Friday, December 6, 2013

தினம் ஒரு திருப்புகழ் - ஆண்டருள

தினம் ஒரு திருப்புகழ் - ஆண்டருள  -  நாள் - 25



ராகம்:- காபி                                                  தாளம்: ஆதி(திஸ்ரம்)


சங்கைதா னொன்றுதா னின்றியே நெஞ்சிலே
சஞ்சலா ...... ரம்பமாயன்

சந்தொடே குங்குமா லங்க்ருதா டம்பரா
சம்ப்ரமா ...... நந்தமாயன்

மங்கைமார் கொங்கைசே ரங்கமோ கங்களால்
வம்பிலே ...... துன்புறாமே

வண்குகா நின்சொரூ பம்ப்ரகா சங்கொடே
வந்துநீ ...... யன்பிலாள்வாய்

கங்கைசூ டும்பிரான் மைந்தனே அந்தனே
கந்தனே ...... விஞ்சையூரா

கம்பியா திந்த்ரலோ கங்கள்கா வென்றவா
கண்டலே ...... சன்சொல்வீரா

செங்கைவேல் வென்றிவேல் கொண்டுசூர் பொன்றவே
சென்றுமோ ...... தும்ப்ரதாபா

செங்கண்மால் பங்கஜா னன்தொழா நந்தவேள்
செந்தில்வாழ் ...... தம்பிரானே.


கருத்துரை: கங்கைச் சடையில் தரித்தருளிய சிவபெருமானுடைய 
குமாரரே! சுந்தரமூர்த்தியே ! கலை விநோதரே, இந்திரனால் 
துதிக்கப் பெற்றவரே! வேலாயுதத்தைக் கொண்டு சூரனை அழித்த 
பெருங் கீர்த்தி உடையவரே! நான்முகனும், நாராயணனும் பக்தியுடன் 
வழிபட்டு வணங்கும் ஆனந்த மூர்த்தியே ! செந்திலதிபா! சஞ்சலமுடயவனாகி, ஆசானை பொருள்களை அணிந்து ஆடம்பரமாகத் 
திரிகின்ற மாயையுடையவனாகிய அடியேன், விலை மகளீர் வலைப்பட்டு 
அழியாவண்ணம், உனது திருவருட் பிரகாசத் திருமேனியுடன் வந்து 
காத்தருள்வீர், 


தொடரும் திருப்புகழ் ........................................தொடர்ந்து வாருங்கள் 

No comments:

Post a Comment