Showing posts with label காஞ்சி மகா பெரியவா. Show all posts
Showing posts with label காஞ்சி மகா பெரியவா. Show all posts

Thursday, December 26, 2013

வேதபுரி மாமா குட்டிக் கரணம் போட்ட காரணம் தெரியுமா !!!



வேதபுரி மாமா குட்டிக் கரணம் போட்ட
காரணம் தெரியுமா !!!

தகவல்: ஸ்ரீ ஹரிஹரன்




மஹா பெரியவா தினமும் விடியற்காலை மூன்று
மணிக்கெல்லாம் எழுந்து ஒரு மணி ஜபத்தை
முடித்துக் கொண்டு ஸ்நானம், பூஜையை செய்வார்கள்.

ஸ்ரீ பாலு தினமும் விடியற்காலையில் மடியாக,
ஸ்நானத்திற்க்கு வேண்டிய ஜலத்தை கிணற்றிலிருந்து
இரண்டு பெரிய குடங்களில் கொண்டுவந்து வைப்பார்.
அதற்குள், ஸ்ரீ வேதபுரியோ ஸ்ரீ ஏகாம்பரமோ பெரியவா
கொட்டகைக்கு வேண்டிய ஜலத்தை சில மரக்குடங்களில்
ஜன்னல் வழியாக கொடுப்போம்.

பெரியவா தனது அறையைத் தானே சுத்தம் செய்து ஜலம் தெளித்துவிட்டு ஒரு மணி ஜபத்திற்கு ஆசனம் போட்டுக்
கொண்டு உட்காருவார்கள்.

சிஷ்யர்கள் பஞ்சாங்கம் படித்து த்தி, வார, யோக, நக்ஷத்திரங்கள் கரணங்களைச் சொல்லுவோம். அவர்களும் ஒரு மணி ஜபம் முடித்துவிட்டு ஸ்நானத்திற்குத் தயார் செய்துகொள்வார்கள்.

ஒரு நாள் பெரியவா மெளனமாக தனது காரியங்களைச்
செய்துகோண்டு ஒரு மணி ஜபமும் செய்ய ஆரம்பித்து
விட்டார்கள். பெரியவா, ஜபம் முடிந்துக்கொண்டு உள்ளே
இருந்து மரக்குடங்களை ஜன்னல் வழியாக வெளியில்
தூக்கிப் போட்டுக்கொண்டும், தனது அறையை சுத்தம்
செய்துகொண்டும் இருந்தார்கள். அன்று பஞ்சாங்கம்
படிக்கவில்லை. பெரியவாளே முதல் நாளின் திதி, வார,
நக்ஷத்திர, யோக, கரணங்களை கணக்கில் வைத்துக்கொண்டு
அன்று ஜப சங்கல்பம் செய்து கொண்டார்கள். ஜபம்
முடிந்தவுடன் பெரியவாளுக்கு கரணங்களில் சந்தேகம் வரவே,
தான் செய்தது சரிதானா என்று தெரிந்துகொள்ள வேண்டி, மெளனமாதலால், ஜன்னல் அந்தப்பக்கம் ஸ்ரீ வேதபுரியிடம்
மேடையில் தனது தலையை முட்டி கரணம் போடுவதுபோல் கேட்டார்கள்.

ஸ்ரீ வேதபுரியோ, அதைத் தவறாகப் புரிந்துகொண்டு “தெரியுமே”
என்றார். பெரியவா கையைக் காட்டி, “சொல்” என்பதுபோல் ஜாடை செய்தார்கள்.

இவரோ, “தன்னை கரணம் போடத் தெரியுமான்னு கேட்கின்றார்” என்று நினைத்து, “தெரியும்” என்று சொல்லி,
அந்த சின்ன அறையில் குட்டி கரணமும் போட்டுவிட்டார்.
அவர் உடல் பட்டு, ஸ்ரீ பாலு கொண்டு வந்த மடி ஜலம்
கொட்டிவிட்டது.

பெரியவாளோ ஜன்னலருகில் இவரைக் காணவில்லை என்பதால்,
தனது அறையை சுத்தம் செய்து விட்டு, சிறிது நேரம் கழித்து,
மறுபடியும் ஜாடையாக கேட்க,

இவரும் ”இப்போதான போட்டேன்” என்றார். தனது வஸ்திரங்களை நனைத்துக் கொண்டு ஈரத்தோடு இப்பத்தான் போட்டேன் என்றார்.
குடம் கவிழ்ந்து ஜலம் கொட்டிய சப்தம் கேட்டு சிஷ்யர்கள் வந்து பார்த்தால் இந்த கூத்து. பெரியவாளிடம் என்ன ஆயிற்று
என்று கேட்க, முறுபடியும் பெரியவா தனது காதை தொட்டுக்
காண்பித்து, பிறகு கையை பொத்திக் கொண்டு சங்கல்பம் செய்வது போல் ஜாடை காண்பித்தார்.

பின்னர், ஸ்ரீ வேதபுரியே பஞ்சாங்கத்தை படித்து அன்றைய யோக கரணத்தை சொன்னார். பின்னர் ஸ்ரீ பாலு வேறு மடி ஜலம் கொண்டு வந்தார்.

இதுவும் உம்மாச்சி தாத்தாவால் நடத்தபட்ட ஒரு வேடிக்கையான நிகழ்ச்சி !!!

“இங்கதான் தர்மம் இருக்கு."


“இங்கதான் தர்மம் இருக்கு."







(தகவல்: :மின்னஞ்சலில் கிடைக்கபெற்றேன் - பெயர் இல்லை )

இந்த சம்பவம் சுமார் எழுபது வருஷங்களுக்கு முன் நடந்தது.

பெரியவாளிடம் அளவற்ற பக்தி கொண்ட ஒரு முதியவர்,
காலகதி அடையும் தறுவாயில் தன் மகனை அழைத்து
சில விஷயங்களை சொல்லும்போது, தான் ஒருவரிடம்
நூறு ரூபாய் கடன் வாங்கியதாகவும், அதை அவன் திருப்பித் தரவேண்டும் என்று சொல்லிவிட்டு இறந்தார்.

அப்போது மகனுக்கே 62 வயது. கிராமத்தில் கர்ணம் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். சம்பளமோ 15 ரூபாய்தான்.
அப்பாவின் கடைசி வாக்கை காப்பாற்ற கஷ்டப்பட்டு மூன்று வருஷங்களில் எப்படியோ 100 ரூபாய் சேர்த்தார். இதில்
வேடிக்கை என்னவென்றால், அப்பாவுக்கு கடன் குடுத்தவர்
யாரென்றே தெரியாது!

சேமித்த பணத்தை யாரிடம் கொடுப்பது?

மஹாபெரியவா - திக்கற்றவருக்கு தெய்வமே துணை!

ஓடினார் பெரியவாளிடம்! விவரத்தை சொன்னார்.

“மடத்ல ஒரு நாள் தங்கு” உத்தரவானது.

மறுநாள் காலை பெரியவா அவரிடம்

“இங்கேர்ந்து நேரா…………நீ ஆலத்தம்பாடி கிராமத்துக்கு போ!
அங்க இருக்கும் அக்ரஹாரத்ல கடைசியா இருக்கும் வீட்ல இருக்கறவர்கிட்டதான் ஒங்கப்பா கடன் வாங்கினார்”.


ஆலத்தம்பாடி அக்ரஹாரத்தில் பெரியவா சொன்ன வீட்டுக்கு சென்றால்……ஆச்சர்யம்!

அந்த வீட்டுப் பெரியவர் காலகதி அடைந்துவிட்டார். அவருடைய மகனிடம் விஷயத்தை சொன்னதும், அவருக்கு ஒரே வியப்பு!

“எங்கப்பாவும் செத்துப் போகும்போது சில விஷயங்கள்லாம் சொன்னார்……..ஆனா, உங்கப்பாவுக்கு குடுத்த கடன் பத்தின
விஷயத்தை சொல்லவேயில்லையே! அதுனால, இந்த
பணத்தை நான் வாங்கிக்க மாட்டேன்” திட்டவட்டமாக
சொல்லிவிட்டார். அவரையும் அழைத்துக் கொண்டு
பெரியவாளிடம் வந்தார்.

ரெண்டுபக்கத்து ஞாயத்தை கேட்டதும், பெரியவா முகத்தில்
புன்னகை.

“இங்கதான் தர்மம் இருக்கு.

இன்னொர்த்தர் சாமானை வாங்கறப்போ…….நமக்கு
ரொம்ப சந்தோஷமா இருக்கும். ஆனா, அதை
திருப்பித் தரணும்னா……யோசிப்போம்! அதுனால, கடன் வாங்கின பாவத்துக்கு பரிகாரமே இல்லை. இங்க, ஒங்க ரெண்டு பேரோட விவகாரம்
எப்படி? வாங்கினவர் திருப்பித் தரணும்..ன்னு நெனைக்கிறார்……..குடுத்தவரோட பிள்ளையோ,
அப்பா தங்கிட்ட அதைப் பத்தி சொல்லாததால,
வாங்கிக்க மாட்டேங்கறார்……ஆனா,

தர்மம் ஒங்களுக்கு தெரியாது இல்லியா?

அடுத்தவா பொருளுக்கு ஆசைப்படாதவன் தர்மத்தை
காப்பாத்தறான். ரெண்டு பேரும் காமாக்ஷி கோவிலுக்கு
போய், இந்த பணத்தை அங்க உண்டியல்ல போட்டுடுங்கோ!
அது அவளோட பணம்”

ஆசீர்வாதம் பண்ணினார்

Tuesday, December 24, 2013

"தாத்தா பாட்டியை விட வேறே சிறந்த குரு யாரும் கிடையாது"



"தாத்தா பாட்டியை விட வேறே சிறந்த குரு யாரும் கிடையாது"

ஸ்ரீ சி. ஆர். சுவாமிநாதன் - மத்திய அரசில் பெரும் பதவி வகித்தவர் அவர் சொன்னதிலிருந்து: 



சென்னை ஸம்ஸ்கிருத கல்லூரியிலே 1956-57லே மஹா பெரியவா சில நாள் தங்கி, சாயந்திரம் தினமும் பிரசங்கம் நடைபெறும். கேக்கணுமா. பெரியவா பேச்சை கேக்க கூட்டம் அலைமோதும். அன்று ராஜாஜி வந்திருந்தார். என்ன பேசறதுன்னு மகாபெரியவா முடிவு பண்ணலை. பக்கத்திலே ப்ரொபசர் சங்கரநாராயணன் நிக்கறதை பெரியவா பாத்து அவரை பக்கத்திலே கூப்பிட்டா.

அவர்கிட்ட ஒரு ஸ்லோகத்தைச் சொல்லி அதிலே முதல் ரெண்டு வரியை சொன்னா.

