Showing posts with label இனிப்பு வகைகள். Show all posts
Showing posts with label இனிப்பு வகைகள். Show all posts

Monday, November 25, 2013

கோன் ஸ்வீட் கோன்

கோன் ஸ்வீட் கோன்



கோன்னு சொன்னாலே இது குழந்தைகளோட சம்பந்தப்பட்டது .அதுவும் ஐஸ்க்ரீம் .ஆனா இது அது இல்லை. இதில் ஸ்வீட் ஸ்டப் பண்ணலாம் அல்லது வெந்த காய்களையும் ஸ்டப் பண்ணலாம் .

கோன் பண்ணிவெச்சிட்டு ஸ்வீட் எப்பவேணுமானாலும் ஸ்டப் பண்ணலாம் .காய் ஸ்டப் பண்ணுவதானால் சாப்பிடும் சமயம் தான் பண்ணனும் .மிகவும் மொரமொரப்பாக இருக்கும் .அதனால் ஈரம் பட்டால் மொரமொரப்பு போய்விடும்.

இதைச்செய்ய கண்டிப்பாக மெட்டல் மோல்டு வேண்டும் .
கோன்வடிவில் கடையில் கிடைக்கும்.
அரைக்கப் கோதுமைமாவுடன்
அரைக்கப் மைதாமாவு ,
சிட்டிகை உப்பு ,
சிட்டிகை சோடா உப்பு ,
மூன்று டேபிள்ஸ்பூன் வெஜிடபிள் ஆயில்,
கால் கப் தண்ணீர்




சேர்த்து கெட்டியாகப் பிசைந்து. அரைமணிநேரம் ஊறவைத்து ,பின் சப்பாத்திகளாக இட்டு அதை ரிப்பன் வடிவில் வெட்டி கோன் மோல்டு
மேல் சுற்ற வேண்டும் .மிதமான தீயில் இதை பொரித்து எடுத்து ஆறியபின் மோல்டிலிருந்து கோனை மெதுவாக பிரித்து எடுக்க வேண்டும்.
எடுக்க இலகுவாக வரும். நாம் விரும்பும் ஸ்வீட்,
காரம் ஸ்டப் பண்ணலாம். குழந்தைகள் சிந்தாமல் சிதறாமல் கோனை கடித்தபடியே சாப்பிடுவார்கள்.

குழந்தைகளின் பர்த்டே பார்ட்டிக்கு கோனில் ஸ்வீட்
என்றால் கொண்டாட்டம் .குதூகலம் .

Saturday, November 23, 2013

Wheat Chocolate Rings (வீட் சாக்லேட் ரிங்க்ஸ் )



வீட் சாக்லேட் ரிங்க்ஸ்   by Velammal Gurisamy 



குழந்தைகளுக்கு பரீட்ஷை முடிஞ்சாச்சு. 

பள்ளி விடுமுறை விட்டாச்சு.

கொண்டாட்டம் அவங்களுக்கு ,திண்டாட்டம் நமக்கு. 

ஈவினிங் தினம் ஒரு டிபன் பண்ணவேண்டியிருக்கு. 

லீவிலையாவது நல்லநல்ல டிபனா பண்ணிகொடுங்க பாட்டி 
கெஞ்சுகிறான் பேரன் .அதனால் செஞ்சத்துதான் இந்த வீட் சாக்லேட் 
ரிங்க்ஸ் .(டோ நட் )


ஒருகப் கோதுமை மாவில் 
அரை டீஸ்பூன் ஈஸ்ட் சேர்த்து பிசையணும் .

ஒரு சிறிய பாத்திரத்தில் கொஞ்சம் வெதுவெதுப்பான பாலை எடுத்துக் கொண்டு  அதில் ஒரு டேபிள்ஸ்பூன் சர்க்கரை , அரை டீஸ்பூன் ஆக்டிவ் ட்ரை ஈஸ்ட் போட்டு பத்து நிமிடங்கள் வைத்திருந்து பார்த்தால் அது நுரைத்து பொங்கியிருக்கும் .அதை மாவில் ஊற்றி அதோடு வெதுவெதுப்பான தண்ணீரும் சேர்த்து ,தளர்வாகப் பிசைந்து காற்றுப்புகாமல் மூடிவைத்து ஒரு மணிநேரம் ஊறவிடவேண்டும் மாவு இரண்டு மடங்காக உப்பியிருக்கும் .

