Friday, December 13, 2013

தினம் ஒரு திருப்புகழ் - திருவடி பெற

தினம் ஒரு திருப்புகழ் - திருவடி பெற  - நாள் - 33 






ராகம்: தன்யாசி / தர்பார்                       தாளம் : ஆதி 


நிதிக்குப் பிங்கலன் பதத்துக் கிந்திரன்
நிறத்திற் கந்தனென் ...... றினைவொரை

நிலத்திற் றன்பெரும் பசிக்குத் தஞ்சமென்
றரற்றித் துன்பநெஞ் ...... சினில்நாளும்

புதுச்சொற் சங்கமொன் றிசைத்துச் சங்கடம்
புகட்டிக் கொண்டுடம் ......பழிமாயும்

புலத்திற் சஞ்சலங் குலைத்திட் டுன்பதம்
புணர்க்கைக் கன்புதந் ...... தருள்வாயே

மதித்துத் திண்புரஞ் சிரித்துக் கொன்றிடும்
மறத்திற் றந்தைமன் ...... றினிலாடி

மழுக்கைக் கொண்டசங் கரர்க்குச் சென்றுவண்
டமிழ்ச்சொற் சந்தமொன் ...... றருள்வோனே

குதித்துக் குன்றிடந் தலைத்துச் செம்பொனுங்
கொழித்துக் கொண்டசெந் ...... திலின்வாழ்வே

குறப்பொற் கொம்பைமுன் புனத்திற் செங்கரங்
குவித்துக் கும்பிடும் ...... பெருமாளே.

கருத்துரை: முப்புரத்தையும் புன்னகையால் எரித்து 
அழித்தவரும், பொன்னம்பலத்தில் ஆனந்த நடனம் 
புரிபவரும், மழுவை கரத்தில் ஏந்தியவரும், சுகத்தை 
செயபவருமாகிய சிவபெருமானுக்குக் குருவாகச் 
சென்று வேதத்தில் உட்பொருளை உபதேசித்தவரே! 

திருசெந்தூரில் வாழ்பவரே!, வள்ளி மணாளரே! 
மனிதரைப் பாடாது, உமது பாதத்தில் அன்பினை 
வைக்கும்படி அருளுவீர்! 

தொடரும் திருப்புகழ் ...............................தொடர்ந்து வாருங்கள் 

No comments:

Post a Comment