''உனக்கு அடு த்த ரெண்டு வரி இருக்கே அது தெரியுமா?
.
''பெரியவா க்ஷமிக்கணும். எனக்கு தெரியலை''

இப்படி பெரியவா ஒரு ஸ்லோகத்தை பத்தி பேசினது மைக்லே எல்லோருக்கும் கேட்டுடுத்து.

கூட்டத்திலே ஒருத்தருக்கு அந்த ஸ்லோகம் தெரிஞ்சிருந்தது. அவர் மெதுவாக மேடைக்கு அருகே வந்து ப்ரொபசர் சங்கரநாராயணன் கிட்டே '' சார், பெரியவா கேட்ட அந்த பாக்கி ரெண்டு அடி எனக்கு தெரியும் அது இதுதான் என்று அவரிடம் சொன்னதை ப்ரொபசர் சந்தோஷமா மேடையிலேறி பெரியவா கிட்ட

''பெரியவா அந்த மீதி ரெண்டு வரி இது தான் என்று சொன்னவுடன்

''நான் கேட்ட போது தெரியாதுன்னியே''?

''ஆமாம் பெரியவா. கூட்டத்திலே யாரோ ஒருவருக்கு தெரியும்னு வந்து எங்கிட்ட சொன்னதைத்தான் பெரியவா கிட்ட சொன்னேன். ''

''அவரை இங்கே அழைச்சிண்டு வா''

இந்த நிகழ்ச்சியை சொன்ன சி.ஆர். சுவாமிநாதனை மேடையில் தன் கிட்ட கூப்பிட்டு பெரியவா

''நீ தான் அந்த ரெண்டு வரியை சொன்னதா?''

''ஆமாம் பெரியவா''

''எங்க படிச்சே?''

''மெட்ராஸ்லே பிரெசிடென்சி காலேஜ்லே''

''நான் அதைக் கேக்கலே. இந்த ஸ்லோகத்தை எங்கே படிச்சே?''

''எங்க தாத்தா சொல்லிகொடுத்தது சின்ன வயசுலே''

''எந்த வூர் நீ, உங்க தாத்தா யார்?''

சுவாமிநாதன் விருத்தாந்தம் எல்லாம் சொன்னார்.

பெரியவா சுவாமிநாதன் பேசினது அத்தனையும் மைக் வழியா சகல ஜனங்களும் கேட்டிண்டு இருந்தா.

பெரியவா சொன்ன ஸ்லோகம் இது தான்

அர்த்தாதுரணாம் ந குருர் ந பந்து ,
க்ஷுதாதுராணாம் ந ருசிக்கி ந பக்வம் ,
வித்யாதுராணாம் , ந சுகம் ந நித்ரா ,
காமாதுராணாம் ந பயம் ந லஜ்ஜா

பணமே லக்ஷியம் என்று தேடுபவனுக்கு குரு ஏது பந்துக்கள் ஏது?
பசி காதடைக்கிறவனுக்கு ருசியோ, பக்குவமோ அவசியமா?
படித்து முன்னேர முனைபவனுக்கு வசதியோ தூக்கமோ ரெண்டாம் பக்ஷம் தானே?
காமாந்தகாரனுக்கு பயமேது வேடகமேது?

தான் பிறகு பேசும்போது பெரியவா கேநோபநிஷதிலிருந்து மேற்கோள்கள் காட்டினார். எப்படி பார்வதி தேவி தேவர்களுக்கு பிரம்மத்தை உபதேசித்தால் என்றெல்லாம் விளக்கிவிட்டு

இப்போ பேசுறதுக்கு முன்னாலே ஒருத்தரை மேடைகிட்ட கூப்பிட்டு ஒரு ஸ்லோகத்தின் முதல் ரெண்டு அடிகளை சொல்லி பாக்கி தெரியுமா என்றதற்கு தெரியும் என்றார். எங்கே தெரிஞ்சுண்டே என்று கேட்டதற்கு,சின்ன வயசிலே தாத்தா வீட்டிலே சொல்லிக்கொடுத்தார் என்றார். எனக்கு அவா குடும்பத்தை தெரியும்.

இந்த நிகழ்ச்சியிலிருந்து என்ன தெரிகிறது?

நான் எதுக்கு இதை பெரிசா எடுத்து சொல்றேன்னா, இதெல்லாம் வீட்டிலே பெரியவா கிட்டே தெரிஞ்சிக்கணும். இதெல்லாம் பள்ளிக்கூடத்திலேயோ, காலேஜ்லேயோ சொல்லித்தரமாட்டா. சேர்ந்து ஒண்ணா வாழற குடும்ப வாழ்க்கையிலே இது ஒரு பெரிய லாபம் என்பதைபுரிந்து கொள்ள உதவும்.

தாத்தா பாட்டிகள் ஒரு பொக்கிஷம். நிறைய விஷயங்களை அவா கிட்டேயிருந்து தெரிஞ்சிக்கலாம்

சின்ன வயசிலேயே சொல்லிக்கொடுக்க தாத்தா பாட்டியை விட வேறே சிறந்த குரு யாரும் கிடையாது. மனதில் நன்றாக படியும் . அது தான் பசுமரத்தாணி என்கிறது

Sunday, December 22, 2013

தேடித் தேடித் போய் கொடுக்கிற தெய்வம்...

தேடித் தேடித் போய் கொடுக்கிற தெய்வம்...


உயிர் உருக்கும் சம்பவம் இது...
எத்தனை முறை நினைத்தாலும் கண்களில் கண்ணீர் வரும்...
ஸ்ரீ கணேச சர்மா மாமா அவர்கள் சொல்லும் போது அவரும் நெகிழ்வார். நம்மையும் நெகிழ பண்ணுவார்.


ஐயன் ஏதோ ஒரு கிராமத்தில் முகாம். காலை எங்கோ செல்லும் போது வயல்வெளியாக செல்வார் பரிவாரத்துடன். தூரத்தில் ஒரு குடியானவர்(ன் போட முடியவில்லை) கோவணாண்டியாக, ஐயனை பார்த்து கைகூப்பிக்கொண்டு நிற்பார்.

ஐயன் சென்று விடுவார்.

திரும்பி வரும்போது வயக்காடு மேட்டில் பூசணி, வாழை, பரங்கி என்று நிறைய காய் கறி கீரை பழங்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும்.
ஐயன் சொடுக்கி தன் உயிரே ஆன அந்த குடியானவ பக்தரை கூப்பிடுவார்.

'சாமி நான் கொடுத்த வாங்கிப்பீங்களோ ன்னு தான், காய் கறி... எடுத்துப்பிங்களா சாமி?'.

ஐயன் கருணையோடு நோக்கி... சொல்வார் பாரிஷதரிடம் ,'இன்னிக்கு பிக்ஷைக்கு இதெல்லாம் தான். எடுத்துக்கோங்கோ'.

அங்கே நிற்காது கருணை வெள்ளம்.

சிறிதே தூரம் சென்று நட்ட நாடு சாலையில் நின்று ஸ்ரீ மடம் பாலு மாமா அவர்களிடம் ஏதோ விஷயம், உப்பு பெறாது என்போமே, அதை ஆரம்பிப்பார். இதை ஏன் இங்கே வெட்ட வெளியிலே, நட்ட நாடு ரோட்டிலே, மொட்டை வெயிலிலே என்று பாலு மாமா பாடாத பாடு படுவார். ஸ்ரீ கணேச சர்மா மாமா சொல்லி கேட்கவேண்டும்.

கிழக்காலே மேற்காலே, தெக்காலே, வடக்காலே, ஒத்தை காலை மடிச்சிண்டு, தலைல வஸ்த்ரம் போட்டுண்டு போடாம, குனிஞ்சு, நிமிந்து என்று கிட்டத்தட்ட ஒரு மணி நேரம்...
அப்புறம் கிளம்பி, ஸ்நானம் ஆகி, பூஜை முடிஞ்சு, பிக்ஷை பண்ணி, விஸ்ராந்தி பண்ணிக்கும் போது மெதுவாக, ஸ்ரீ பாலு மாமாவிடம் கேட்டாராம் ஐயன்.
'ஏண்டா பாலு, ஒன்னை ரொம்ப நேரம் வெயில்ல கால் கடுக்க நிக்க வெச்சுட்டேனோ?'.

வெச்சாச்சு. வெச்சுட்டு என்ன கேள்வி வேறே?
எப்படி கேட்க முடியும்?

மாமா சொன்னார்களாம், 'அதெல்லாம் ஒன்னும் இல்லே'.
சும்மா விடுமா நம் தெய்வம்? 'இல்லேடா, ஒன்னை ரொம்ப நிக்க வெச்சுட்டேன். ஏன் ன்னு கேளு?'.

இதுவேறயா, பண்றதையும் பண்ணிப்பிட்டு...

ஏன்? பெரியவா?'.

'இல்லே, என்னை முன்னாடி பார்க்கணும் ன்னா நீ என்ன பண்ணுவே?'
'இது என்ன கேள்வி பெரியவா, இதோ ஒங்க முன்னாடி வந்து நின்னு நன்னா நன்னா பாத்துட்டு போவேன்'.

'சரி, பின்னாடி இருந்து என்னை பார்க்க?'.

விடமாட்டாரே... 'இதோ, பின்னாடி போய் உங்க முதுகை பார்த்துண்டு நிப்பேன், பக்கவாட்டிலேயும் அப்படித்தான்' என்றார் மாமா முன்யோசிதமாய்.

'அதெல்லாம் சரி டா, ஒன்னாலே இதெல்லாம் முடியும். அங்கே வயல்ல வெயில்ல நின்னு வேலை பார்த்துண்டு இருந்தானே, அவன் நந்தன் அம்சம் டா. 

அவனால இதெல்லாம் பண்ண முடியுமா? 

இதுக்கெல்லாம் நேரம் இருக்குமா? அதுனால தான் நான் திரும்பி திரும்பி நின்னு அவன் நன்னா பார்க்கற மாதிரி பண்ணினேன்'.
வேறு எதுவும் சொல்லவேண்டுமா?

இதுவல்லவோ தேடித் தேடித் போய் கொடுக்கிற தெய்வம்...

Source: Shri Karthi Nagaratnam


ஏகம் ஸத்.வெறும் சொற்கள் அல்ல:உயிர்த் தத்துவம்.


ஏகம் ஸத்.வெறும் சொற்கள் அல்ல:உயிர்த் தத்துவம்.

