Showing posts with label ஊறுகாய் வகைகள். Show all posts
Showing posts with label ஊறுகாய் வகைகள். Show all posts

Thursday, November 28, 2013

வெஜிடபிள் பிக்கிள்

வெஜிடபிள் பிக்கிள்  -  By:- Velammal Gurusamy

புரட்டாசி மாசத்து வெயிலைப் பார்த்ததும் ஊறுகாய் போடும் 
ஆசை வந்தது, அதுவும் வெஜிடபிள் ஊறுகாய். இப்பல்லாம் 
காய்களை ஊறுகாய் மாதிரி தொட்டு நக்கித்தான் சாப்பிட
வேண்டியிருக்கு.விலை அப்படி.

இருந்தாலும் ஆரோக்கியமான வாழ்வுக்கு சாதத்தின் அளவு காய் சாப்பிடனுமுன்னு மருத்துவம் சொல்கிறது. நாம் காய்களை பல 
விதத்திலும் பயன் படுத்துகிறோம். அதில் ஊறுகாயும் ஒரு விதம்.

இந்த ஊறுகாய்க்கு,

நாலு மடங்கு வெட்டிய காய் என்றால்,
ஒரு மடங்கு எலுமிச்சை ஜூஸ்,
ஒருமடங்கு உப்பு ,
அரைமடங்கு மிளகாய் வத்தல் பொடி,
அரைமடங்கு கடுகுப்பொடி,
கால்மடங்கு வெந்தயப்பொடி,
தேவையான அளவு பெருங்காயப்பொடி.
ஒரு மடங்கு நல்லெண்ணெய்.



தேவை .
கிழங்கு ,தண்ணீர் காய்கள் தவிர,
காரட்,
பீட்ரூட்,
பீன்ஸ்,
கொத்தவரை,
பாவக்காய்,
இஞ்சி,
பூண்டு,
ஜூஸ் பிழிந்துவிட்டு மீதமுள்ள எலுமிச்சையின் தோலில் சிலவற்றையும் காயுடன் சேர்த்து ஒருஇன்ஞ்ச் நீளமாக வெட்டிக்கொண்டேன்.



.கொத்தவரையும் ,பீன்ஸையும் மறுபடியும் நீளவாக்கில் வெட்டினேன் ,வெட்டியகாய்களை அளந்து அதில் நாலில் ஒருபங்கு அளவில் ஜூஸை காயில் விட்டு கிளறி ஒருஇரவு முழுவதும் ஊறவைத்தேன்.

 மறுநாள்காலையில் மற்ற பொருட்களையும் எண்ணெய்யும் ஊற்றி கிளறி வெய்யிலில் காயவைத்தேன் .மூன்று நாட்களுக்கு பிறகு வெஜிடபிள் பிக்கிள் சாப்பிட தயாராக இருந்தது.

Friday, March 29, 2013

குறு மிளகு - மாங்காய் இஞ்சி ஊறுகாய்




குறு மிளகு , மாங்காய் இஞ்சி ஊறுகாய்


பச்சை மிளகு , மாங்காய் இஞ்சி

By Saraswathi Jayaraman




Mango Ginger is a family of ginger or turmeric. This is available in certain seasons only. This looks like normal ginger but it smells like raw mango. Some call it as white ginger. This has the best medicinal value and is very good for digestion. Unripe pepper is plucked fresh from the plant before it ripens.



















Mango ginger- 1 cup(peeled and sliced)

Fresh unripe pepper- 3 cups

Lemon juice- 4 tbsp

Salt- As preservative

Turmeric powder- 2 tsp

Boiling water
Wash the unripe pepper and cut into one inch length.
Wash the mango ginger, peel off the skin,and slice it like a disc.
Boil ample of water to immerse the mango-ginger and green-pepper.
Add salt and turmeric in the water.
Keep the boiled water aside until becomes Luke warm.
Now add the mango-ginger and unripe-pepper into it.
After it gets cooled, store it in a air-tight container.
It goes well with Curd rice.
Since it is the pickle made without oil, it is good for health.