பிறகு மிதமான தீயில் ,துளையிட்டு வட்டமாக வெட்டிய இந்த ரிங் சை  பொரித்து எடுக்க வேண்டும் .

இனிப்பில்லாத கசப்பு சாக்லேட் துண்டை இளக்கி ,அதோடு சிறிது பால் ,பட்டர்,சர்க்கரை சேர்த்து சாக்லேட் சாஸ் தயாரித்து ,அதில் இந்த ரின்க்சை ஒரு பக்கம் மட்டும் முக்கி எடுத்தால் ...................

சாக்லேட் ரிங்க்ஸ் உங்கள் கைகளில் சுழலும் .

வீட் சிப்ச் லட்டு - Wheat Chips Laddu


வீட் சிப்ச் லட்டு . Wheat Chips Laddu
கண்ணா லட்டு திங்க ஆசையா 
கண்ணா இன்னொரு புதுமாதிரி லட்டு திங்க ஆசையா 

ரவா லட்டு 
பூந்தி லட்டு 
பயத்தம் லட்டு 
மாலாடு 




குழந்தைகளுக்கு லட்டு மிகவும் பிடித்தமான இனிப்பு. கடலைமாவில் பண்ணிய லட்டை கொஞ்சம் அதிகமாகசாப்பிட்டு விட்டால் வ்யிறு மந்தமாகிவிடும் என்று நாம் பயப்பிடுவோம்

ஆனால் இந்த லட்டை சாப்பிட்டா நாம பயப்படவே வேண்டாம்






வீட் சிப்ச் லட்டு பற்றி நாம் கவலைபட பயப்பட வேண்டியதில்லை.
இது குழந்தைகளுக்கேற்ற ஹெல்தியான கோதுமைமாவில் பண்ணிய லட்டு .

சரி இந்த Wheat(வீட் லட்டு) Laddu  எப்படி செய்யறது

கோதுமைமாவில் கெட்டியான பூரிமாவு தயார் செய்து,
அதில் அப்பளங்களிட்டு ரிப்பன்களாக வெட்டி ,துண்டுகள்போட்டு,
அதை மிதமான தீயில் எண்ணெய்யில் பொரித்தெடுக்க வேண்டும் .

சிப்ச் ஆறியதும் மிக்சியில் போட்டு அரைத்தால் பொடி துண்டுகளாகிவிடும்.
இதோட கொஞ்சம் நெய் ,வறுத்த முந்திரி திராட்ஷை ,ஏலப்பொடி சேர்த்துகலந்துவைக்கவேண்டும.


பொடியின் அளவு சர்க்கரை எடுத்துக் கொண்டு அதை கம்பிப் பத பாகாக்கி
இந்தகலவையோடு சேர்த்து பிசைந்து, உருண்டைகளாகப் பிடித்தால்
சுவையான வீட் சிப்ஸ் லட்டு கிடைக்கும் .

அழும் குழந்தைக்கு அடைக்கலம் கொடுக்கும்.


வீட்டுக்கு வீடு வீட் லட்டு செய்து கொண்டாடுவோம் வாங்க

Thursday, November 22, 2012

கலகலக்கும் கார்த்திகை , கல்யாண கார்த்திகை


கலகலக்கும் கார்த்திகை , கல்யாண கார்த்திகை 

சிவனின் நெற்றிக்கண் தீப்பொறியில் இருந்து பிறந்த 
முருகனின் பிறந்ததினம் கார்த்திகை திருநாள் அதை 
நினைவுகூரும் விதமாக பொறி பொரித்து , உருண்டை 
பிடித்து அவனை வழிபடுவது தானே சிறந்தது 

வாருங்கள் நாமும் பொறி பொரித்து , உருண்டை பிடித்து 
வணங்கி , மகிழ்ந்து அனைவரையும் மகிழ்விப்போம் 

தேவை 

அவல் பொறி, நெல் பொறி 
வெல்லம் 
தேங்காய் பல்லு பல்லாக நறுக்கியது 
சுக்கு, ஏலக்காய் பொடி செய்தது 

கடையில் அவல்  பொறி , நெல் பொறி பொரித்து 
வாங்கிவிடவும் .