Source : Sage of Kanchi




கார்த்திகை மாதம்,நல்ல குளிர்,விடியற்காலை,கோட்டை அடுப்பை அடுப்பைமூட்டி, பெரியவாள் ஸ்நானத்துக்கு வெந்நீர் போட வேண்டும்.
அந்தப் பணியைச் செய்யும் ராமமூர்த்தி அய்யர் கோட்டை அடுப்பை...நோக்கிப் போனார்.ஒரு சொடுக்கில் அவரை அழைத்தார்கள்பெரியவாள்.அவர் அருகில் வந்து நின்றார்.அரைகுறைவெளிச்சம்."இன்னிக்கு அடுப்பு மூட்ட வேண்டாம்..வெந்நீர்வேண்டாம்.....".வெந்நீர் வேண்டாம் என்பதை ஒப்புக்கொள்ளலாம்.ஆனால்,அடுப்பை மூட்டாமல் நைவேத்யம் தயார் செய்யமுடியாதே?பெரியவாள், திருவாரூர் வெங்கட்டராமய்யர் என்ற மற்றொருசமையல்காரரைக் கூப்பிட்டார்கள்.

"இரும்பு அடுப்பு இருக்கோன்னோ.....அதைப் பற்ற வை. சுவாமிநைவேத்யம் அதில் பண்ணு...."என்றார்கள் மேல் முறையீட்டுக்குஇடமில்லாத உத்தரவுகள். காலை சுமார் ஏழு மணிக்கு 'மியாவ்' என்றுமெல்லிய குரல் கேட்டது. கடவுளே! நைவேத்யத்தில் வாய் வைத்து விடப்போகிறதே!

சூ.......சூ.......ஒரு சலசலப்பும் இல்லை.
பூனை எங்கிருந்து குரல் கொடுத்தது?
ராமமூர்த்தி அய்யர் கோட்டை அடுப்பு அருகே சென்று பார்த்தார்.ஒருதாய்,நாலு குட்டிகள்..மெய் மறந்து உறங்கிக் கொண்டிருந்தன,கோட்டைஅடுப்பின் கதகதப்பை அனுபவித்துக் கொண்டு."உச்ச மன்ற"த்தின்ஆணைக்குக் காரணம் இப்போது தெளிவாகத் தெரிந்தது.
"குளிர் தாங்காமல், பூனையும் குட்டிகளும் அங்கே வந்து படுத்துக்கொண்டிருந்தன.அடுப்பு மூட்டினால் அவை தூக்கம் கலைந்து வேறுஎங்கே போகும்? குளிரில் நடுங்குமே? எனக்கு வெந்நீர்வேண்டாம்.பூனைகள் நன்றாகத் தூங்கட்டும்!."

ஏகம் ஸத்.வெறும் சொற்கள் அல்ல:உயிர்த் தத்துவம்.

Saturday, December 21, 2013

தொண்டு செய்! தொண்டு செய்! தொண்டு செய்!



தொண்டு செய்!
By காஞ்சி மகாபெரியவர்






ராமாயண அணில் நமக்கெல்லாம் முன்னுதாரணம். அத்தனாம் பெரிய úஸது பந்தத்தில், "நாம் அல்ப ஜந்து, என்ன பெரிய ஸஹாயம் பண்ண முடியும்?' என்று அது நினைத்ததா? அது பண்ணின சேவை ராமருக்கு என்ன உபகாரம் பண்ணிற்றோ பண்ணவில்லையோ, அதற்கு பெரிய உபகாரம் பண்ணி விட்டது. ஸ்ரீராமரின் கருணையை, கர ஸ்பரிசத்தை ஸம்பாதித்துத் தந்துவிட்டது.




இப்படி, "நாம் என்ன பண்ணிக் கிழிக்கப் போகிறோம்?' என்று ஒதுங்கியில்லாமல், நம்மாலான தொண்டு செய்தால், மற்றவருக்கு நம்மால் நல்லது நடந்தாலும் நடக்காவிட்டாலும் நமக்கு ஈச்வரப் பிரஸாதம் கிடைத்து சித்தசுத்தி லபித்துவிடும்.

Saturday, December 14, 2013

கனகதாரா ஸ்தோத்திரம் தெரியுமோ?"

கனகதாரா ஸ்தோத்திரம்  தெரியுமோ?"

தகவல் : MSS அண்ணா 





"அன்று பொன் மழை  -காலடி ஆதி சங்கரர் , இன்றும் பொன் மழை  காஞ்சி  சங்கரர்"


காமாட்சி அம்மனுக்கு மேலே ஒரு காலத்தில் பொன்மயமாக இருந்த
விமானம், தங்க ரேக்கெல்லாம் அழிந்து வெறும் செம்பாக இருந்தது.
அந்த கால கட்டத்தில் மடத்துக்கு வசதி போதாது.
அன்பர்களும்,பக்தர்களும் கொடுப்பதைவைத்து மடம்
நடந்து கொண்டிருந்தது.பல நாட்கள் பிட்சா வந்தனத்துக்கு
யார் வரப் போகிறார்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பது
கூட உண்டு.சந்நியாச தர்மப்படி அந்த பிட்சாவந்தனத்தை
வைத்துத்தான் பெரியவாளுக்கு பிட்சையே நடக்கும்.எனவே

"விமானத்துக்கு தங்கரேக்கைப் பயன்படுத்தாமல் ஏன் வெறும்
செம்பாக வைத்திருக்கிறீர்கள்?" என்று பெரியவா மானேஜரைக்
கேட்ட போது, "பண வசதி போதாது" என்று அவர் தெரிவித்து
விட்டார்.

பெரியவா ஆசாரியை வரவழைத்து எவ்வளவு பவுன் ஆகுமென்று
கேட்டார். விமானமெல்லாம் கழற்றிக் கீழே வைக்கப்பட்டது.
பார்த்துவிட்டு,ஆசாரி பல பவுன்கள் வேண்டும் என்றார்.

"அதற்கு எங்கே போவது?" என்ற கேள்விக்குறி பெரியவா முகத்தில்
பெரியவாளோ,"பண்ண ஆசையிருக்கு,எப்படி என்றுதான்
தெரியலை?" என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.

அந்த சமயம்
மகாராஜபுரம் விஸ்வநாதய்யர், பெரியவாளை தரிசனம் பண்ண
உள்ளே வந்தார்.பெரியவா கட்டளைப்படி தேவகானம் பொழிந்தார்
பெரியவா அவரிடம், "எனக்கு காமாட்சி அம்மனின் விமானத்தை
தங்க ரேக்கால் ஒளி வீசச் செய்யணும்னு மிகவும் ஆசையாக
இருக்கிறது.இவர்களெல்லாம் அது முடியாத காரியம்......பவுனுக்கு
எங்கே போவது என்கிறார்கள். பெரிய குறையாக இருக்கிறது.
ஆனால்,உன் பாட்டைக் கேட்டதும் அந்தக் குறை தணிந்துவிட்டது.

உனக்குக் கனகதாரா தோத்திரம் தெரியுமோ?" என்று கேட்டார்.
"சுமாராகத் தெரியும்" என்றார் விஸ்வநாதய்யர். அங்கே
வந்திருந்த பெண்மணிகளில் சிலர்,"எனக்குத் தெரியும்" என்று
முன் வந்தனர்.எல்லோரும் சேர்ந்து கனகதாரா தோத்திரத்தை
முழக்கினார்கள்.அதைச் சொல்லி முடித்தார்களோ இல்லையோ
ஒரு அதிசயம் நடந்தது.


அங்கேயிருந்த ஒரு தட்டில் அத்தனை பெண்களும் தங்கள்
நகைநட்டுகளைக் கழட்டிப் போட்டனர்.
"ஆசார்யரது ஸ்லோகத்தை இன்றைக்குச் சொன்னாலும் பொன்மாரி
பொழிகிறதே" என்று பெரியவர் புளகாங்கிதம் அடைந்தார்.அதை
அப்படியே ஆசாரியிடம் அள்ளிக் கொடுத்து ஐந்து நாட்களுக்குள்
தங்க விமானம் பண்ணி எடுத்து வா என்றார்.

அந்த பவுனை எடை போட்டுப் பார்த்தபோது ஆசாரி கேட்ட பவுனுக்கு
ஒரு குந்துமணி கூடவுமில்லை,குறையவுமில்லை என்று
அதிசயப்பட்டார் ஆசாரி.
சர்வ வல்லமை படைத்த மகானான பெரியவா ஒன்று நினைத்தால்
அது நடக்காமல் போய்விடுமா என்ன? ஆறே நாளில் தங்க விமானம்
வந்து,கும்பாபிஷேகமும் அமோகமாக நடந்தேறியது.

ஒரு ஏழைப் பெண்ணுக்காக அம்பாள்,அன்று பொன்மழை
பொழிந்தாள்

இன்று பல ஏழைப் பெண்மணிகள் மனதால் ஒன்றுபட்டு,அம்பாளுக்கு
நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பியது போல் அந்த
நிகழ்ச்சி அமைந்தது.

Friday, December 13, 2013

"சார்..இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்லட்டுமா?"



"சார்..இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்லட்டுமா?"

கட்டுரையாளர்;ரா.வேங்கடசாமி
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

My Source : Sage of Kanchi 







ஒரு தடவை...பள்ளிக்கூடத்துக்கு இன்ஸ்பெக்டர் ஒருவர்
வந்தார். வழக்கமாகப் பள்ளிக் குழந்தைகளின் படிப்பறிவைச்
சோதிக்கக் கேள்விகள் கேட்பது வழக்கமல்லவா?

ஒரு வகுப்பறைக்குள் நுழைந்த இன்ஸ்பெக்டர்,அந்த வகுப்புப்
பையன் ஒருவனிடம் கேள்வி கேட்டார்.அந்தக் கேள்விக்கு
அந்தப் பையனால் பதில் சொல்ல முடியவில்லை.

பக்கத்து வகுப்பில் படித்துக் கொண்டிருந்த மகான் எழுந்து
வந்து, "சார்..இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்லட்டுமா?"
என்று கேட்க....அவரும் உத்தரவு கொடுத்தார்.
மகான்...'கட கட' வென அந்தப் பாடத்தின் பகுதியைச் சொன்னார்.
எல்லோருக்கும் மிகவும் வியப்பு. 'பெரிய வகுப்புக் கேள்விக்கு
சின்ன வகுப்பில் படிக்கும் பையன் பதில் சொல்கிறானே!'
என்று பாராட்டி மகிழ்ந்தார்கள்.

பிற்காலத்தில் ஒரு தடவை ரா.கணபதியிடம் இந்த நிகழ்ச்சியைப்
பற்றிக் குறிப்பிடுகிறார்.-அவர்தான் இதைப்பற்றிப் பின்னால்
எல்லோருக்கும் தெரியச் செய்தவர்.பெரியவா அந்த நிகழ்ச்சியைப்
பற்றிச் சொன்னவுடன் கணபதி, "மகா பெரியவாளுக்குச் சகலமும்
தெரியும். வேதங்களையும் சாஸ்திரங்களையும் அறிந்தவருக்குப்
பள்ளிக்கூடப் பாடத்துக்குப் பதில் சொல்வதா கடினம்?" என்று
பாராட்டினார்.

