப்பிட்டு விடுவதால்
இரவு நேரங்களில் மோர் சாதம் தான்
சாப்பிடுவோம் ,


அப்பா இன்னைக்கு வீட்ல மோர் ஷார்டேஜ் , அதுதான் அம்மா
கைல போடறா போல


சரி இந்த மோர் பற்றாக்குறையை அம்மா எப்டி சரி செய்யறா ?


சாதம் வடிக்க அரிசி களையும் போது , முதல்ல கலைஞ்ச
தண்ணிய கொட்டிடுவா, ரெண்டாவது தடவை களையும் போது
அந்த தண்ணிய ஒரு பாத்திரத்தில் விட்டு வைப்பா


அப்புறம் அந்த தண்ணில , ஆத்துல இருக்கற கொஞ்சம் மோரை
விட்டு அதனுடன் கொஞ்சம் எலுமிச்சை பழம் பிழிஞ்சு
உப்பு போட்டு , கருவேப்பிலை கிள்ளி போட்டு வச்சிடுவா


சாதத்தில் அந்த மோரை விட்டு பிசைஞ்சு கைல உருண்டையா
போட்டு அத நடுவுல குழிச்சு சாம்பார் / வெத்தக்குழம்பு
விட்டு அஞ்சு விரலும் உள்ள போற அளவு உறிஞ்சு சாப்பிடும்
சுகமே தனி.


அதுவே அம்மாவின் கைமணம் , அம்மா நீ எங்கே என் நினைவுகள் அங்கே

Friday, September 7, 2012

பாட்டி சித்தப்பாவுக்கு பிசைந்து வைத்திருக்கும் சாம்பார் சாதம் யாருக்கு???

கதையல்ல நிஜம் .......1


இரவு மணி எட்டு , அப்பா வந்துட்டா
எல்லாரும் சாப்பிட வாங்கோ


இதோ வரேம்மா எல்லாரும் தட்டை
அலம்பி கொண்டுபோனோம் , அம்மா
சாதம் போட்டு குழம்பு, (சிலர் பருப்புபொடி )
சாதம் , அடுத்தது மோர் சாதம் எல்லாரும்
சாப்டாச்சு .

இனி அடுத்தது படுக்கை தான்


இருந்தாலும் யாரும் தூங்க வில்லை
ஏதேதோ கதை , பேச்சு தூக்கம் வரவில்லை
தூங்க விரும்ப வில்லை


மணி ஒன்பது , ஒன்பது அரை  ஒன்பதே முக்கால்
முட்கள் நகர மறுக்கின்றதோ, அப்பா மணி 10.00
பாட்டி மணி 10.30 , ஹம்  பாட்டியிடம் இருந்து 
பதில் இல்லை !!!!



ஹ்ம் யாரும் தூங்க வில்லை ,
காரணம் என்ன? காரணம் என்ன ??


பாட்டி சித்தப்பாவுக்க் பிசைந்து வைத்திருக்கும் 
சாம்பார்
சாதம் யாருக்கு ? கிடைக்கும் என்ற
கேள்விக்குறி


பாட்டி இன்னும் சித்தப்பா வரலை


வருவாண்டா நீ தூங்கு


.மணி 10 .30

பாட்டி இன்னும் சித்தப்பா வரலை 



வருவாண்டா ...... இது மீண்டும் பாட்டி


பாட்டி மணி பதினொன்னு
சரிடா எடுத்து நீங்க சாப்பிடுங்கோ


அப்பா சித்தப்பா இன்னைக்கு வரல
பாட்டி பெசஞ்சு வச்ச சாம்பார் சாதம்
நமக்குதான் , நாங்க எல்லாரும்
போட்டி போட்டுண்டு சாப்பிட்டு முடிப்போம்


டொக்... டொக்... டொக் ....
கதவு தட்டப்படும் ஓசை


யாரு
நான்தான் மகாலிங்கம்


கடங்காரா இப்பதான் வரதா ???
உனக்கு வச்ச சாதத்த இவா எல்லாம்
இப்பதான் சாப்டா


இருக்கட்டும்மா நான் 
சாப்டுட்டுத்தான் வந்தேன் ............இது சித்தப்பா


இந்த சாம்பார் சாதத்தின் மகிமை , அனுபவித்தவர்கள்
மட்டுமே உணரமுடியும்,


ஆம் என் பாட்டியின் கைமணம்