Tuesday, December 3, 2013

சாளக்கிராம மகிமை

சாளக்கிராம மகிமை



சாளக்கிராசாளக்கிராமம் என்பது மகாவிஷ்ணுவின் உருவங்களில் ஒன்று. இமயமலைக்கு அருகே கண்டகி நதியில் உற்பத்தியாகிறது.

இதனை வைணவ சம்பிரதாயப்படி பல வகைகளாகப் பிரிப்பர். நரசிங்கம், தாமோதரம், வாமனன், நாராயணி, லக்ஷ்மி... இப்படிப் பல வகையாகப் பிரிப்பர். இவை கருப்பாகவும் உருண்டையாகவும் வெளிர்  கருப்பாகவும், சில இடங்களில் புழு அரித்த துளைகளுடனும் காணப்படும். உள்ளே உள்ள கோடுகளையும் துளைகளையும் வைத்து வடபாரத சாதுக்கள், விஷ்ணுவின் ரூபத்தை நிர்ணயம் செய்வர்.  நிலத்தில் உண்டாவது-ஸ்தல ஜன்யம். நீரில் உண்டாவது - ஜலஜன்யம். நீரிலுள்ள உயிரினங்களால் உண்டாவது - கிருமிஜன்யம்.

சாளக்கிராமத்தை வெள்ளிக்கம்பிகளில் கட்டி மாலையாக்கி, திருக்கோயில்களில் பெருமாள் திருமேனியில் சாத்துவர். விஷ்ணு ஆலயங்களில் தினசரி வழிபாட்டிற்கு பிராண சாதனமாக சாளக்கிராமத்தைக்  கொள்வார்கள்.

பெரும்பாலானவர்களுக்கு எத்தனை சாளக்கிராமங்கள் வைத்துக் கொள்வது என்பதில் குழப்பம் உண்டு. சிலருக்கு கருத்து வேறுபாடுகளும் உண்டு - இந்த விஷயத்தில்!

இல்லங்களில் திருவாராதனத்திற்கு 2,4,6 என்ற இரட்டைப் படை வரிசையில் வைத்து வழிபடுவார்கள். ஆறு இருந்தால் அரை மண்டலம், 12 உள்ளதை ஒரு மண்டலம் என்பர்.

தினமும் ஆசாரம் அனுஷ்டித்து, சாளக்கிராமத்திற்கு பாலால் திருமஞ்சனம் செய்வித்து, துளசியுடன் அதனை தீர்த்தப் பிரசாதமாகக் கொள்ள வேண்டும். பூஜை செய்து முடித்த பின் பட்டுத் துணியில் சுற்றி  வைத்துவிட வேண்டும். சிறுவர்களும் பெண்களும் அதனைத் தொடக்கூடாது. பூஜை செய்யாமல் இருக்கும் நிலை நிரந்தரமாக ஏற்பட்டால், அதனை ஏதேனும் ஓர் பெருமாள் கோவிலில் சேர்த்து  விடவேண்டும். சிலர் தங்கள் வீட்டில் தானியங்களில் வைத்திருப்பர்.ம மகிமை

No comments:

Post a Comment