அவரைக் கையமர்த்திய மகான்....

"அவசரப்பட்டு சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் எதை எதையோ....
எதற்கும் முடிச்சுப் போடாதே...என் அண்ணா அந்த மேல்வகுப்பிலே
அப்ப படிச்சுண்டு இருந்தான். அவன் உரக்கவே பள்ளிப் பாடங்களைப்
படிப்பான்.அது என் காதிலும் விழும். அதனால்தான் இன்ஸ்பெக்டரின்
கேள்விக்கு நான் பதில் சொன்னேன்..." என்றார் அடக்கமாக.

தான் காண்பித்த அந்த அபூர்வமான விஷயத்தை மிகவும் சாதாரண
விஷயமாக ஒதுக்கித் தள்ளிவிட்டார் மகான்.

ஒன்றுமில்லாத விஷயங்களைப் பற்றிப் பெருமை கொள்வது
நமது குணம்.ஆனால், உண்மையிலேயே பெருமைப்பட வேண்டிய
விஷயத்தை ஒதுக்கித் தள்ளுவது மகான்களின் குணம்.

Thursday, December 12, 2013

பிரபஞ்சத்தின் ஆதாரம்

பிரபஞ்சத்தின் ஆதாரம்





தெருவிலே ஒரு பூமாலை கிடக்கிறது. பகல் வேளையில் போகிறவர்களுக்கு அது பூமாலை என்பது நன்றாகத் தெரிகிறது. பயம் இல்லாமல் போகிறார்கள். அரை இருட்டு. எவனோ அந்தப் பக்கம் வந்தவன் அதை மிதித்துவிட்டு, "'ஐயோ பாம்பு, பாம்பு'' என்று பயத்தால் கத்துகிறான்.

மாலையாக இருப்பதும் பாம்பாக இருப்பதும் ஒன்றுதான். இது மாலைதான் என்று தெரிந்தவுடன் அவனுக்கும் பாம்பு இல்லை என்று தெரிந்துவிடுகிறது. ஆனால் முதலில் பாம்புக்கு ஆதாரமாக இருந்தது என்ன? மாலைதான்.

"இந்தப் பிரபஞ்சத்திற்குள் நான் இருக்கிறேன். பிரபஞ்சம் என்னிடத்தில் இருக்கிறது'' என்று சொன்னால் என்ன அர்த்தம்? "மாலைக்குள்தான் பாம்பு இருக்கிறது. பாம்புக்குள்தான் மாலை இருக்கிறது'' என்பது எப்படியோ அப்படித்தான். பாம்பு என்று அலறுபவனுக்கு! பாம்புக்கு ஆதாரமாக இருப்பது மாலை. அஞ்ஞானம் நீங்க, "இது மாலைதான்' என்று உணர்ந்து கொண்டவனுக்கு மாலை பாம்பைத் தன்னுள் மறைத்து விடுகிறது. மாலைதான் தெரிகிறது.

மாயையினால் மூடப்பட்டுப் பிரபஞ்சத்தைச் சத்தியம் என்று பார்ப்பவனுக்கு, பிரபஞ்சத்துக்கு ஆதாரமாக இருந்து தாங்குபவன்தான் ஈசுவரன்.

- காஞ்சி ஸ்ரீமகாபெரியவர்

Tuesday, December 3, 2013

"காலடி சங்கரனே கைலாஸ சங்கரன்"




"காலடி சங்கரனே கைலாஸ சங்கரன்"
(பொருத்தம் காட்டிய பெரியவாள்)

கட்டுரையாளர்;ரா.கணபதி
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.




ராமேஸ்வரத்தில் அப்போது நிர்மாணமாகி வந்த
ஸ்ரீ சங்கரமடத்துக்குச் சென்னையிலிருந்து சிலர்
விக்கிரகங்களுடன் சென்ற லாரி வழியே 'ஆக்ஸில்'
உடைந்து நின்று விட்டது.




இளையாத்தங்குடியிலிருந்த
பெரியவாளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

"எந்த இடத்தில் நின்று விட்டது" என்று வினவுகிறார்.

"அச்சரப்பாக்கத்தில்" என்று பதில் வருகிறது.

பெரியவாள் முகத்தில் புன்னகை விரிகிறது.
இடுக்கண் வருங்கால் நகைக்கிறார்.

இளையாத்தங்குடிப் பிள்ளையாருக்குத் தாமே
தள்ளாத வயதில் துள்ளும் பாலகனைப் போல்
முட்டிக்கால் தோப்புக்கரணம் போடுகிறார்.

ராமேஸ்வர விஷயம் விக்கினமின்றி நடைபெறவே
விக்னேஸ்வர வழிபாடு என்பது வெளிப்படை.

மூர்த்தி வழிபாட்டுக்கு மேம்பட்ட முற்றிய அருள்
நிலையில் இருந்து இவரே இடையூற்றைத்
தீர்த்துவிடலாம்.ஆயினும் விக்கினம் தீர்க்கவே
ஏற்பட்ட தெய்வத்தை, மானுடருக்கு முன்னுதாரணமாகத்
தாமே வழிபட்டுக் காட்டுகிறார்.அதைச் சொல்லாமல்
சொல்லுகிறார்.

"பரமசிவன் பிள்ளையாரை வேண்டிக் கொள்ளாமலே
திரிபுர தகனத்துக்குப் புறப்பட்டார். 'எந்தக் காரியம்
ஆரம்பித்தாலும் பிள்ளையாரை முதலில் பூஜிக்க வேண்டும்
என்று லோகத்துக்கு ஏற்பட்ட சம்பிரதாயத்தை ஈஸ்வரனே
செய்து காட்டினால்தானே, மற்ற ஜனங்களும் அப்படிச்
செய்வார்கள்? அதனால், ஈஸ்வரன் இப்படிப் பண்ணாத போது
அவர் புறப்பட்ட ரதத்தின் அச்சு முறிந்து போயிற்று.அப்புறம்
அவர் விக்னேஸ்வரரைப் பிரார்த்தனை செய்து கொண்ட பிறகு
தான் அது புறப்பட்டது.

அச்சு இற்று முறிந்த போன இடம்தான் 'அச்சரப்பாக்கம்' என்று
இப்போது சொல்லும் அச்சிறுப்பாக்கமான ஊர்.அங்கேயேதான்
நம் லாரியும் அச்சு முறிந்து நின்றிருக்கிறது.!"

எப்பேர்ப்பட்ட பொருத்தம்! பொருந்தாமல் இடையூறு
ஏற்பட்டதிலேயே ஒரு பொருத்தம் கண்டுவிட்டார்.

"கைலாஸ சங்கரன் ரதத்தில் போனபோது எங்கே அச்சு
முறிந்ததோ, அதே ஊரில் காலடி சங்கரர் லாரியில்
போகிறபோது ஆக்ஸில் உடைந்திருப்பதால் இவர்
அவனுடைய அவதாரமே என்றும் நிரூபணம் ஆகிறது!"
என்று பின்னரும் ஒரு பொருத்தம் காட்டிவிட்டார்



ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர

ஆச்சார்யாள் - அண்டம் அளந்த வாமநனோ !!!

ஆச்சார்யாள் - அண்டம் அளந்த வாமநனோ !!!



Sage of Kanchi ( My - Source)
by Mannargudi Seetharaman Sreenivasan Anna

அன்று காலையில்தான் மதிப்பிற்குரிய முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் அவர்கள் காஞ்சிபுரத்தில் ஸ்ரீ மடத்தில் பரமாசார்யாளைத் தரிசித்து விட்டு ஆசி பெற்றுச் சென்றிருந்தார்கள் . ஆசார்யாள் சற்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள். மாலை சுமார் நான்கு மணியிருக்கும். “பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்திற்கு வந்துள்ள பிரஞ்சு பேராசிரியர்கள் பெரியவாளை தரிசிக்க இப்பொழுது வரப் போகிறார்கள். நீங்களும் இருந்து விட்டுப் போங்களேன்” என்றார் ஸ்ரீ மடத்தில் இருந்த ஒருவர். “சரி” என்று தயங்கினேன்.

சில நிமிடங்களுக்குள்ளாக எதிர்பார்த்த பேராசிரியர்கள் வந்தனர். “பெரியவாளைப் பார்க்க அவர்கள் வரலாம். உங்களையும் பெரியவாள் கூட வரச் சொன்னார்” என்றார் மடத்தைச் சேர்ந்தவர். மகிழ்ச்சியுடன் உடன் சென்றேன். பெரியவாள் எளிமையே உருவமாகத் தரையில் அமர்ந்திருந்தார்கள். தரிசிக்க வந்த ஐந்து பிரஞ்சு பேராசிரியர்களையும் எதிரில் அமரும்படி கூறினார். என்னை தமக்கு அருகில் வந்து அவர்களுக்கு ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துச் சொல்லுமாறு பணித்தார்.

வந்தவர்களில் மூவர் பெண்கள்; இருவர் ஆண்கள். அவர்களின் தலைவராக இருப்பவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்திருப்பதாகவும், மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் வந்திருப்பதாகவும் கூறினார். பெரியவாள் சிரித்துக் கொண்டே ஒவ்வொருவருடைய பெயரையும், அவர்கள் எந்தத் துறையில் பேராசிரியர்களாகத் திகழ்கிறார்கள் என்பதையும் கேட்டறிந்து கொண்டார்.

அவர்கள் தங்கள் தங்கள் துறைகளைக் கூறி வரும்போது, பெரியவாள் சட்டென்று அவர்களில் ஒரு பெண்மணியைப் பார்த்து, “நீங்கள் இத்தாலியிலிருந்து வந்தவர்களா?” என்று கேட்டார். அந்தப் பெண்மணி பிரஞ்சு நாட்டு பாரீஸ் மாநகரைச் சேர்ந்தவர். அங்கு பேராசிரியர். அப்படி இருக்கும்போது ஏன் இப்படிக் கேட்கிறார் என்று எண்ணினேன். அந்த பெண்மணி கூறிய பதில் எங்களை வியப்பிலாழ்த்தியது. “எங்கள் முன்னோர்கள் இத்தாலியைச் சார்ந்தவர்கள் தாம்” என்றார். அடுத்து பெரியவாள் கேட்ட கேள்வி மேலும் எங்களை வியப்பில் ஆழ்த்தியது. பாரிஸுக்கு வடக்கில் லுக்ஸ்ம்பர்க் என்ற நகருக்குத் தெற்கில் வாழ்ந்தவர்களா? என்று கேட்டார். அந்த பெண்மணி ஆச்சரியத்தில் மூழ்கி தன்னுடன் வந்த ஒவ்வொருவரையும் பார்த்துக் கொண்டே, “ஆமாம்” என்று கூறினார். இதற்கு முன் அப்பெண்மணி இந்தியா வந்ததேயில்லை. அப் பெண்மணியைப் பற்றி யாருக்குமே தெரியாது. அப்படியிருக்க, பெரியவாள் பிரான்சு ஜெர்மனி நாடுகளின் அமைப்பையும், இந்தப் பகுதி தான் என்று வரையறுத்துக் கூறும் பாங்கையும் கண்டு நாங்கள் வியப்பை அடக்க முடியாது வாய் புதைத்து நின்றோம்.