வெல்லத்தை  சுத்தம் செய்து பாகு தயாரிக்கவும் 
இளம் பாகு பதம் தேவை 


வெல்லப்பாகு சோதனை செய்யும் விதம் 




பொறியுடன் ஏலக்காய், சுக்கு பொடி சேர்க்கவும் , 



வெல்லப்பாகுடன் பல்லு பல்லாக நறுக்கிய தேங்காய் 
சேர்த்து பின் வெல்லப்பாகை பொறியுடன் சேர்த்து நன்றாக

 
 கிளறி , உருண்டைகளாக பிடித்து விடவும் 


கார்த்திகைக்கு பொறி உருண்டை செய்து கலக்குவோமா 

பால் பணியாரம்

பால் பணியாரம் 







தேவையானவை 


பச்சரிசி   1 கப் 

உளுந்து  3/4 கப் 

பசும்பால்  1/2 லிட்டர் 

தேங்காய் 1 கப் 

சர்க்கரை 100 கிராம் 

எண்ணை  தேவையான அளவு 

அரிசி உளுந்து 2 மணிநேரம் ஊறவைத்து 
கிரைண்டர் / மிக்சியில்  நைசாக அரைத்துக்கொள்ளவும் 




அரைத்த என்னை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி 
எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும் 



பால், தேங்காய் துருவல் , சர்க்கரை கலந்து வைத்து 
அதில் பொறித்த உருண்டைகளை போட்டு வைக்கவும் 



சூடான சுவையான பால் பணியாரம் தயார் 

Monday, October 22, 2012

பீட்ரூட் அல்வா


பீட்ரூட் அல்வா


பீட்ரூட்டின் பலவகையான உபயோகங்களில் இனிப்பில் செய்யப்படும்
சுலபமான செயமுறைகளுடன் கூடிய பீட்ரூட் அல்வாவும் ஓன்று


தேவை:-

பீட்ரூட் - 2



பால் - 1 கப்
நெய் - 100 கிராம்

ஏலக்காய் - 5
உலர்ந்த திராட்சை - 5
சர்க்கரை - 3 கப்
வறுத்த முந்திரி - 10

செய்முறை


பீட்ரூட்டை தோல் நீக்கி சுத்தம் செய்து துருவிக் கொள்ளவும்.



துருவிய பீட்ரூட்டை பாலுடன் சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
அகன்ற பாத்திரத்தில் நெய், அரைத்த பீட்ரூட் விழுது, சர்க்கரை,  ஆகியவற்றை போட்டு வேக விடவும். வேகும் போது நன்கு கிளறி விடவும். 





 நன்கு பதமாக வெந்ததும், அடுப்பிலிருந்து இறக்கி, ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரி, உலர்ந்த திராட்சை ஆகியவற்றை சேர்க்கவும்.


சுவையான சூடான பீட்ரூட் அல்வா ரெடி  சுவைத்து மகிழுங்கள் 


Tuesday, September 25, 2012

சோள மாவு அல்வா

சோள  மாவு அல்வா


சோளம் அப்டியே பச்சையா திங்கலாம், சுட்டும் சாப்பிடலாம்
மசாலா சேர்த்து கடற்கரை ஓரம் விக்கறத வாங்கி சாப்பிடலாம்
வீட்லயே அல்வா செஞ்சும் சாப்பிடலாம் ,

சோளம் சத்து நிறைந்த  உணவு , எப்டி சாப்டா என்ன

அப்ப வாங்க அல்வா செஞ்சு சாப்பிடுவோம்


சோளமாவு 100 கிராம்
சர்க்கரை      200 கிராம்
பால்               1 லிட்டர்
முந்திரி        10
திராட்சை    10
ஏலக்காய்     5(பொடி செய்யவும்)
நெய்               2 கப்
கேசரி பௌடர்  கொஞ்சம்
உப்பு              சிட்டிகை அளவு

செய்து பழகுவோமா:

முந்திரி , திராட்சை  நெய்ல வறுத்து வச்சிடுங்க





சோளமாவு(சிட்டிகை உப்பு சேருங்க) , சர்க்கரை , கொஞ்சம் கேசரி தூள் மூன்றும் ஒன்றாக பால் சேர்த்து  கரைக்கவும் ,கட்டி இல்லாம பாத்துக்குங்க




இப்ப அடுப்புல ஏத்தி (சூடு கொஞ்சம் கம்மிய இருக்கட்டும்)நல்லா
அடிபிடிக்காமல் கிளருங்க  கொஞ்சம் கெட்டியா வரும்போது
ஏலக்காய் பொடி போட்டு கொஞ்சம் கொஞ்சமா  நெய் விட்டு கிளருங்க.



