Sunday, December 8, 2013

தினம் ஒரு திருப்புகழ் - கண்முன் வந்து காட்சி தர

தினம் ஒரு திருப்புகழ் - கண்முன் வந்து காட்சி தர 






ராகம்: ஸ்ரீ /  சாருகேசி                                             தாளம்: கண்டசாபு 





தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந்
தண்கழல்சி லம்புடன் ...... கொஞ்சவேநின்

தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன்
சந்தொடம ணைந்துநின் ...... றன்புபோலக்

கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங்
கஞ்சமலர் செங்கையுஞ் ...... சிந்துவேலும்

கண்களுமு கங்களுஞ் சந்திரநி றங்களுங்
கண்குளிர என்றன்முன் ...... சந்தியாவோ

புண்டரிகர் அண்டமுங் கொண்டபகி ரண்டமும்
பொங்கியெழ வெங்களங் ...... கொண்டபோது

பொன்கிரியெ னஞ்சிறந் தெங்கினும்வ ளர்ந்துமுன்
புண்டரிகர் தந்தையுஞ் ...... சிந்தைகூரக்

கொண்டநட னம்பதஞ் செந்திலிலும் என்றன்முன்
கொஞ்சிநட னங்கொளுங் ...... கந்தவேளே

கொங்கைகுற மங்கையின் சந்தமணம் உண்டிடுங்
கும்பமுநி கும்பிடுந் ...... தம்பிரானே.

கருத்துரை : பிரமதேவரது அண்டமும், அதனைச் 
சூழ்ந்துள்ள வெளி யண்டமும் கொதிப்புற்று 
விலக, பொன் மேருகிரியில் எல்லா அண்டங்களும் 
திருமேனியில் அடங்கும்மாறு விசுவருபங் கொண்டு 
திருமால், மூவுலகங்களையும் ஈரடியால் அளக்கும் 
திருவிக்கிரம வடிவம், இதற்க்கு இனையாகாதென்று 
எண்ணி தேவரீர் நடித்தருளிய திருவடிகளினால், அடியேன் 
முன் கொஞ்சிப் பேசி திருநடனஞ் செய்தருளிய , கந்தவேளே 
அகத்தியர் வணங்கும் தலைவரே! தண்டையும், அழகிய 
வெண்டையமும், கிண்கிணியும், சதங்கையும், இனிய 
ஒளியுடன் சுழலும், சிலம்பும், இனிது ஒலிக்க, சிவபெருமான் 
முன் இனிய நடனம் புரிந்து , மகிழ்ச்சியடைந்து, நின்ற 
அன்பு போல, அடியேனும், கண்டு மகிழ்ச்சி அடையுமாறு 
கடப்பா மலர் மாலையும், மணிமகுடங்களும், தாமரி மலர் 
போன்ற சிவந்த கரங்களும். ஒளி வீசும் வேலாயுதமும், 
கருணை பொழியும் கண்களும், ஆறு திருமுகங்களும், 
சந்திரன் போன்ற குளிர்ந்த ஒளியும், என் கண்குளிரத் 
தோன்றி அருள வேண்டும். 



தொடரும் திருப்புகழ் ................................தொடர்ந்து வாருங்கள் 

No comments:

Post a Comment