எங்கள் முக பாவங்களைப் பார்த்து பெரியவாளே அது எப்படி என்று விரித்து உரைத்தார்கள். “இத்தாலிய நாட்டினருக்கும், பாரிஸுக்கும் வடக்கே லுக்ஸ்ம்பர்கிற்குத் தெற்கில் உள்ளவர்களுக்கும் பெரும்பாலும் தலைக் கேசம் கருப்பாயிருக்கும். இத்தாலியர்களின் லத்தீன் மொழியின் உச்சரிப்பு ஒருவிதமாக இருக்கும்” என்றார்கள். அதைக் கேட்டு அந்த பெண்மணி, “ஆமாம்! ஆமாம்!” என்று வேகமாகத் தலையாட்டினார்.

காஞ்சிபுரத்தில் ஏதோ ஒரு பகுதியிலிருக்கும் பெரியவாள், உலகில் எங்கிருந்து யார் வந்தாலும், எம்மொழி பேசினாலும், இந்த பகுதியிலிருந்து வந்தவர், இந்த மொழி பின்னணி கொண்டவர் என்று சொல்லும் பாங்கையும் பார்த்த போது, வேத காலத்தில் அனைத்தையும் அறிந்த மகரிஷிகள் எல்லாம் ஒருங்கே இணைந்து இன்று பெரியவாள் உருவில் ஒரு ஒப்பற்ற பரம ஞானியாகத் திகழ்வதை உணர்ந்தேன்.

– டாக்டர், இரா. நாகசாமி (முன்னாள் தொல்பொருள் ஆய்வுத் துறை தலைவர்)

Friday, November 29, 2013

அந்தப் பாப்பா எங்கேம்மா?

அந்தப் பாப்பா எங்கேம்மா?



பச்சைப் பட்டுப்பாவாடைகட்டிண்டு அந்த பாப்பாதான்! பெரியவாளை தர்சனம் செய்வதற்காக ஒரு தம்பதி தங்கள் ஐந்து வயதுப் பெண் குழந்தையுடன் காரில் காஞ்சிபுரம் கிளம்பினார்கள். அவர்களோடு அந்த பக்தரின் அப்பாவும் கிளம்பினார். 



சுங்குவார் சத்திரம் அருகில் வரும்போது, கூட வந்த தாத்தாவுக்கு சிறுநீர் கழிக்க வேண்டியிருந்ததால், ரோடின் ஒரு ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு, அப்பாவும் மகனும் ரோடைக் க்ராஸ் பண்ணி எதிர் பக்கம் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். ஐந்து செகண்டுக்கு ஒருமுறை குறைந்தது இரண்டு வண்டிகளாவது போய்க்கொண்டிருந்தன. காருக்கு வெளியே தன் அம்மாவுடன் நின்று கொண்டிருந்த குழந்தை, எதிர்பக்கம் வரும் தாத்தாவை பார்த்து விட்டு, ஏதோ இப்போதுதான் புதுஸாகப் பார்ப்பது போல், “தாத்தா!..” என்று கத்திக் கொண்டு, திடீரென்று ஒரேயடியாகத் துள்ளிக்கொண்டு ரோடை க்ராஸ் செய்ய ஆரம்பித்தாள் ! 

வண்டிகளைப் பற்றிய பயமே அந்தக்குழந்தைக்கு இல்லை! அம்மாவும் அப்பாவும் தாத்தாவும் பதறிப் போன சமயம்,வேகமாக வந்த லாரி, அந்தக் குழந்தையை தூக்கி வீசி எறிந்தது! கண் இமைக்கும் நேரத்தில் நடந்து விட்ட இந்த விபத்து அத்தனை பேரையும் ஸ்தம்பிக்க வைத்துவிட்டது! அலறிக்கொண்டு குழந்தையைத் தூக்கிக் கொண்டு காஞ்சிபுரத்தில் ஒரு ஹாஸ்பிடலில் சேர்த்தனர். “கொழந்தையை ஒடனே மெட்ராஸுக்கு கொண்டு போய்டுங்க! ரொம்ப ஸீரியஸ்கேஸ்!..” டாக்டர்கள் கைவிரித்து விட்டு, ஏதோ முதலுதவியைச் செய்தனர். 

விஷயத்தை கேள்விப்பட்டு, காஞ்சிபுரத்தில் இருந்த அவர்களுடைய சொந்தக்காரர் ஆஸ்பத்ரிக்கு ஓடி வந்து குழந்தையைப் பார்த்து விட்டு, நேராக பெரியவாளிடம்ஓடினார். “பெரியவாளைப் பாக்கறதுக்காக வர்றச்சே வழில கொழந்தை மேல லாரி மோதிடுத்து! டாக்டர்கள் கைவிரிச்சுட்டா! பெரியவாதான் கொழந்தையைக் காப்பாத்தணும்..”அழுதார். 

“என்னைப் பாக்க வரச்சேயா ஆக்ஸிடென்ட் ஆய்டுத்து?…” என்று கேட்டுவிட்டு, சற்றுநேரம் கண்களை மூடிக் கொண்டிருந்தார். 

அப்புறம் பக்கத்தில் இருந்த ஒரு ஆப்பிள்பழத்தை எடுத்து அவர் கையில் ப்ரஸாதமாகப் போட்டுவிட்டு, “மெட்ராஸுக்கு கொழந்தையைப் பாக்க போறச்சே இதைக் குடு. போறதுக்கு முன்னாடி, காமாக்ஷியை தர்சனம் பண்ணிட்டுப் போ!…” என்று உத்தரவிட்டார். உறவினரும் உடனேயே காமாக்ஷி கோவிலுக்குச் சென்று தர்சனம் பண்ணப் போனார். ஆனால், நடை சார்த்தும் நேரம் என்பதால், அவரால் ஒரே ஒரு க்ஷணம் மட்டுமே அம்பாளை தர்சனம் பண்ண முடிந்தது. 

நெய்தீபச் சுடரில் ஸர்வாலங்கார பூஷிதையாக பச்சைப் பட்டுப் புடவையுடன், அருள்பொழியும் முகத்தோடும் அமர்ந்திருந்த அம்பாளை ஒரு க்ஷணமே தர்சனம் பண்ணினாலும், மனஸில் அந்தக் கோலத்தை இருத்தியபடி மெட்ராஸுக்கு பஸ் ஏறினார். நேராக ஹாஸ்பிடலுக்கு சென்று, ICU வில் இருந்த குழந்தையின் தலைமாட்டில் பெரியவா அனுக்ரஹித்துக் கொடுத்த ஆப்பிளை எப்படியோ வைத்துவிட்டார். 

அழுது கொண்டிருந்த பெற்றோரிடம் பெரியவாளிடம் விஷயத்தைச் சொன்னதைப் பற்றி கூறினார். “கொழந்தை “கோமா”க்குப் போய்ட்டா! மணிக்கணக்கோ, நாள்கணக்கோன்னு டாக்டர்சொல்றார்….” 

அம்மா கதறினாள். 

சில மணி நேரங்கள் கழிந்தது. ICU வாசலில்குடும்பமே அமர்ந்திருந்தது. இதோ! குழந்தையின் உடலில் சிறு சிறு அசைவுகள்! “கோமா”; மணிக்கணக்கு; நாள்கணக்கு என்று பெரிய பெரிய டாக்டர்கள் சொன்னதையெல்லாம் அடித்து த்வம்ஸம் பண்ணிவிட்டு, 

“அம்மா!…”என்று குழந்தையை அழைக்க வைத்தது 

தெய்வத்தின்அனுக்ரஹம் ! அழுகையெல்லாம் நிமிஷத்தில் காணாமல் போனது. ஓரிரண்டுநாட்களில் ஓரளவு நன்றாகத் தேறிய குழந்தையைத் தனி ரூமுக்கு ஷிப்ட் பண்ணினார்கள். ஆப்பிள் கொண்டு வந்த உறவினரும் கூடவே இருந்தார். 

“அம்மா…..” தீனமாகக் கூப்பிட்டாள் குழந்தை. 

“என்னம்மா?….” 

“எங்கூட இருந்த பாப்பா எங்கேம்மா?…” 

“பாப்பாவா? இங்க ஏதும்மா பாப்பா? நீ ஆஸ்பத்ரிலன்னா இருக்கே! இங்க பாப்பா யாரும்இல்லியேடா!..” குழந்தை சிணுங்கினாள். 

“அந்தப் பாப்பா எங்கேம்மா? எனக்கு அவகூட வெளையாடணும்..” 

ஏதோ அரைகுறை ஞாபகத்தில் உளறுகிறாள் என்று எண்ணி அவளை சமாதானப்படுத்த வேண்டி “எந்தப் பாப்பா? எப்டி இருந்தா சொல்லு! நான் கூட்டிண்டுவரேன்” என்றாள். 

“பச்சைப் பட்டுப்பாவாடை கட்டிண்டு எங்கூடவே இருந்தாளே! அந்த பாப்பாதான்!…” மற்றபேருக்கு புரியாவிட்டாலும், ஆப்பிள் கொண்டு வந்த உறவினருக்கு பொட்டில் அடித்தார்ப்போல் புரிந்தது! 

“போறதுக்கு முன்னாடி, காமாக்ஷியை தர்சனம் பண்ணிட்டுப் போ!…” 

பெரியவா சொன்னதும், அம்பாள் ஒரு க்ஷணமே தர்சனம் தந்தாலும், ஹ்ருதயத்தை விட்டு அகலாவண்ணம், பச்சைப் பட்டுப் புடவையில் காஷி அளித்ததும் அவருக்குப் புரிந்தது; மேனியெல்லாம் புல்லரித்தது! பெரியவா சொன்னதுக்கு எத்தனை மஹத்தான அர்த்தம்! அம்பாளே அந்தக் குழந்தைக்கு ஒரு குழந்தை உருவில் வந்து கூட விளையாடி, அவளுக்கு உயிரூட்டியிருக்கிறாள்! உறவினர், மற்றவர்களுக்கு இதைச் சொன்னதும், திக்கற்றோருக்கு துணை வரும் பெரியவா இருந்த காஞ்சிபுரம் நோக்கி விழுந்து விழுந்து நமஸ்கரித்தனர்.

