Showing posts with label கூட்டு வகைகள். Show all posts
Showing posts with label கூட்டு வகைகள். Show all posts

Thursday, October 11, 2012

பீட்ரூட் தேங்காய் ஜீரகம் அரைச்சு விட்ட கூட்டு




பீட்ரூட் தேங்காய் ஜீரகம் அரைச்சு விட்ட கூட்டு  


பீட்ரூட் , காய், சாலட் , அல்வா, ஜூஸ் , இப்டி எவ்ளவோ சாபிடறோம் 

இப்ப பீட்ரூட் கூட்டு செஞ்சு சாப்பிடலாம் 





தேவை:

பீட்ரூட் 2 

பயத்தம்பருப்பு  2 கப் 
தேங்காய் துருவல் 
உப்பு  தேவைக்கேற்ப 
ஜிரகம்        2 டீஸ்பூன் 
பச்சை மிளகாய்   4 

தாளிக்க:-  கடுகு , உளுத்தம் பருப்பு, வரமிளகாய் 

விழுது அரைக்க:-  தேங்காய் துருவல், ஜீரகம், பச்சைமிளகாய்  மிக்சியில் போட்டு 
                                விழுதாக அரைத்து வைத்துக்கொள்ளவும் 


பயத்தம் பருப்பை வறுத்து வேகவைத்துக்கொள்ளவும் 



பீட்ரூட் சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும் 

வெந்த பருப்பில் பீட்ரூட் போட்டு , உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும் பிறகு இதனுடன் 
அரைத்த விழுதை போட்டு மேலும் 5 நிமிடம் கொதிக்க வைக்கவும் . 






பிறகு கடுகு உளுத்தம் பருப்பு , வரமிளகாய் தாளிக்கவும் . கருவேப்பிலை சேர்க்கவும் 

Saturday, October 6, 2012

முருங்கைக்கீரை மசியல்

முருங்கைக்கீரை மசியல்   By: Savithri Vasan


முருங்கைக் கீரை  ஆய்ந்து அலம்பி சுத்தம் செய்து
வைத்துக்கொள்ளவும்


தேவை;

முருங்கைக்கீரை  2 கப்
கொஞ்சம் வேகவைத்த பருப்பு (துவரம்பருப்பு அல்லது பயத்தம் பருப்பு)
கொஞ்சம் பெருங்காயம்
உப்பு  தேவைக்கேற்ப

விழுது அரைக்கதேவையானவை :-

தேங்காய் துருவல் 1/2 கப்
வெதத மிளகாய்       3
சீரகம்                             1 டீஸ்பூன்

இவற்றை மிக்சியில் நன்றாக கொஞ்சம் தண்ணி விட்டு கெட்டியாக
விழுதாக அரைத்துக்க்ள்ளவும் .


கீரையை ஒரு பாத்திரத்த்தில் போட்டு வேகவிடவும்
குழைந்து வந்ததும் , இதில் வேகவைத்த பருப்பை போட்டு ,
உப்பு, பெருங்காயம் சேர்த்து , அரைத்த விழுதை போட்டு 10 நிமிடம்
மேலும் வேகவிடவும் .




அடுப்பி இருந்து இறக்கி , கடுகு , உளுத்தம்பருப்பு  தாளிக்கவும்

சூடாக எடுத்து பரிமாறவும் , சாதத்துடனும் சேர்த்து  சாப்பிடலாம்



c




Sunday, September 16, 2012

பரங்கிக்காய் பால் கூட்டு

பரங்கிக்காய் பால் கூட்டு

பூசணி வகையில் இதுவும் ஓன்று , வெள்ளையாய் இருப்பதை
கல்யாண பூசணி என்பார்கள் , பரங்கிக்காயை மஞ்சள் பூசணி
என்பார்கள் .

இதில் காய், துகையல், குழம்பு என பலவகையான சமையல்
செய்து மகிழலாம் . நாம் இப்போது செய்து பழகப்போவது
பால் கூட்டு.


தேவையானவை -

பரங்கிக்காய் 1/4 கிலோ
பால்                  1 கப்
துருவிய வெல்லம்  1 கப்
தேங்காய் துருவல் /தேங்காய் பால் 1 கப்
மஞ்சள் பொடி   சிட்டிகை

தாளிக்க :-
கடுகு , உளுத்தம் பருப்பு ,1 மிளகாய் வற்றல்


பரங்கிக்காய் வாங்கி சுத்தம் செய்து தோல் சீவி சிறிது சிறிதாக
நறுக்கி வைத்துக்கொள்ளவும் இதனுடன் 2 டம்பளர் தண்ணீர்
சேர்த்து வேக வைக்கவும் .



ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் விட்டு அதனுடன்
அரிசிமாவு கலந்து வைக்கவும் .





