Showing posts with label பாயச வகைகள். Show all posts
Showing posts with label பாயச வகைகள். Show all posts

Friday, October 12, 2012

பால் பாயசம் ! பால் பாயசம் !! பால் பாயசம்!!!

பால் பாயசம்


பால் பாயசம் , மாடு பால் கறந்து அந்த பாலில் பாயசம் செய்து 
சாப்பிட்ட காலம் மலையேறிவிட்டது 

இன்று பாகெட்  பால், பதப்படுத்தப்பட்ட பால் இப்படி பலவிதம் 

பாலின் சுவையே பாயசத்தின் சுவை



தேவை 2 ஆழாக்கு அரிசி


பால் 2 லிட்டர்
சர்க்கரை 1/2 கிலோ
ஏலக்காய் 5
முந்திரி 10 
நெய் 25 கிராம்
பாதம் 5 (விருப்பத்திற்க்கேற்ப)
திராட்சை 10 (விருப்பத்திற்க்கேற்ப)





முதலில் பாலை ஒரு பெரிய பாத்திரத்தில் விட்டு காய்ச்சி வைக்கவும்




இதில் பாதி பாலை ஒரு பாத்திரத்தில் விட்டு , அரிசியை களைந்து
இந்த பாலில் போட்டு கொதிக்க விடவும் , அடிக்கடி கிளறிக்கொண்டே
இருக்கவும் , பிறகு தனியாக எடுத்து வைத்த பாலை கொஞ்சம் கொஞ்சமாக
விட்டு அரிசி குழைந்து வரும்வரை கிளறி விடவும். பிறகு இதனுடன்
சர்க்கரை சேர்த்து நன்றாக அடிபிடிக்காமல் கிளறவும் (அடுப்பு சிம்மில் இருப்பது
நலம்)


இதனிடையே , முந்திரி , பாதம், திராட்சை நெய்யில் வறுத்து வைக்கவும்




அரிசி பெரும்பாலும் குழைந்து கரைந்து வரும் பதத்தில் அடுப்பில் இருந்து
இறக்கி , ஏலக்காய் , முந்திரி , பாதம் திராட்சை சேர்க்கவும் (பாதம், திராட்சை
அவரவர் விருப்பம்) நான் சேர்க்க மாட்டேன் .



இவ்வளவேதான் , சுவையான சூடான பால் பாயசம் தயார் , அனைவருக்கும்
சூடாக சுவைக்க கொடுத்து நீங்களும் சுவைத்து மகிழுங்கள்.


சிறு குறிப்பு : சற்று விரைவாக அரிசி குழைய வேண்டும் என்றால் அரிசியை
களைந்து ஒரு துணியில் உலரவைத்து , பிறகு மிக்சியில்
ஓன்று இரண்டாக உடைத்து பாலில் போடலாம்


பால் பாயசம் பருகப் பருக இறுதிவரை பரவசம் 

Thursday, October 11, 2012

சேமியா பாயசம்

சேமியா பாயசம்


தேவை:


சேமியா 100 கிராம்
பால் 1 லிட்டர்
சர்க்கரை 1/4 கிலோ
ஏலக்காய் 5
முந்திரி 10
திராட்சை 5




முதலில் வாணலியில் 2 முட்டை நெய் விட்டு
சேமியாவை பொன்வறுவலாக வறுத்துக்கொள்ளவும்


உடனே , முந்திரி , திராட்சை , நெய்யில் வறுத்து வைத்துக்கொள்ளவும்


அடுப்பில் 2 டம்பளர் தண்ணீர் வைத்து நன்றாக தளைக்க கொதிக்க விடவும்
கொதிக்கும் தண்ணீரில் வறுத்து வைத்துள்ள சேமியாவை போட்டு                        ( அடிபிடிக்காமல்) கிளறவும் . பிறகு சர்க்கரை அதனுடன் சேர்க்கவும் .




அடுப்பில் இருந்து இறக்கி , ஏலக்காய்,  நெய்யில் வருத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும் சற்று சூடு ஆறியவுடன் , காய்ச்சி ஆறிய பாலை அதனுடன் சேர்க்கவும்





சுவையான சேமியா பாயசம் த தயார்.

கடலைப்பருப்பு பாயசம்

கடலைப்பருப்பு பாயசம் 



தேவை:

கடலைப்பருப்பு 1 கப் 
பயத்தம்பருப்பு   1 கப் 
வெல்லம்  துருவியது 2 கப் 

ஏலக்காய்      5 
முந்தரி          5
தேங்காய் துருவல் 1/2 கப் 
அரிசி             2 டீஸ்பூன் (ஊறவைக்கவும் )
காய்ச்சிய பால்   1 டம்பளர் 




கடலைப்பருப்பு பயத்தம் பருப்பு  ரெண்டும் சேர்த்து வேகவையுங்க 

வெந்ததும் அதனுடன் தேவையான அளவு வெல்லம்  சேர்த்து கொதிக்க வைங்க 

அவ்ளவுதான்  பாயசம் தயார்  





இதனுடன் ,  ஏலக்காய் , முந்திரி சேர்க்கவும் (முந்தரி நெய்யில் வறுத்து)


இதன் சுவை கூட்ட , கொஞ்சம் அரிசி (ஊறவைத்தது) கொஞ்சம் தேங்காய் துருவல் 
அரைத்து கொதித்த பாயசத்துடன் சேர்த்து மேலும் சிறிது நேரம் (5 நிமிடம்)
கொதிக்க விடவும்.  காய்ச்சி ஆறிய  பால் சேர்க்கலாம் சுவை மேலும் கூடும் 

பெரும்பாலான பண்டிகைகளுக்கு இது ஒரு சிறந்த பாயசம்