Thursday, November 28, 2013

பெரியவா குடுத்த பென்ஷன்

பெரியவா குடுத்த பென்ஷன் 




1952 வரை மடத்தில் கைங்கர்யம் பண்ணிக் கொண்டிருந்த ஒரு
பெரியவரின் பெயர் பஞ்சாபகேசன். பெரியவாளுடைய
கைங்கர்யம்தான் வாழ்கை! என்று இருந்த பெரிய பக்தர்.
தள்ளாமையினால் மடத்திலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்டு
பெரியவாளை பிரிய மனசில்லாமல் தஞ்சாவூரில் உள்ளே
பிள்ளையிடம் வந்தார். உடல்தான் தஞ்சாவூரில் இருந்ததே
ஒழிய, மனஸ் பூரா பெரியவாதான்! எனவே தஞ்சாவூரிலும்
ஏதோ பெரியவா கைங்கர்யம் என்று பண்ணிக் கொண்டிருந்தார். பிள்ளையாண்டான் கேட்டான்

 " ஏம்பா! உங்களுக்கு எப்போப்பார்த்தாலும் பெரியவா சேவைதானா?
நீங்க படிச்ச படிப்புக்கு, அப்போவே ஏதாவது சர்கார் உத்தியோகம்
பார்த்துண்டு இருந்தா.........இப்போ பென்ஷனாவது வந்துண்டிருக்கும்......
உங்க செலவுக்கு அது useful ஆக இருக்கும் இல்லியா?" என்றான்.

பஞ்சாபகேசன் பதறிப் போனார்!! "சிவ சிவா!!" அவருடைய உடல்
ஒருமுறை நடுங்கியது. பேசக் கூட முடியலை. ....."பெரியவாளுக்கு கைங்கர்யம் பண்ண குடுத்து வெச்சிருக்கணும்டா!......நேக்கு அந்த
பாக்யம் கெடச்சது. அவர் பக்கத்துலேயே இருந்து கைங்கர்யம்
பண்ணினேன். நான் ஒண்ணு கேக்கறேன்.....அதுனால, நீங்கள்ளாம்
என்ன கெட்டுப் போய்ட்டேள்? எல்லாரும் life ல நன்னாத்தானே
இருக்கேள்? நமக்கெல்லாம் என்ன கொறை? சொல்லு.....இப்பிடி
ஒரு குறையும் இல்லாமப் பாத்துக்கறதே என் பெரியவாதாண்டா........" ஆவேசமாகச் சொன்னார்.

"இல்லேப்பா.......சர்கார் உத்யோகம்னா, பென்ஷன் வந்திருக்குமேன்னு
ஒரு ஆதங்கத்ல சொன்னேன்" பையன் பேச்சை முடித்தான்.
கொஞ்சநாள் கழித்து, ஏதோ கார்யமாக காஞ்சிபுரம் போனான் மகன். வரிசையில் இவன் முறை வந்ததும், "நீ பஞ்சாபகேசன் புள்ளைதானே?" என்றார் பெரியவா.

"ஆமா........பெரியவா"

"ஒன் தோப்பனார் நன்னா இருக்காரா?

என்கிட்டே அவருக்கு எவ்வளவு ஆத்மார்த்தமான ப்ரியம்,
பக்தி தெரியுமோ? அவர நன்னா......வெச்சுக்கோ!

என்ன செய்வியா?

இந்த மடத்ல கைங்கர்யம் பண்ணறவாளுக்கெல்லாம் நெறைய பண்ணனும்னு எனக்கு ஆசைதான்......ஆனா, என்னால ஜாஸ்தி பண்ண முடியறதில்லை. குடுக்கறவா என்ன குடுக்கறாளோ, அத வெச்சுண்டு இந்த மடத்த நடத்த வேண்டியிருக்கு.

இது "சர்க்கார்" ஆபீஸ் இல்லேல்லியோ? அதுனால, எல்லாரும் நன்னா இருக்கணும்னு அனவரதமும் காமாக்ஷியை ப்ரார்த்திச்சுக்கறதைத் தவிர என்னால வேற என்ன செய்ய முடியும்? ஆனா....ஒன் தோப்பனார் இந்த மடத்ல பண்ணின கைங்கர்யத்துக்கும், பக்திக்கும் அவருக்கு எதாவுது பண்ணனும்னு எனக்கு ஆசை.. அதுனால மாஸாமாசம் 25 கலம் நெல்லு அவருக்காக அவர் இருக்கற கிராமத்துக்கே வரதுக்கு ஏற்பாடு பண்ணியிருக்கேன்.....'பென்ஷன்'......னா!!" என்று முடித்தாரோ இல்லையோ, மகன் தடாலென்று பெரியவா முன் சாஷ்டாங்கமாக விழுந்து கதறி விட்டான்.

"சர்வேஸ்வரா ! எங்கப்பாகிட்ட ஒரு ஆதங்கத்துலதான் பேசினேனே ஒழிய, அவரோட கைங்கர்யத்தைப் பத்தி நான் கொறையே சொல்லலை பெரியவா....என்னை மன்னிச்சுடுங்கோ!"
"ஒன்னை நான் கொறையே சொல்லலை........ப்பா ! என்னால பெருஸா எந்த ஒதவியும் பண்ணமுடியலை...ன்னுதான் இந்த சின்ன ஒத்தாசைக்கு வழி பண்ணினேன்"
அப்பா பண்ணிய சேவையை "போறும்" என்று கூறிய மகன், அது முதல் பெரியவாளுக்கே அடிமையாகி, அவர் கைங்கர்யமே மூச்சாக வாழ ஆரம்பித்தார்!

பெரியவா அருகில் இருந்து பண்ணும் சேவையும் பாக்யம்தான்! எல்லாரும் அவர் அருகிலேயே இருந்துவிட்டால்............? எப்போதும் நம் உள்ளே இருக்கும் அந்தர்யாமியான மஹா பெரியவாளுக்கு, ஸத்யம், சகல ஜீவதயை, பக்தி என்ற கைங்கர்யத்தை பண்ணுவதும் பாக்யம்தான்.

"ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர"

Friday, August 23, 2013

பாம்பு போயிடுத்து . ஆனா.......


பாம்பு போயிடுத்து . ஆனா.......


தகவல்: மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள்
பாலு மாமா ஸ்ரீ மடம் காஞ்சி


நட்ட நடு நிசியில் யானை பயந்துகொண்டு பயங்கரமாக
பிளிறியது . சிஷ்யர்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள்.
யாரும் எழுந்திருக்கவில்லை.


யானைக்கு எலி தவளை, குருவி போன்ற சிறு
பிராணிகளிடம் அதிகமான பயம் உண்டு. இரவு
வேளையானதால் , எலி , தவளை வந்திருக்கக்கூடும்
என்று நினைத்து, யானை கொட்டகைக்குச் சென்றார்கள்


அங்கே ஒரு பெரிய நல்ல பாம்பு படம் எடுத்து ஆடிக்
கொண்டிருந்தது.


உடனே பெரியவா சிஷ்யர்களை எழுப்பினார்கள். தடி
கம்புடன் ஓடி வந்தார்கள் தொண்டர்கள். " பாம்பை
அடிக்காதே, நல்லெண்ணெய் விளக்கு ஏற்றி வை
போய்விடும்."


அவ்வாறே நல்லெண்ணெய் விட்டு ஓர் அகல் ஏற்றி
வைத்தவுடன், அதுவரை கன ஜோராகப் படமெடுத்துக்
கொண்டிருந்த நாகம், வெளியே ஊர்ந்து போய்விட்டது.


இதில் ஆச்சர்யம் என்னவென்றால், நன்றாகக் காது
கேட்கும் சிஷ்யர்களுக்கு, யானையின் பிளிறல்
கேட்கவில்லை; ஆனால், காது கேட்கவில்லை என்று
சொல்லிக் கொண்டிருந்த பெரியவாளுக்கு மட்டும் யானையின்
ஓலம் செவியில் விழுந்திருக்கிறது!


ஆமாம், கஜேந்திரனின் 'ஆதி மூலமே!' என்ற பிரார்த்தனைக்
குரல், ஸ்ரீமந்நாராயணனுக்கு மட்டும் தானே கேட்டு இருக்கிறது !.


பெரியவா உடனே யானையை வேறு இடத்தில் கட்டச்
சொன்னார்கள்.


"பாம்புதான் போயிடுத்தே?"


"பாம்பு போயிடுத்து....... யானைக்கு பயம் போயிருக்காதே!..."


யானை வேறு பத்திரமான இடத்திற்கு அழைத்துச்
செல்லப்பட்டது என்ற தகவல் கிடைத்த பிறகு தான்
பெரியவா ஓய்வெடுக்கச் சென்றார்கள் .

ராமேஸ்வரத்தில் செக்கு கிடையாது


ராமேஸ்வரத்தில் செக்கு கிடையாது




தகவல்:மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள்
காஞ்சி ஸ்ரீமடம் பாலு மாமா


ஒவ்வொரு க்ஷேத்திரத்திலும் தனிப்பட்ட வழிபாட்டு
முறைகள் வழக்கத்திலிருக்கும்.

அந்த க்ஷேத்திரத்தில் இருப்பவர்களுக்கு கூடத்தெரியாத
பல செய்திகள் பெரியவாளுக்குத் தெரிந்திருக்கும்


இராமேஸ்வரத்திலிருந்து வந்தார், ஒரு புரோகிதர் , 3
தலைமுறைகளாக அந்த ஊரிலேயே இருந்து வருவதாக
சொன்னார்.

" ராமநாதஸ்வாமி கோவிலில் நடராஜாவைப்
பாத்திருக்கியோ?"

"பாத்திருக்கேன், சேவார்திகளை அழைச்சுண்டு போய்
காட்டி இருக்கேன்."

"நடராஜாவுக்கு 7 திரைகள் உண்டோ?"

புரோகிதருக்கு குழப்பம் வந்துவிட்டது , என்ன பதில்
சொல்வதென்று புரியவில்லை

பெரியவா சொன்னார்கள்:

திருவாதிரை அன்னிக்கு, 7 படுத்தாக்கள் திரையாகப்
போட்டு, நடராஜருக்கு பூஜை செய்வார்கள், ஏழு திரை
விலகியதும், நடராஜாவை தரிசிக்கலாம்.....சரி அந்தக்
கோவிலில் எத்தனை நடராஜர் இருக்கு?"

ரமேஸ்வரத்தாருக்கு கொஞ்சம் நடுக்கம்

"நான் ஒரு நடராஜாவைத் தான் பாத்திருக்கேன் "

"மூணு நடராஜர் இருக்கு !... போய்ப் பார்....."

"பார்க்கிறேன்....."

" ராமேஸ்வரம் கோவிலில் குருவாயுரைப் போல் செக்கு
ஆட்டிய நல்லெண்ணெய் அபிஷேகம் செய்வது வழக்கமா?"