Shelf life will be 10 to 15 days

மாகாளி கிழங்கு ஊறுகாய்

மாகாளி கிழங்கு ஊறுகாய்

மலையில் விளைவது மாகாளி
நாட்டில் விளைவது நன்னாரி

இப்படி மலைபிரதேசத்தில் விளையக்கூடிய
மாகாளிக்கிழங்கு ஒரு நல்ல ரத்த விருத்தி
செய்யக்கூடிய  கிழங்கு வகை , இதை
ஊறுகாய் செய்து சாப்பிடுவதை தவிர
வேறு எந்த பயன்பாட்டுக்கும் தேவைப்படாது.

கடையில் வாங்கும்போது இப்படி இருக்கும் , இதை வாங்கும்போது
மேல்புற தொலை விரல் நகங்களால் கீறிப்பார்த்து வாங்கவேண்டும்
இளசாக இருந்தால் தோல் சுலபமாக உரிந்து வரும், முத்தலாக
இருந்தால் தோல் உரிந்து வருவது தாமதப்படும் (கடினமாக இருக்கும்)

வாங்கிய மாகாளியை இவ்வாறு தோல் சீவி வைத்துக்கொள்ளவும்

தோல் சீவிய மாகாளியை இவ்வாறு பொடி பொடியாக நறுக்கி
நீர் விட்டு நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

இவ்வாறு சுத்தம் செய்த மாகாளியை ஒரு பாத்திரத்தில் போட்டு
அதில் நன்றாக புளித்த தயிரை ஊற்றவும் (1 கிலோ மாகாளிக்கு 2
லிட்டர் தயிர்) தயிரை வீட்டில் பால் வாங்கி  தயிராக்கி புளிக்கவிடவும்
(குளிர் சாதன பெட்டியில் வைக்கவேண்டாம் ) இவ்வாறு ஊற்றியபின்
1 விரலி மஞ்சள், 1 டீஸ்பூன் கடுகு, 1௦ வரமிளகாய் , இது மூன்றையும்
மிக்சியில் நன்றாக அரைத்து மாகாளியுடன் சேர்த்துவிடவும்.

நன்றாக 2 முதல் 3 நாட்கள் வரை ஊறட்டும் , பிறகு எடுத்து
உபயோகப்படுத்தவும். இதன் ஆயுட்காலம் குறைந்தது 1 முதல்
2 வருடம் வரை.


இதுபோன்ற நல்ல மஞ்சள் நிறத்தில் இந்த ஊறுகாய் இருக்கும்

இதை எல்லாவிதமான உணவிற்கும் ஊறுகாய் போல் தொட்டுக்கொள்ளலாம்

மேலும் , எல்லாவிதமான உப்புமாவிற்கும் சைடு டிஷ்ஆக உபயோகிக்கலாம்

பருப்பு பொடி சாதம் பிசைந்து , இந்த மாகாளி சாரு கொஞ்சம் இலையில்
போட்டு , குழம்பு போல தொட்டுக்கொண்டு சாப்பிட்டு பாருங்கள் , சுவை
நாக்கை விட்டு அகலாது.

Wednesday, March 20, 2013

புளி இஞ்சி (வருடாந்திர இஞ்சி)



புளி இஞ்சி (வருடாந்திர இஞ்சி) 

By:(Late) S.K.Lakshmi (My beloved Mother)


இஞ்சி லாபம் மஞ்சளிலே என்பார்கள்
ஆனா எனக்கு ஒரு நல்ல ஊறுகாயிலே 







எஞ்சி இருந்த இஞ்சிய என்ன பண்றதுன்னு தெரியாம
அக்கம் பக்கம் இருக்கறவங்ககிட்ட கெஞ்சி கெஞ்சி பார்த்து
கொஞ்சமும் மசியல யாரும் வேணும்னா ஒரு துண்டு
இன்னைக்கு பொங்கலுக்கு எடுத்துக்கறேன், நான் கொஞ்சம்
பச்சடி பண்ண எடுத்துக்கறேன், நான் கொஞ்சம் கஷாயம்
போட எடுத்துக்கறேன் அப்டின்னு ஆளுக்கு ஒரு துண்டு
எடுத்துண்டி மிஞ்சிபோச்சு அப்பாவும் கணிசமான அளவு

மிஞ்சி போச்சு

அம்மா சொன்ன பக்குவம் எங்கன்னு தேடி கண்டு
புடிச்சு செஞ்சேன் , சுவையான புளி இஞ்சி

புளி இஞ்சி

தேவை :

இஞ்சி 1/2 கிலோ
வெல்லம் : 100 கிராம்
புளி : எலுமிச்சை அளவு
கடுகு 2 டீஸ்பூன்
வெந்தயம் 2 டீஸ்பூன்
உப்பு : தேவைக்கேற்ப

இஞ்சியை நன்றாக தண்ணீர்விட்டு சுத்தம் செய்து
தோல் சீவி , சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும் .
மீண்டும் ஒருமுறை தண்ணீரில் சுத்தம் செய்து
நீர் வடிகட்டி வைக்கவும் .