நெய் தேவைப்பட்டா இன்னும் கொஞ்சம் எடுத்துகோங்க
நெய் சேர சேர சுவை நல்லா இருக்கும். நல்லா சுழண்டு
வரும்போது , முந்திரி , திராட்சை சேர்த்திடுங்க அவ்ளவுதான்
சோள அல்வா தயார் .




ஆயிடுச்சா இப்ப அடுப்பில் இருந்து கீழே இறக்கி ......
என்ன பாக்கறீங்க  எல்லாருக்கும் துண்டு போட்டு குடுங்க
இல்லன்னா அப்டியே கப்ல போட்டு குடுங்க , நீங்களும்
சாப்டுங்க , எனக்கும் கொஞ்சம் குடுங்க.



சோள அல்வா சாப்ட்டு சோளக்   கொல்லை பொம்மை மாதிரி நிக்காதீங்க
சுறு சுறுப்பா இருங்க





Saturday, September 22, 2012

மாலாடு

மாலாடு

இது பெரும்பாலும் திருநெல்வேலி சார்ந்தவர்கள்
அதிகம் செய்யும் இனிப்பு , வீட்டில் எந்த ஒரு விசேஷமானாலும்
மாலாடு இல்லாத பண்டிகையோ , விசேஷங்கள்  இருக்க முடியாது

இது செய்வது எளிது , தின்பது எளிது , சுவை சொல்லவே வேண்டாம்


தேவையானவை :-

உடைத்தக்கடலை   1 கப்
சர்க்கரை                       1 கப்
நெய்                                1 கப்
ஏலக்காய்                      5 (பொடி செய்து கொள்ளவும் )
முந்திரி                          5 (சிறிது சிறிதாக உடைத்துக்கொள்ளவும் )


அடுப்பில் மிதமான சூட்டில் உடைத்தக்கடலையை லேசாக
வறுத்துக்கொள்ளவும் , (மனம் கூடும்).



பிறகு சர்க்கரை, ஏலக்காய் , உடைத்தக்கடலை மிக்சியில்
நன்றாக நைசாக அரைத்துக்கொள்ளவும் .





பிறகு அடுப்பில் வாணலியில் 1 கப் நெய்விட்டு அதில் முந்திரியை
போட்டு வருத்தப்பின் பொடித்துவைத்த உடைத்தகடலை , சர்க்கரை
மாவை போட்டு ஒரு பெரட்டு , பெரட்டி  எடுக்கவும் .




இப்பொழுது வேண்டும் அளவில் மாலாடு பிடித்து வைக்கவும்




அளவு உங்கள் விருப்பம் போல் அமையலாம்.

கல்யாணங்களில் சீர் வைக்க பெரிது பெரிதாக பிடித்து
வைத்துக்கொள்ளலாம் அதற்கேற்ப தேவையான பொருட்களின்
அளவும் கூட்ட வேண்டும்.


மாலாடு வேணுமா , மனம் விரும்பும் மாலாடு வேணுமா

வேர்கடலை உருண்டை

வேர்கடலை உருண்டை

 வறுத்த  வேர்கடலை கடையில் வாங்கி , நாம் தோல் உரித்து
வைத்துக்கொள்ள வேண்டும் .



வேர்கடலை 1/2 கிலோ
வெல்லாம்    1/4 கிலோ
சுக்கு பொடி   2 ஸ்பூன்
ஏலக்காய் பொடி 1 ஸ்பூன்





வெல்லாம் சுத்தம் செய்து  தக்காளி பாகு ( கம்பி பதமும் அல்லாத ,
கெட்டியாகவும் இல்லாமல் இடைப்பட்ட நிலை )



 இதை பரிசோதனை செய்ய  ஒரு கிண்ணத்தில் நீர் விட்டு அதில்
கொதிக்கும் வெல்லப்பாகை கொஞ்சம் விட்டு




கட்டை விரல் ஆள்காட்டி விரல்களால் சோதித்து பார்த்தால் தெரியும்)




இந்த நிலையில் வெல்லப்பாகை அடுப்பில் இருந்து இறக்கி அதில்
சுக்கு பொடி சேர்த்து , வேர்கடலையை போட்டு நன்றாக கிளறி
கைகளில் கொஞ்சம் அரிசிமாவு பூசிக்கொண்டு,  வேண்டும் அளவில்




உருண்டைகளாக பிடித்து வைக்கவும் .


