Friday, December 6, 2013

தினம் ஒரு திருப்புகழ் - உலகோர்க்கு இரங்குதல்

தினம் ஒரு திருப்புகழ் - உலகோர்க்கு இரங்குதல் - 26






ராகம்: ஜயந்த ஸ்ரீ தாளம்: மிஸ்ரசாபு

சேமக் கோமள பாதத் தாமரை
சேர்தற் கோதும ...... நந்தவேதா

தீதத் தேயவி ரோதத் தேகுண
சீலத் தேமிக ...... அன்புறாதே

காமக் ரோதவு லோபப் பூதவி
காரத் தேயழி ...... கின்றமாயா

காயத் தேபசு பாசத் தேசிலர்
காமுற் றேயும ...... தென்கொலோதான்

நேமிச் சூரொடு மேருத் தூளெழ
நீளக் காளபு ...... யங்ககால

நீலக் ரீபக லாபத் தேர்விடு
நீபச் சேவக ...... செந்தில்வாழ்வே

ஓமத் தீவழு வார்கட் கூர்சிவ
லோகத் தேதரு ...... மங்கைபாலா




யோகத் தாறுப தேசத் தேசிக
வூமைத் தேவர்கள் ...... தம்பிரானே.


கருத்துரை: கடலும், சூரனும், மேருமலையும்
பொடிப்படும்மாறு, நஞ்சுடைய நெடிய பாம்பைக்
காலில் கொண்டுள்ளதும், நீல நிறம் பொருந்திய
கழுத்தை உடையதுமாகிய மயிலை செலுத்தியவரே!
உமையம்மையாரது குமாரரே! குருமூர்த்தியே!
தேவர்களது தலைவரே! இன்பந்தருவதும்,
இளமையானதுமாகிய பாதார விந்தங்களைச்,
சேருவதற்கு உலகத்தார் உயிருக்கு உறுதி தரும்
நலன்களை நாடாமல், காமத்திலும், கோபத்திலும்,
குரோதத்திலும், லோபத்திலும், ஐம்பெரும் பூத
வேறுபாட்டிலும், அழிகின்ற, மாயமாகிய உடம்பிலும்,
உயிர்கள் விரும்புகின்ற, உலகப்பொருள்களிலும் ஆசை
வைத்துள்ளது என்ன காரணமோ தெரியவில்லை









தொடரும் திருப்புகழ், ................................தொடர்ந்து வாருங்கள்

No comments:

Post a Comment