புளியை நீர்விட்டு நண்டாக கெட்டியாக
கரைத்து வைத்துக்கொள்ளவும்

மிதமான சூட்டில் அடுப்பில் , வாணலியில் 1 கரண்டி
(குழம்பு கரண்டி ) நல்லெண்ணெய் விட்டு, பெருங்காயம்
கடுகு தாளித்து , பிறகு சிறுதுண்டுகளாக நறுக்கிவைத்த
இஞ்சியை போட்டு நன்றாக வதக்கவும்.






சிறிது நன்றாக வதக்கியவுடன் அதனுடன் புளி
கரைசல் சேர்த்து , வெல்லம் , உப்பு சேர்த்து நன்றாக
கொதிக்கவிடவும். புளி தண்ணீர் கெட்டியாகி
என்னை மேலே வரும் பதத்தில் அடுப்பில் இருந்து
இறக்கிவிடவும் . இதன் மேல் வெந்தயம் வறுத்து
பொடி செய்து போட்டு நன்றாக கிளறிவிடவும் .

சூடு ஆறியதும் சுவைத்து பார்க்கவும்
பிறகு ஒரு கண்ணாடி பாத்திரத்தில் எடுத்து
பத்திரப்படுத்தி வைக்கவும். 





குளிர் சாதனப்பெட்டியில் வைத்து பத்திரப்படுத்தவும்
எடுத்து உபயோகப்படுத்தும் பொழுது நன்றாக் கிளறிவிட்டு
எடுத்து உபயோகிக்கவும்.

உபயோகிக்கும் காலம்:- குறைந்தது 6 மாத காலம்
வரை கெட்டு போகாமல் இருக்கும்.


Thursday, October 11, 2012

பாவக்காய் ஊறுகாய்


பாவக்காய்  ஊறுகாய் 


பாவக்காய் , பிட்லை, கூட்டு, வதக்கல் இதெல்லாம் சரி 
நாம ரொம்ப விரும்பி சாப்பிடுவோம் , இப்ப இதே பாவக்காய்ல 
ஊறுகாய் செஞ்சு சாப்பிடலாமா , நிச்சயமா கசக்கவே கசக்காது 



கொம்பு பாகற்காய்        1/4 கிலோ 
மிளகாய் தூள்               50 கிராம் 
வெந்தய பொடி             1 டீஸ்பூன் 
மிளகு பொடி                 1 டீஸ்பூன் 
மஞ்சள் பொடி               1 டீஸ்பூன் 
பெருங்காயம்                 2 டீஸ்பூன் 
உப்பு                               தேவைக்கேற்ப 
சிட்ரிக் அசிட்                  1 டீஸ்பூன் 
எண்ணை                       தேவைக்கேற்ப 





பாவக்காயை ரவுண்டு ரவுண்டா நறுக்கிக் கொள்ளவும் நடுவில் உள்ள 
விதையை நீக்கி விட்டு நீரில் நன்றாக அலம்பி , ஒரு துணியில் 


உலர்த்தவும்  பிறகு அதை அதே துணி கொண்டு நன்றாக துடைத்து 
பிறகு ஒரு ஜாடியில் போடவும்.  இதனுடன், மஞ்சள் பொடி,வெந்தய பொடி, மிளகு பொடி 
உப்பு, காரப்பொடி, பெருங்காயம் , சிட்ரிக் அசிட் சேர்த்து நன்றாக கைபடாமல் 
குலுக்கி விட்டு ஜாடியி கற்றுபுகாமல் மூட்டி வைத்து விடவும் .



மறுநாள் காலை தேவையான எண்ணையை ஊற்றவும். பிறகு 
நன்றாக மூட்டி வைத்து , தினம் ஒருமுறை கரண்டியால் கிளறி விடவம் 

ஒருவாரம் கழித்து உபயோகப்படுத்தலாம். 

தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள தேவாமிர்தமாக இனிக்கும் 



Sunday, September 23, 2012

பூண்டு ஊறுகாய்

பூண்டு ஊறுகாய்

பூண்டு உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடியது
பூண்டு அன்றாடம் நம் உணவில் எதாவது ஒருவகையில் சேர்த்துக்கொள்வது
சாலச்சிறந்தது .

பூண்டு ரசம், பூண்டு குழம்பு, பூண்டு துகையல் , அப்டி எதுவும் இல்லைன்னாலும் இரவு அருந்தும் பாலில் 10 பல் பூண்டு போட்டு
காய்ச்சி குடிப்பது மிகவும் நல்லது.

சரி இப்பொழுது நாம் பூண்டு ஊறுகாய் செய்முறை அறிவோம்




தேவையானவை :

பூண்டு 1/4 கிலோ
மிளகாய்ப்பொடி  4 டீஸ்பூன்
உப்பு  தேவையான அளவு
வெந்தயம் 2 டீஸ்பூன்
என்னை  50 கிராம்
கடுகு 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு

அடுப்பில் வாணலியில் மிதமான சூட்டில் எண்ணை விட்டு
கடுகுதாளித்து உரித்த பூண்டை போட்டு நன்றாக வதக்கவும்
இதனுடன் உப்பு மிளகாய்த்தூள் சேர்த்து மேலும் 2 நிமிடம்
வதக்கி அடுப்பை அணைத்துவிடவும்

பிறகு வந்தயம் வறுத்து சிறு உரலில் இடித்து பொடி  செய்து
போடவும்.

சற்று சூடு ஆரிய நிலையில் இதனுடன் எலுமிச்சை சாறு
வேண்டும் அளவு சேர்க்கவும் .




பூண்டு ஊறுகாய் தயார்,  3 நாட்கள் கழித்து உபயோகிக்கலாம்
1 மாதம் வரை  இது கெடாமல் இருக்கும் ,





Wednesday, September 12, 2012

நெல்லிக்காய் ஊறுகாய்

                                                       நெல்லிக்காய் ஊறுகாய்

பெரிய நெல்லிக்காய்  20

நன்றாக அலம்பி , ஒரு துணியில் நன்றாக
துடைத்து வைக்கவும் நெல்லிக்காயை


தேவையானவை :-

பெருங்காயம்,
உப்பு(தேவைக்கேற்ப)
நீட்டு மிளகாய் (வறுத்து பொடி செய்ய)


அடுப்பில் வாணலியில் 50 மல. எண்ணை  விட்டு பெருங்காயம்
பொரித்து அதில் கடுகு சேர்த்து , கடுகு வெடித்ததும் நெல்லிக்காயை
போட்டு சிறிது வதக்கவும் . இதை ஒரு பாத்திரத்தில் எடுத்து
வைத்து கொள்ளவும்

பிறகு  வாணலியில் எண்ணை விட்டு நீட்டு மிளகாய்
வத்தல் வறுத்து மிக்சியில் பொடி செய்து கொள்ளவும்

இந்த மிளகாய் பொடியை நெல்லிக்காய் உள்ள பாத்திரத்தில்
போட்டு,தேவையான உப்பு சேர்த்து  நன்றாக் கிளறி விடவும் .
3 நாட்கள் கழித்து நெல்லிக்காய்
நீர்விட்டுக்கொண்டு தள , தள என்று வந்திருக்கும்




பிறகு அதை உபயோகப்படுத்த ஆரம்பிக்கவும்

ஒரு முறை செய்ததை ஒரு மாதம் வரை உபயோகப்படுத்தலாம்


ஒரு நெல்லிக்காய் , ஒரு அப்பிளுக்கு சமம்

வேப்பிலை கட்டி

  நாரத்த  இலை பொடி (வேப்பிலை கட்டி)


நாரத்த  இலை மரத்தில் இருந்து பறித்து
(கை பத்திரம் முள் இருக்கும் )
வெற்றிலை துடைப்பது போல் மடியில் ஒரு துணி
போட்டுக்கொண்டு ,சுத்தம் செய்து நடுவில் உள்ள
நார் கிழிக்கவேண்டும்.