வேணுமா வேர்கடலை உருண்டை

லட்டு ! லட்டு !! லட்டு !!!

லட்டு தின்ன ஆசையா


கடலை மாவு : 3 டம்பளர்
சர்க்கரை          : 6 டம்பளர்
முந்திரி             ;50 கிராம்  (நெய்யில் வறுத்து கொள்ளவும் )
திராட்சை         ;50 கிராம்  (நெய்யில் வறுத்து கொள்ளவும் )
கிராம்பு              ;10 கிராம்   (நெய்யில் வறுத்து கொள்ளவும் )
ஏலக்கா             ;10 Nos. (பொடி செய்து வைக்கவும்)


சர்க்கரை தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு கம்பி பதம்
பாகு தயார் செய்யவும்

கடலை மாவு நீர் விட்டு பிசைந்துகொள்ளவும் , இதில் கொஞ்சம்
கேசரி பௌடர் , ஆப்பசோடா சேர்க்கவும் .




அடுப்பில் மிதமான சூட்டில் வாணலியில் என்னை விட்டு
பூந்தி தேய்க்கும் கரண்டியில்  கலந்துவைத்த கடலைமாவை
சிறிது சிறிதாக ஊற்றி  பூந்தியாக வறுத்து எடுக்கவும் .




சற்று சூடு ஆறியவுடன் இதை தயார் செய்த சர்க்கரை பாகில்
போட்டு முந்திரி , ஏலக்காய் , திராட்சை, கிராம்பு சேர்த்து நன்றாக
கிளற  வேண்டும்  பிறகு தேவையான அளவில் லட்டுவாக
பிடித்து வைக்கவும் .


Friday, September 21, 2012

அக்காரவடிசல்



அக்காரவடிசல் எப்படி செய்வது?

தேவையானவை:

பச்சரிசி கால் கிலோ, (1/4 Kg)
பச்சைப் பருப்பு-100 கிராம், 
வெல்லம் 1.1/2(ஒன்றரைக்) கிலோ (ஒரு பங்கு அரிசிக்கு ஆறு பங்கு வெல்லம்) ஏலக்காய் தூள்- 2 ஸ்பூன், 
பச்சைக் கற்பூரம் கொஞ்சம் (வாசனைக்காக கொஞ்சமாகச் சேர்க்க வேண்டும். அதிகமானால், கசப்பாகிவிடும், கவனம்). 
இவை தவிர, நிறைய பால், 
நிறைய நெய்( மேலே தரப்பட்டுள்ள அரிசி, வெல்லம் அளவுக்கு குறைந்தது நான்கு லிட்டர் பால், ஒன்றரைக் கிலோ நெய் ஊற்றலாம்.

செய்முறைக்கு முன்பாகவே முக்கியமாக கவனிக்க வேண்டியவை: 1)அக்காரவடிசலுக்கு நெய்யும் பாலும் விடுவதில் தயக்கமோ 
   கஞ்சத்தனமோ கூடவே கூடாது. 

2) கைவலித்தாலும் நிறுத்தாமல் கிண்ட வேண்டும். கொஞ்சம் அசந்தாலும்   அடிப்படித்துவிடும்.

3)அக்காரவடிசல்ல முந்திரி, திராட்சை இன்ன பிறவற்றைப் பகட்டுக்காகவோ, ருசிக்காகவோ போடக்கூடாது. (வாயில் போட்டால், நாக்கில் வழுக்கி தொண்டைவழியாக அப்படியே உள்ளே போவதற்குத் தடையாக எதுவும் இருக்கக் கூடாது) 

4)நாலாவது பாயின்ட். அடுப்பு சீராகவும் மிதமாகவும் எரியவேண்டும். சீக்கிரம் செய்ய ஆசைப்பட்டு அடுப்பைப் பெரிதாக எரியவிடக்கூடாது.

செய்முறை: அரிசியையும் பாசிப்பருப்பையும் கல், தூசி இல்லாமல் சுத்தம் செய்து களைந்து கழுவி, தண்ணீரை வடித்து கொஞ்சநேரம் நிழலில் காயவையுங்கள். பிறகு ஒரு வாணலியில் கொஞ்சம் நெய்விட்டு அரிசி, பருப்பைப் போட்டு லேசாக வறுங்கள். அரிசி ஒருபங்குக்கு ஐந்து பங்கு பால் சேர்த்து குக்கரில் வேகவிடுங்கள். எவ்வளவு குழைகிறதோ அவ்வளவு ருசி கிடைக்கும். எனவே நன்கு குழையவிட்டு இறக்குங்கள்.