" ஆமாம்" என்று ஒரு போடு போட்டார், வந்தவர்.

" ராமேஸ்வரத்தில் செக்கே கிடையாது! அந்த க்ஷேத்திரத்து
ஸ்வாமி, மண்ணைப் பிடித்து வைத்து உருவாக்கப்பட்டவர்
செக்கு ஆட்டக்கூடாது என்று ஒரு  ஐதீகம்


பின்னர், அந்த புரோகிதர் மனதில் ஒரு குறை இருக்கக் கூடாது
என்பதற்காக , குடும்ப க்ஷேமலாபங்கள் விசாரித்து பிரசாதம்
கொடுத்தார்கள் பெரியவா !!!!

Thursday, August 22, 2013

பரமாச்சார்யாளும் - பிள்ளையாரும்


பரமாச்சார்யாளும் - பிள்ளையாரும்

தகவல்: மகா பெரியவாளின் தரிசன அனுபவங்கள்
பழக்கடை P.R. தியாகராஜன், கும்பகோணம்


ஈச்சங்குடி கணேசய்யர் என்பவர் இஞ்சினியராக
வேலை செய்து ஓய்வு பெற்றவர், மனைவியோட
பெரியவா தரிசனத்துக்கு வந்தார்.

பெரியவாளிடம் அவர்

" எனக்கு ஏதேனும் ஒரு கைங்கர்யம் செய்வதற்கு
உத்தரவானால் தேவலை" என்று பிரார்த்தித்தார்.
" எவ்வளவு தொகை செலவானாலும் பரவாயில்லை!"


பெரியவா, மத்த எல்லா பக்தர்களுக்கும் பிரசாதம்
குடுத்துட்டு, கணேசய்யாரிடம் சொன்னார்: கும்பகோணத்தில்
நிறைய பிள்ளையார் இருக்கு , அராமரத்தடி , ஆற்றங்கரை-
இங்கெல்லாம் மேற்கூரையில்லாத பிள்ளையார்கள் அதிகம்.
கும்பகோணம் டவுனை சுற்றி ஒரு கிலோமீட்டர்
வரையில் உள்ள எல்லாப் பிள்ளயார்களுக்கும் - கோவிலில்
இருந்தாலும் சரி , குளத்தங்கரையில் இருந்தாலும் சரி
எண்ணெய் சாற்றி அபிஷேகம் செய்து சந்தனப் பொட்டு
வைத்து ஊதுபத்தி ஏத்தி வைத்து, தேங்காய் , வாழைப்பழம்
வெற்றிலை பாக்கு நைவேத்தியம் செய்துவிடு அது போதும்."

"எனக்கு இந்த பூஜை புனஸ்காரமெல்லாம் பழக்கமில்லை 24
வயசுலயே வடக்கே போய் செட்டில் ஆயிட்டேன், அதுனால
உள்ளுரில் யாரிடமும் அவ்ளோ பரிச்சியம் கிடையாது"
என்றார் கணேச அய்யர் .

பெரியவா ராயபுரம் பாலு என்ற சிஷ்யரை கூப்பிட்டு
"கும்பகோணம் பழக்கடை தியாகுவுக்கு ஒரு லிகிதம்
எழுதிக்குடு அவன் எல்லாம் செய்து குடுப்பான்" என்றார்கள்.

அதுமட்டுமல்லாமல் இந்த கைங்கரியம் நிறைவேறியவுடன்
என்னையும் அழைத்துக்கொண்டு தரிசனத்துக்கு வரச்
சொன்னார்களாம் .

தம்பதிகள் எங்கள் வீட்டிற்கு வந்து உடனடியாக செயல்படத்
தொடங்கினோம்

மூன்று நாட்கள், ராஜா வேத பாட சாலை வேன் கிடைத்தது

ஸ்ரீமடம் வாசற்புறம் கருங்கல் தூணிலுள்ள பிள்ளையார்
உட்பட 168 பிள்ளையார்களுக்கு பூஜை செய்தோம். 5 டின்
நல்லெண்ணெய், 1/2 கிலோ சந்தானம், 1 கிலோ கற்பூரம்
50 பாக்கெட் ஊதுபத்தி, இவைகளை கோவிலிலுள்ள
பிள்ளையார் பூஜைகளுக்காக அங்கிருந்த சிவாச்சர்யர்களிடம்
ஒப்படைத்தோம். வெளியில் இருந்த பிள்ளையார்களுக்கும்
எங்களுக்குத் தெரிந்தபடி நாங்களே அபிஷேக பூஜை செய்தோம்


கை-கால் உடைந்து பின்னப்பட்டு இருந்த பிள்ளயார்களுக்கும்
பூஜை செய்யனுமா? என்று கேட்டதற்கு , " ஏன் கைகால்
உடைந்த மனுஷாள்ளாம் உலகில் வாழவில்லையா?
அதுபோல் தான், இதுவும்!" என்று கூறி அனைவருக்கும்
பூஜை செய்யும்படி உத்தரவிட்டார்கள்


அப்போது பெரியவா கர்நூல் அருகே ஒரு கிராமத்தில்
முகமிட்டிருந்தார்கள் .

கணேசய்யர் குடும்பமும் நானும் அங்கே சென்று
விவரங்களை கூறினோம்,

' இன்னும் 6 பிள்ளையார் இருக்கே? எப்படி விட்டு போச்சு
என்று பெரியவா கேட்டதும் எங்களுக்கு திகைப்பு ஏற்ப்பட்டது
'சாக்கோட்டை பக்கம் ஒரு பிள்ளையார், சுவாமிமலை போகும்
சாலையில், குடியானவர்கள் தெருவில், அவர்கள் மிகவும்
கோலாகலமாகக் கொண்டாடும் ஒரு பிள்ளையார்,
அரசலாற்றங்கரையில் ஒரு பிள்ளையார் , மரத்தடி பிள்ளையார்
என்று ஆறு இடங்களை குறிப்பிட்டு சொன்னார்கள் பெரியவா !

" அதனாலே பரவாயில்லை , ஊருக்கு போனதும் இந்த 6
பிள்ளையாருக்கும் அபிஷேக ஆராதனை பண்ணிவிடு"
என்று சமாதானப்படுத்தி எங்களுக்கு பிரசாதம் கொடுத்து
திருப்தியுடன் அனுப்பி வைத்தார்கள்.

Wednesday, May 29, 2013

மஹா பெரியவா 120 வது ஜெயந்தி விழா காட்சிகள்










ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

மஹா அனுஷஜயந்தி(120 வது) மஹோத்சவம்
நிறைவுக்காட்சிகள்

இடம் : சென்னை மேற்கு மாம்பலம் , ஸ்ரீ அயோத்ய அச்வமேத
மகா மண்டபம்




" தென்னாடுடைய பெரியவா போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
ஸர்வக்ஞா! ஸர்வவ்யாபி பெரியவா சரணம்
மாயபிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி"




மஞ்சள் குடமெடுத்து அபிஷேகித்தோம்
மங்களம் வாழ்வில் அனைவரும் பெற

மலர்கள் குடமெடுத்து அபிஷேகித்தோம்
மனங்கள் மகிழ்ச்சி பெற

சங்கில் நீரெடுத்து சங்கரனை அபிஷேகித்தோம்
சங்கடங்கள் தீர்ந்திடவே

பன்னீர் குடமெடுத்து அபிஷேகித்தோம்
நாட்டில் நன்னீர் பெற்று செழிக்கட்டும் என்று

பால் குடம் எடுத்து அபிஷேகித்தோம்
பாவங்கள் அகன்று புண்ணியம் கிடைத்திடவே

சந்தனக் குடமெடுத்து அபிஷேகித்தோம்
சஞ்சலங்கள் அகன்று சதா உன்னை நினைத்திடவே

பஞ்சாமிர்தக் குடமெடுத்து அபிஷேகித்தோம்
நெஞ்சார உனை நினைத்து மகிழ்ந்திடவே

புஷ்ப ரத்தத்தில் அமர்த்தி பவனிகண்டோம்
புவி எங்கும் செழுமை நிறைந்திடவே

தயிர்க் குடமெடுத்து அபிஷேகித்தோம்
உயிர் காக்கும் குருவே உன் அருள் வேண்டி 

திருநீறு குடமெடுத்து அபிஷேகித்தோம் 
இரு வேறு மனம் வேண்டா நிலை வேண்டி

அன்னப்பாவாடை கொண்டு அலங்கரித்தோம்
என்னும் எண்ணங்கள் தின்னமாகிடவே

1008 இளநீரில் நீராட்டி மகிழ்ந்தோம்
அவ்வமயமே அனைவரும் அதை பருகி மகிழ்ந்தோம்

குங்குமக் குடமெடுத்து அபிஷேகித்தோம்
நின் சிவந்த மேனியை காமாட்சியாய் கண்டு மகிழ்ந்தோம்

நிறைவான நாள் இன்று 1008 வடை மாலை
1008 ஜாங்கிரியும் ஜடை போல பின்னி பார்த்து மகிழ்ந்தோம்


ஒய்யார ஊஞ்சலில் நீயாடக்கண்டு , மெய்யுருகி நின்றோம்
பொய் புகலேன் சத்தியம் சர்வேஸ்வரா நின் ஜெயந்தி விழா
நாங்கள் மெய் சிலிர்த்து உணர்ந்த விழா 

Friday, May 24, 2013

ஸஹசர போஜனமும் - லக்ஷதீபமும்



ஸஹசர போஜனமும் - லக்ஷதீபமும் 



ஏழை பாட்டி , மகா பெரியவாளிடம் அபார பக்தி ,
கை காசை கொண்டு மிகவும் சிக்கனமான வாழ்க்கை
மடி ஆசாரம் ரொம்ப உண்டு .

தினமும் பெரியவா இருக்கும் இடத்தை சுத்தம் செய்து
கோலம் போட்டு தீபம் ஏற்றி வைப்பது வழக்கம் . இரண்டு
மாற்று உடைகள் தான் பாட்டியின் சொத்து.

ஒரு பக்தர் அரிசிக் குருனையும், வெல்லமும் பெரியவாளிடம்
சமர்ப்பித்தார், அவற்றை நல்லபடியாக விநியோகம் செய்ய
வேண்டுமே?

பாட்டிக்கு பெரியவா உத்தரவு போட்டார்கள்!!

" காஞ்சிபுரத்தில் உள்ள எல்லா எறும்புப் புற்றுக்களிலேயும்
கொஞ்சம் கொஞ்சம் போட்டுட்டு வா, அரை ஆழாக்கு
வீதம் போடு....." என்றார்கள்

பாட்டியும் அவ்விதமே அலைந்து திரிந்து, பல எறும்புப்
புற்றுகளில் அரிசிக் குருணை , வெல்லம் போட்டு விட்டு
வந்தாள்.

