தினம் ஒரு திருப்புகழ் - காலன் வரும்போது காட்சி தர - நாள் - 28
ராகம்: தோடி தாளம்: ஆதி
தந்த பசிதனைய றிந்து முலையமுது
தந்து முதுகுதட ...... வியதாயார்
தம்பி பணிவிடைசெய் தொண்டர் பிரியமுள
தங்கை மருகருயி ...... ரெனவேசார்
மைந்தர் மனைவியர்க டும்பு கடனுதவு
மந்த வரிசைமொழி ...... பகர்கேடா
வந்து தலைநவிர விழ்ந்து தரைபுகம
யங்க வொருமகிட ...... மிசையேறி
அந்த கனுமெனைய டர்ந்து வருகையினி
லஞ்ச லெனவலிய ...... மயில்மேல்நீ
அந்த மறலியொடு கந்த மனிதனம
தன்ப னெனமொழிய ...... வருவாயே
சிந்தை மகிழமலை மங்கை நகிலிணைகள்
சிந்து பயமயிலு ...... மயில்வீரா
திங்க ளரவுநதி துன்று சடிலரருள்
செந்தி னகரிலுறை ...... பெருமாளே.
கருத்துரை: மலையரசனாகிய இமவானது புதல்வியாகிய
உமா தேவியறது ஞானப்பாலை உண்ட வேல்வீரரே
எருமைக்கிடாவின் மீது ஏறி அந்தகன் என்னை நெருங்கி
வருகின்ற வேளையில் எனக்கு அபயம் கொடுத்து,
கூற்றுவனிடத்தில் இவன் நமது அன்பன் என்று சொல்லுவதற்க்காக
மயில் வாகனத்தின் மீது வரவேண்டும்.
தொடரும் திருப்புகழ் ...............................தொடர்ந்து வாருங்கள்
No comments:
Post a Comment