வெல்லத்தைத் தூளாக்கி தண்ணீரில் கரைத்து வடிகட்டியபின் ஒரு வாணலியில் வெல்லக் கரைசலை ஊற்றி அடுப்பில் வையுங்கள். கொஞ்சம் சூடானதும், குழைய வெந்த அரிசி பருப்புக் கலவையை வெல்லக் கரைசலில் போடுங்கள். ஒரு லிட்டர் பாலைச் சேர்த்து, கிளற ஆரம்பியுங்கள். இறுக இறுக பால் சேருங்கள். கிளறுங்கள். பால்... பால்... மேலும் பால்...! பால் தீர்ந்ததும், நெய் சேர்த்துக் கிளறுங்கள். இறுகும் போதெல்லாம் வழிய வழிய நெய் விடுங்கள். அக்காரவடிசலுக்கு அலங்காரமே அதில் மினுமினுக்கும் நெய்தான். எனவே உங்களால் முடிந்த அளவுக்கு நெய்யை ஊற்றுங்கள். கடைசியாக சிறிது ஏலப்பொடி, பச்சைக் கற்பூரப் பொடி சேர்த்துக் கிளறி இறக்கி வையுங்கள்.



 நிவேதனம் செய்து அரங்கனை வணங்கிவிட்டு சாப்பிடுங்கள். உங்கவாய் மட்டுமல்லாமல் வாழ்க்கையும் இனிக்கும்.

Sunday, September 16, 2012

ரவா லட்டு

ரவா லட்டு

ராவின் உபயோகம் பலவிதங்களில் அனைவரும் அறிந்ததே
நாம் இப்பொழுது பண்டிகை காலங்கள் நெருங்கி வருவதால்
ரவா லட்டு செய்வது எப்படி என்று பழகிக்கொள்வோம்

பொதுவாக ரவா லட்டு வாயில் போட்டதும் கரைந்து விடும்
தன்மை கொண்டது , அது எவ்வாறு நாம் செய்யும் செய்முறை
அதற்க்கு ஒரு காரணம் , அந்த காரணத்தையும் இங்கே நாம்
காணலாம்.


தேவையான பொருள்கள்:

ரவை 3 கப்
சர்க்கரை 3 கப்
நெய்          1 கப்
ஏலக்காய்  5 (பொடி செய்து கொள்ளவும் )
முந்திரி      5 (சிறு துண்டுகளாக உடைத்து)
திராட்சை  10
(விருப்பபட்டால்)



ரவையை ஒரு வாணலியில் போட்டு வறுக்கவும் , பிறகு
மிக்சியில் நன்றாக நைசாக பொடி செய்து கொள்ளவும்
சர்க்கரையை அரைத்துக் கொள்ளவும். இரண்டையும் ஒன்றாக
கலந்து வைக்கவும்.



 முந்திரி , திராட்சை , இவற்றை நெய் விட்டு வறுத்து
ஏலக்காய் பொடி செய்து , இவை அனைத்தையும் அரைத்து
வைத்துள்ள ரவை சர்க்கரையுடன்யுடன்  சேர்து  விடவும் .

நெய் சுடவைத்து , மேற் சொன்ன கலவையில் கலந்து
உருண்டைகளாக பிடித்து வைக்கவும் .




பிடிச்சு வச்சுடீன்களா, அவ்ளவுதான் , எடுத்து சாப்டுங்க
அப்பதானே சுவை தெரியும் .


லட்டு தின்ன துட்டு வேணுமா?? , வேணாமே !!!
இன்னொரு லட்டுதான் வேணும் !!!!

பால் குழக்கட்டை

பால் குழக்கட்டை


பண்டிகை என்றாலே தின்பண்டங்களுக்கு குறைவில்லை
வரப்போகும் பிள்ளையார் சதுர்த்திக்கு நாம் பலவகையான
குழக்கட்டை விநாயகருக்கு படைத்து  மகிழ்ந்து நாமும்
சுவைத்து மகிழ்வோம் .