அந்த வேலை முடிந்ததும் பெரியவா பாட்டியை
அழைத்தார் .....

பெரிய மாலை போல் திரிநூல் இருந்தது , ஒரு டின்
நிறைய எண்ணை இருந்தது .....

திரிநூலை கட் பண்ணி , ஒவ்வொரு கோயிலாக போய்
எவ்வளவு விளக்கு போடா முடியுமோ, அவ்வளவுக்கு
போடு என்றார். ஒருநாளைக்கு 2 - 3 கோயிலுக்கு போனால்
போதும் என்றார்கள் பெரியவா

பாட்டிக்கு பரம சந்தோசம் , பெரியவா சொன்னாமாதிரி
பக்தி சிரத்தையுடன் நாள் தோறும் பல கோவில்களுக்கு
சென்று முடிந்த அளவு விளக்கு போட்டு பெரியவா
உத்தரவை நிறைவேற்றினாள். அந்த செய்தியையும்
பெரியவாளிடம் பாட்டி தெரிவித்தாள்.

இந்த பணிகள் எல்லாம் முடிந்த சிலநாளில், ஒரு பெரிய
மனிதர் ஆடம்பரமாக, மடத்துக்கு வந்தார், பெரிய மனுஷர்
தோரணை , அகங்கார நடையுடன்.

" ஸஹஸ்ரபோஜனம் செய்துவிட்டு வந்திருக்கேன்,
லக்ஷதீபம் போட்டிருக்கேன் ....." என்று தற்பெருமை
தொனிக்கப் பெரியவாளிடம் சொன்னார்.

பெரியவாளுக்கு வருடைய அகம்பாவம் புலப்பட்டது.
தர்ம காரியங்கள் செய்துவிட்டு அதை பற்றி பேசிக்கொள்வது
புண்ணியத்தைத் தராது. தர்மம் செய்தவருக்கு நற்பலன்கள்
கிடைக்காமல் போய்விடும்.

வினயத்தோடு சொல்லியிருந்தால் மகான் சந்தோஷப்பட்டு
இருப்பார். ஆனால் அந்த மனிதர் அகம்பாவத்தோடு பேசினார்.

பெரியவா சொன்னார்கள்:

இங்கே ஒருபாட்டி இருக்கா லக்ஷபோஜனம் செஞ்சிருக்கா
பல லக்ஷம் தீபம் போட்டிருக்கா !!!

அந்த பணக்காரருக்கு சற்று திடுக்கிட்டது. " யார் அந்தப்
பாட்டி.... அவ்வளவு பெரிய பணக்காரி?என்று
தெரிந்துகொள்ள ஆவல் பிறந்தது.

பெரியவா அந்த பாட்டியை அழைத்து வரசொன்னார்கள் !!

"இவள்தான் அந்த பாட்டி , அவ்வளவு உத்தமமான காரியத்தை
செய்தவள்....."

அழுக்கான கிழிசல் புடவையைக் கட்டிக் கொண்டு வந்து
நின்ற பாட்டியைப் பார்த்து, பெரிய மனிதர் அயர்ந்து போனார்
பாட்டியின் நெற்றியில் மிளிர்ந்த வெள்ளை வெளேரென்ற
திருநீற்றுப் பூச்சு , அவளுடைய இதய சுத்தத்தை
விளக்கினாற்போலிருந்தது.

பெரியவா சொன்னார்கள்:

"ஸர்வ ஜீவனிலும் பகவான் வியாபித்திருக்கிறார். பிரும்மா
முதல் பிபீலிகம் (எறும்பு) வரை பகவான் இருக்கிறார் ,
மனுஷ்யாளிடத்திலும் இருக்கிறார்.

"நீ ஆயிரம் பேருக்கு அன்னம் போட்டிருக்கே , ஆனால்
இந்தப் பாட்டியோ பல லக்ஷம் ஜீவன்களுக்கு (எறும்புகளுக்கு)
ஆகாரம் போட்டிருக்கா; எதோ ஒரு கோவிலில் லக்ஷ
தீபம் போட, நீ திரவியம் கொடுத்திருக்கே. லக்ஷம்
தீபத்துக்கு , எண்ணை , திரி போட்டு உனால் ஏற்றவே
முடிந்திருக்காது. ஆனால் இந்த பாட்டியோ பல
கோயில்களுக்கு போய் இருக்கிறாள், பக்தி சிரத்தையாய்
அகல் வாங்கி , தானே திரிபோட்டு எண்ணை இட்டு
தன் கையாலேயே தீபம் போட்டிருக்கிறாள்..."

கேட்டுக்கொண்டிருந்த பிரமுகர் தலை குனிந்தார்.

பெரியவரிடம் பவ்யமாகவும், அகங்காரம் இல்லாமலும்
பேசவேண்டும் என்பதை புரிந்து கொண்டு, பின்னால்
பலரும் நிற்பது கண்டு வழிவிட்டு நகர்ந்தார்.

சிறிது நேரம் கழித்து பெரியவா , அந்த மனிதரை அழைத்து
அமரச்செய்து பல சமாசாரங்கள் பேசி பிரசாதம் கொடுத்து
அனுப்பி வைத்தார் .

அடக்கம் கற்றுக்கொண்ட அவர் ஆனந்தமாக சென்றார்.

தகவல் : மகா பெரியவாளின் தரிசன அனுபவங்கள் - பகுதி - 3

Monday, May 20, 2013

'ஸத்யம் ப்ருயாத்'

'ஸத்யம் ப்ருயாத்'








விஷ்ணுபுரம் ராமமூர்த்தி அய்யர் என்பவர்
ஸ்ரீ மடத்தின் அத்யந்தசிஷ்யர். பெரியவாளிடம்
வேதா விசுவாசம் உடையவர். வாத்யமார்களைக்
கொண்டு ஸ்ரீ மடத்துக்கு ஏராளமாகத் தொண்டு செய்தவர்.

ஒருசமயம் பெரியவாளிடம் இப்படிப் பிரார்த்திதுக் கொண்டார்.

"என்னுடைய நெருங்கிய பந்துவுக்கு சித்த ஸ்வாதீனம்
இல்லாமல் கஷ்டப்படுகிறார். பெரியவா அனுக்கிரஹத்தால்
அந்த துன்பம் நீங்கனும்....."

ஸ்ரீ பெரியவா, " வாரணாசியிலே இருக்கும் பிரும்ம ஸ்ரீ
ராமச்சந்திர தீட்சதரிடம் போய், பகவத் கீதை பாஷ்யம்
முழுவதும் படிச்சுட்டு வா" என்றார்கள்.

ராமமூர்த்தி அய்யர், மனம் நிறைந்து திரும்பிச்
சென்றவுடன் அருகிலிருந்த ஒரு வித்வானைப் பார்த்து

"ஸத்யம் ப்ருயாத் ப்ரியம் ப்ருயாத்,
ஸத்யமயி அப்ரியம் ந ப்ருயாத் - என்கிறது சாஸ்திரம்.

புத்தி ஸ்வாதீனம் இல்லாமல் போனதற்கு காரணம்
முன் ஜன்மத்தில் அவர் செய்த புண்ணியம்! சத்யம்
பேசுவதற்கு இரண்டு பேர்களால் தான் முடியும் -
'பாலோன்மத்தவத்' என்கிறார் ஆசார்யாள். குழந்தை,
பொய் பேசாது.

அப்பா இல்லேன்னு, சொல்லச் சொன்னா! - என்று சொல்லும்.
புத்தி ஸ்வாதீனமில்லாதவனும் அப்படியேதான். பொய்
சொல்லத் தெரியாது. (அதனாலே பாவம் சம்பவிக்காது)

" ராமமூர்த்தியின் பந்துவுக்குப் புத்தி ஸ்வாதீனம் இல்லை
என்பதற்குக் காரணம், அவர் செய்த புண்ணியம் - என்பது
சத்யம். ஆனால், அப்படி சொன்னேனேயானால் அது
ராமமூர்த்திக்கு அப்பிரியம் (சந்தோஷத்தை கொடுக்காது)
"சாஸ்திரம், 'ஸத்யமேயானாலும் பிரியமில்லாததைச்
சொல்லாதே' (ஸத்ய மயி அப்ரியம் ந ப்ருயாத்) என்கிறது.
அதனால் நான் பிரியத்தைச் சொல்லிவிட்டேன்


பண்டிதர் பரவசத்தில் வியந்து நின்றார் ,
பண்டிதர் மட்டுமா , படித்த நாமனைவரும் அன்றோ




தகவல்:- தரிசன அனுபவங்கள் - பகுதி - 3

Saturday, April 27, 2013

தள்ளாடிய பலகை


தள்ளாடிய பலகை!


1956ல் கும்பகோணம் மகாமக விழாவிற்கு காஞ்சிப்பெரியவர் வந்திருந்தார். உடல்நலக்குறைவு காரணமாக விழாவில் பங்கேற்கவில்லை. பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பதையும் தவிர்த்தார்
.
அன்று, வெளிநாட்டவர் ஒருவர் சுவாமியைத் தரிசிக்க வந்திருந்தார். சுவாமி காய்ச்சலால் அவதிப்படும் விபரத்தை பணியாளர்கள் எடுத்துச் சொல்லியும், அவர் செல்ல மனமில்லாமல் அங்கேயே நின்றார். இதுபற்றி, பணியாளர் ஒருவர் சுவாமியிடம் தெரிவித்தார்.
வெளிநாட்டவரை தன்னிடம் அழைத்து வரும்படி பெரியவர் கட்டளையிட்டார். ஒரு பலகையில் அமர்ந்திருந்த பெரியவரைக் கண்ட வெளிநாட்டவர் பணிவுடன் வணங்கினார்.

அப்போது, தான் அமர்ந்திருந்த பலகையைச் சற்று தள்ளி வைத்த பெரியவர், அவரின் கேள்விகளுக்கு பதிலளிக்க தொடங்கினார். அப்போது அந்த பலகை இப்படியும் அப்படியுமாக தள்ளாடியது.

அதை வியப்புடன் பார்த்த வெளிநாட்டவர், ""இதென்ன அதிசயம்! பலகை எப்படி தானாக ஆடுகிறது?'' என்று கேட்டார். தனக்கிருந்த குளிர் காய்ச்சலை பலகைக்கு மாற்றியிருப்பதால், அது தள்ளாடுவதாக பெரியவர் தெரிவித்தார். அவரிடம் பேசி
முடித்தபின், மீண்டும் பெரியவர் பலகை மீது அமர்ந்தார். மீண்டும் பெரியவரை காய்ச்சல் தொற்றிக் கொண்டது. வெளிநாட்டவர் வியப்புடன் அங்கிருந்து புறப்பட்டார்