Saturday, December 7, 2013

ரிங் முறுக்கு (Ring Murukku)

ரிங் முறுக்கு (Ring Murukku )  By: Velammal Gurusamy




இதன் செய்முறை கொஞ்சம் வித்தியாசமானது. 

கலக்கப்பட்டுள்ள மாவும் வித்தியாசமாய் இருக்கு. 

இந்தமாதிரி முறுக்கை நாங்கள் ஆந்த்ரா முறுக்கு என்போம். ஆனால் இதன் சுவையும் வித்தியாசமாய் இருக்கு .அதுபோல் இல்லை.,மிகவும் மொறு மொறுப்பாக இருந்தது .எண்ணெய் குடிக்கவே இல்லை .


ஒருகப் அரிசி மாவுடன் ,அரைக்கப் வறுத்த கடலைமாவு ,அரைக்கப் வறுத்து தோல் நீக்கி பொடித்த வேர்கடலைமாவு .உப்பு ,வத்தல் பொடிசேர்த்து கெட்டியாகப் பிசைந்து ,சீடைபோல் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி .பின்னர் ,அதை கையில் வைத்து நீளமாக உருட்டி ,சின்ன வளையங்களாக்கி .மிதமான தீயில் எண்ணெய்யில் பொரித்து சில்வர் தட்டில் வாரி போட்டபோது ,ரிங் ரிங் என்ற ஒலிஎழுப்பியது ரிங் முறுக்குகள் .

No comments:

Post a Comment