இந்த முறை நாம் பால்கொழுக்கட்டை செய்வதை அறிந்து
அதையும் சேர்த்து படைத்து , உண்டு மகிழ்வோமா


இதற்க்கு தேவையான பொருட்களை பட்டியலிடுவதை விட
பக்குவமாக சொல்கின்றேன் , புரிந்து கொண்டு செய்து பாருங்கள்

கொழக்கட்டைக்கு மாவு எப்படி செய்வது என்று முன்னமே
கூறியுள்ளேன் , அதே முறையில் மாவு தயார் செய்து , அதை
உருண்டையாக உருட்டி (கோலி குண்டு அளவில்).தயார் செய்து
கொள்ளுங்கள்.




1) வெல்லம் சுத்தம் செய்து கரைத்து வைத்துக்கொள்ளுங்கள்
2) கொஞ்சம் தேங்காய் பால் தயார் செய்து கொள்ளுங்கள் ,

அடுப்பில் ஒரு கெட்டியான பாத்திரத்தில் கொஞ்சம் பால் விட்டு




அதனுடன் தேங்காய் பால் சேர்த்து அதில் உருட்டி வைத்த கொழக்கட்டை
உருண்டைகளை போட்டு கொதிக்க விடுங்கள் ,



சிறிது நேரம் பொருத்து  வெல்லம் கரைத்த நீரை அதனுடன்
சேருங்கள் , மீண்டும் நன்றாக கொதிக்கட்டும் , இப்பொழுது  பால்
தேங்காய் பால், வெல்லம்  சேர்ந்த கலவை இறுகி கெட்டியாக வரும் .

அடுப்பில் இருந்து இறக்கி , ஏலக்காய் பொ டி செய்து
போடுங்கள், முந்திரி பருப்பு வறுத்து போடுங்கள்



கொஞ்சம் சூடு ஆறியதும்  , சின்ன கப்ல விட்டு , அதுல ஒரு
ஸ்பூன் போட்டு , அப்டி , கொஞ்சம் கொஞ்சமா நுனி நாக்கில்
வைத்து உறிஞ்சி சுவைங்க , என்னங்க , இப்பவே உமிழ் நீர்
சுரக்க துவங்கியதா

இன்னும் ரெண்டு நாள் தான் , சுவைத்திடலாம்  சூடான
சுகமான பால் கொழக்கட்டை , குடும்பத்துடன்


"பாலு விக்கற பாலம்மா , உனக்கு பால் கொழக்கட்டை வேணுமா "


காசி அல்வா

பூசணிக்காய் அல்வா (காசி அல்வா)


பூசணிக்காய் பற்றி முன்னமே கூறி இருந்தேன் அது
குடலுக்கு நல்லது , உடல் ஆரோக்கியம் காக்கும் என்று
குழம்பு, காய், கூட்டு , இப்படி நிறைய சாப்பிட்டு இருக்கோம்
இப்ப அதுல ஒரு இனிப்பு செய்யப்போறம் அதுக்கு பேரு
காசி அல்வா .



தேவையானவை :-

வெள்ளைப் பூசணிக்காய் 1/2 கக் (4 கப்  துருவிய பூசணி)
சர்க்கரை                                   1/4 கிலோ
ஏலக்காய்                                 5
முந்திரி                                      10
கேசரி பௌடர்                       கொஞ்சம்
நெய்                                           5 ஸ்பூன்



பூசணிக்காய் கட் பண்ணி கொஞ்சம் எடுத்துகோங்க


தோல் சீவி பூசணிய துருவி வைங்க

துருவிய பூசணியை அடுப்பில் வாணலியில் போட்டு கொஞ்சம்
வதக்குங்க , வதக்கின பூசணி தண்ணீர் உறிஞ்சிவிடும் அப்படியும்
நீர் இருந்தால் நன்றாக கைகளால் பிழிந்து சக்கையை மட்டும் தனியாக
பிரித்து விடுங்கள்.



அடிகனமான பாத்திரம் அடுப்பில் ஏற்றி சக்கையாக உள்ள பூசணி போட்டு
சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறவும் . சர்க்கரை பூசநியுடன் சேர்ந்து
நீர் சுரந்து நன்றாக குழைந்து வரும் , கொஞ்சம் கேசரி தூள் சேர்க்கவும்
கொஞ்சம் நெய் சேர்க்கவும் .

