Friday, December 13, 2013

கோபமும் கொள்ள வேண்டும் - வாரியாரின் வைர வரிகள்


கோபமும் கொள்ள வேண்டும் - வாரியாரின் வைர வரிகள் 







காலத்துக்கு ஏற்றவாறு கோபத்தையும் பொறுமையையும் மேற்கொள்ள வேண்டும். கோபம் எப்போதும் மேலானதன்று. அதுபோல், பொறுமையும் எப்போதும் மேலானதன்று. எவன் ப்பொழுதும் பொறுமையுடன் இருக்கின்றானோ, அவனை வேலைக்காரனும் அவமதிப்பான். இட்ட கட்டளையை நிறைவேற்ற மாட்டான். பொறுமையுள்ளவனுடைய பொருள்களையும் வேலைக்காரர்கள் கவர்வதற்கு முயல்வார்கள். வேலைக்காரன் அவமதித்தால் அது மரணத்திலும் நிந்திக்கப்பட்டது. சீறுகின்ற நாகங்களைப் பூசிக்கின்றார்கள். நாகங்களைக் கொல்லுகின்ற கருடனைப் பூசிப்பதில்லை.




கோபமும் பொறாமையும்: கோபத்திலும் பல கெடுதல்கள் உண்டாகும். தண்ணீரை அளவுடன் சூடு பண்ணிக் குளிப்பதுபோல, கோபமும் அளவுடன் இருக்க வேண்டும். இவ்வாறு காலத்துக்கு ஏற்றவாறு கோபத்தையும் பொறுமையையும் கையாள வேண்டும். அப்படி இரண்டின் அவசியத்தைத் தெரிந்து நடப்பவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் சுகம் ஏற்படுகின்றது.




- திருமுருக கிருபானந்த வாரியார்

No comments:

Post a Comment