காய் நன்றாக வெந்ததும் அதில் அரிசிமாவு கலந்த தண்ணீரை
சேர்த்து , கொஞ்சம் பால் விட்டு , கொஞ்சம் மஞ்சள் பொடி சேர்த்து
துருவிய வெல்லம்  சேர்த்து இன்னும் கொஞ்சநேரம் வேக விடவும்
பிறகு துருவிய தேங்காய் அல்லது தேங்காய் பால் சேர்த்து
மிகவும் இறுகி இருந்தால் கொஞ்சம் நீர்சேர்த்து இளக்கவும் .

சுவையான பரங்கிக்காய் பால் கூட்டு தயார் ஆகிவிட்டது




அடுப்பில் இருந்து இறக்கி , இதில் கடுகு உளுத்தம் பருப்பு
மிளகாய் வற்றல் தாளிக்கவும்


  கூட்டத்த கூட்டுங்க ; பால் கூட்ட சாப்பிடுங்க 

Friday, September 14, 2012

வெந்தயக்கீரை கூட்டு

பருப்பு வெந்தயக்கீரை கூட்டு

பொதுவாகவே கீரைவகைகள் உடலுக்கு நல்லது
வயிற்றிற்கு மிகவும் நல்லது , எளிதில் ஜீரணிக்க
உதவும் (இரவில் கீரை சாப்பிடுவதை தவிர்க்கவும் )


தேவை: வெந்தயக்கீரை 1 கட்டு





கடலைப்பருப்பு                   1 கப்
வெங்காயம் (பெரியது)     2
குழம்பு பொடி                        1 ஸ்பூன்
மஞ்சள் தூள்                          1 ஸ்பூன்
ஜீரகம்                                       கொஞ்சம்
உப்பு                                          தேவைக்கேற்ப
எலுமிச்சை சாறு                கொஞ்சம்
தளிக்க :                                  கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல்



பருப்பு வேகவைங்க , அதில் கீரையை போடி பொடியாக நறுக்கி போட்டு
வெங்காயம் சேர்த்து , குழம்பு பொடி சேர்த்து, மஞ்சள் தூள் மணக்க
ஜீரகம் கசக்கி போடுங்கள் , உப்பு தேவைக்கேற்ப சேர்த்து , தண்ணீர் சேர்க்காமல் அடுப்பில் கொதிக்க விடுங்கள் , கொஞ்சம் கெட்டியான
பதத்தில் , அடுப்பில் இருந்து இறக்கி

கடுகு உளுத்தம்பருப்பு , மிளகாய் வற்றல் தாளித்து , சூடு ஆறியபின் எலுமிச்சை சாறு சேர்க்கவும்




சுவையை அனுபவித்தவரே கூறமுடியும்

வெந்தயக்கீரையும் ,  வெந்தயக்குழம்பும் , நெஞ்சை அள்ளும் சுகம்

Wednesday, September 5, 2012

கூட்டணி கூட்டு

பெங்களூர் கத்தரிக்காய் கூட்டணி கூட்டு :- By:- Savithri Vasan
(துவரம் பருப்பு - கடலைப்பருப்பு)

                                        பெங்களூர் கத்தரிக்காய் ஒன்று



பருப்பை வேக வைங்க (துவரம் பருப்பு & கடலைப்பருப்பு)
காய் சிறிது சிறிதாக நறுக்குங்க
புளி கரைத்து வைத்துக் கொள்ளுங்கள்

பாத்திரத்தில்  காயை போட்டு , புளி கரைசலை விட்டு
2 ஸ்பூன் குழம்பு பொடி போட்டு , பெருங்காயம் , உப்பு
சேர்த்து  அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்

பருப்பு வெந்ததும், அதை கொதிக்கும் குழம்பில் விட்டு
ஒரு 5 நிமிடம் கொதிக்க விடவும் .

கடுகு , உளுத்தம் பருப்பு தாளித்து , கருவேப்பிலை சேர்த்து
தாளிக்கவும்



அவ்ளவுதான் கூட்டணி கூட்டு ரெடி தட்ட போட்டு சாப்டுங்க

ஆனா இதுக்கு கொஞ்சம் தேங்காய் துருவல்
வறுத்து போட்டால் சுவை கூடும் .

இல்லை ஒரு ஸ்பெஷல் பொடி  ஒன்னு இருக்கு
அதை போட்டால் , இன்னமும் சுவை கூடும்

இதப் படிச்சுட்டு அந்த பொடி என்னன்னு தெரிஞ்சுக்கணும்னா
எனக்கு எழுதுங்க , இல்லை கமென்ட் போடுங்க , நான் சொல்லறேன் !!!!

மாறிடும் மனித கூட்டணி , மாறாதது .......சமையல் கூட்டணி
மணக்க வைக்கும்  பெங்களூர் கத்தரிக்காய் கூட்டணி கூட்டு