கெட்டியான பதத்தில் அதனுடன்  ஏலக்காய் , வறுத்த முந்திரி சேர்க்கவும்

சூடான , சுவை மிகுந்த  பூசணிக்காய் அல்வா ரெடி அல்லவா



"காசிக்கு போகும் சன்யாசி ,  காசி அல்வாவை நீ யோசி" 

புட்டு , இனிப்பு புட்டு

புட்டு , இனிப்பு புட்டு

புட்டு பெரும்பாலும் வீட்டில் பெண் குழந்தைகள் பருவ வயதை
அடையும் பொழுது 3ம்  நாள் புட்டு சுத்தும் சடங்கு நடை பெரும்

ஆனால் இன்றோ நினைத்த பொழுது செய்து சுவைகின்றோம்
நவராத்திரி காலங்களில் ஒருநாள் சுண்டலாக செய்து நெய்வேத்தியம்
செய்து , வழங்கப்படுகிறது.








தேவையானவை :-

அரிசி             1 ஆழாக்கு
வெல்லம்  1/1/2 ஆழாக்கு
தேங்காய் துருவல் 1 கப்
ஏலக்காய்  5
முந்திரி      10

அரிசியை ஊறவைத்து , காற்றாட உலர்த்தி , மிக்சியில் அரைத்து
வைத்துக்கொள்ளவும் .

வாணலியில் மிதமான சூட்டில் , அரைத்த அரிசிமாவை வறுத்து
பொன்னிற கலர்  வந்ததும் இறக்கி வைக்கவும் .

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து , கொஞ்சம் உப்பு , மஞ்சள் பொடி
சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து , அதை இறக்கி வைக்கவும் .

தண்ணீர் சூடு ஆறியதும் . அதை கொஞ்சமாக  வறுத்த  மாவில்
விட்டு நன்றாக கலந்துகொள்ளவும். மாவில் அதிகம் தண்ணீர்
சேர்க்கவேண்டாம் , மாவு  கட்டி கட்டியாக ஆகாமல் பார்த்துக்
கொள்ளவும்.

இவ்வாறு பிசைந்த மாவை ஆவியில் வைத்து எடுக்கவும்

வெல்லம் கெட்டிப் பாகு வைத்துக்கொள்ளவும் .

வெல்லப்பாகை  ஆவியில் வைத்து எடுத்த மாவில் கொட்டி கலந்து கொள்ளவும். பிறகு கைகளால் நன்றாக உதிர்த்து விடவும்.

ஏலக்காய் பொடி , வறுத்த  முந்திரி சேர்த்தால்  சுவையான
இனிப்பு புட்டு ரெடி.


புட்டு செய்யறத பத்தி புட்டு , புட்டு  வச்சாச்சு , அம்புட்டு தான் 

கேரட் அல்வா

கேரட்  அல்வா (Caroot Halva)  By: Savithri Vasan)


கேரட்  நல்ல சத்தான ஒரு காய் வகை , இதில் பலவிதமான
சமையல் பயன் பாடுகள் வழக்கத்தில் உள்ளது. கேரட்டை
பச்சையாக அப்படியே சாப்பிடும் பழக்கம் அநேகருக்கு உள்ளது.


தேவை:

கேரட் துருவல் 2 கப்
சர்க்கரை             2 கப்
பால்                      1/2 லிட்டர்
ஏலக்காய்            5
முந்திரி                 5


இப்ப நாம கேரட் அல்வா செய்யறது எப்டின்னு பாக்கலாம்


நல்ல கேரட்  வாங்கி சீவி வச்சிகோங்க



கேர துருவல் 2 கப்



அடுப்பில் அடி கெட்டியான பாத்திரத்தில் காய்ச்சிய பால் விட்டு (1/2
லிட்டர்) அதில் கேரட் துருவல் போட்டு . கேரட் பாலில் நன்றாக வேகவிடவும்  வெந்ததும் 2 கப் சர்க்கரை போட்டு நன்றாக் கிளறவும் .

ஏலக்காய் பொடி தூவி , முந்திரிபருப்பு நெயில் வறுத்துப் போட்டு .
சுவைக்கவும் .

மிகவும் எளிதில் செய்யகூடிய ஒரு நல்ல இனிப்புவகை .



நாமும் செய்வோமா , நாளைக்கு  ,

இன்னைக்கே , இப்பவே வா , சரி ,  சரி , உங்க இஷ்டம்


கண் பார்த்ததை கை செய்யணும் ,

அப்பா கண் நல்லா இருக்கணும், கேரட் சாப்டுங்க , கண் நல்லா தெரியும்