உப்பு பெருங்காயம் , மிளகாய் வற்றல் (நீட்டு)

முதலில் உப்பு, பெருங்காயம், மிளகாய்
மிக்சியில் போட்டு போடி செய்து பிறகு
நாரத்த இல்லை போட்டு போடி செய்து
கொள்ளவும் .




இதன் உபயோகிக்கும் காலம் , 6 மாதம்.

குழம்பு சாதத்தில் இருந்து , கடைசி தயிர்/மோர் சாதம்
வரை தொட்டுக்கொள்ள ஏற்றது .


உரலில் , உலக்கை கொண்டு இடித்தால் இன்னமும்
சிறப்பாக இருக்கும் ஆனால் அதன் சாத்தியக்கூறு
மிகவும் குறைந்தது இன்றைய காலத்தில்.



வேப்பிலை கட்டி அடித்தாலும் குறையாத மோகம்  வேப்பிலை கட்டி 

நார்த்தங்காய் ஊறுகா

ஊறுகாய் வகைகள்


ஊறுகாய் என்றதும் நாவில் உமிழ்நீர் சுரக்கும் அளவுக்கு
எண்ணற்ற வகைகள் உள்ளன , முடிந்த வரை அவற்றை
பட்டியலிடுகின்றேன் , ஏதாவது விட்டுபோனா சொல்லுங்க
அதுக்கும் செய்முறை பக்குவம் தரேன்

மாங்கா ஊறுகாய்
மெந்திய மாங்கா
கசு  மாங்கா
ஆவக்கா  மாங்கா
மாங்கா வத்தல்

நார்த்தங்காய் ஊறுகா
கடாரங்கா ஊறுகா

நெல்லிக்கா ஊறுகா
நீர் நெல்லிக்கா
அரைநெல்லி ஊறுகாய்

எலுமிச்சை ஊறுகாய்

கலாக்கா ஊறுகாய்

இஞ்சி ஊறுகாய்
பூண்டு ஊறுகாய்

இப்ப நாம நாரத்தங்கா ஊறுகாய் எப்டின்னு கத்துக்கலாம்
நானும்தான் உங்களோட சேர்ந்து கத்துக்க போறேன்


நார்த்தங்காய் அப்டியே பச்சை ஊறுகாய் போடணும்னா 
சுருள் சுருளா நறுக்கணும் ,

சுருள் சுருளாக நறுக்கிய நார்த்தங்காயில் நிறைய உப்பு 
போட்டு ஜாடியில் (இப்ப பாத்திரத்தில்) வைக்கணும் 
தினமும் இதை நல்ல வெய்யிலில் உலர்த்தி , மீண்டும் 
அந்த தண்ணீரில் போட்டு , மறுநாள் உலர்த்தி இப்படியாக 
நார்த்தங்காய் தண்ணீர் முழுதும் உறிஞ்சும் அளவு 
உலர்த்தி , உலர்த்தி எடுத்து வைத்தால் , வருடத்திற்கும் 
ஊறுகாய்க்கு பஞ்சம் இல்லை 


(உப்பு போடுவது என்றால் அப்படியே அள்ளி போடுவது இல்லை 
சுருளாக நறுக்கும் நார்த்தங்காயில் உப்பை வைத்து 
பேக் பண்ணுவார்கள்)

இப்ப காரம் போட்ட ஊறுகாய்:-

காரம் போட்ட ஊறுகாயின்னா பாத்திரத்தில் உப்பு போட்டு அதில் 
துண்டு துண்டா நார்த்தங்காயை நறுக்கி போடுங்க.

இரண்டு நாள் நன்றாக குலுக்கி விட்டு உப்பு ஊரச்செய்து 
பிறகு 3 ஆம் நாள் , காரப்பொடி போட்டு , கடுகு தாளித்து 
என்னை அதிகமாக காய்ச்சி விடனும்..



இதனுடைய ஆயுட்  காலம் 1 மாதம் (அதிக பட்ஷம்)


 நார்த்தங்காய்க்கு போட்ட உப்பும் நாத்தனாருக்கு போட்ட 
சாப்பாடும் வீண் போகாது !!!!!!...... 

நான் சொல்லலைங்க பழ மொழி இருக்கு , 

நீங்க என்ன  சொல்றீங்க ???