Tuesday, December 3, 2013

தினம் ஒரு திருப்புகழ் - காலன் வருமுன் காட்சி பெற

தினம் ஒரு திருப்புகழ் - காலன் வருமுன் காட்சி பெற - நாள்  - 23 






ராகம்: மாயாமாளவ கௌளை                                தாளம்: கண்டசாபு / ஆதி 



காலனார் வெங்கொடுந் தூதர்பா சங்கொடென்
காலினார் தந்துடன் ...... கொடுபோகக்

காதலார் மைந்தருந் தாயரா ருஞ்சுடுங்
கானமே பின்தொடர்ந் ...... தலறாமுன்

சூலம்வாள் தண்டுசெஞ் சேவல்கோ தண்டமுஞ்
சூடுதோ ளுந்தடந் ...... திருமார்பும்

தூயதாள் தண்டையுங் காணஆர் வஞ்செயுந்
தோகைமேல் கொண்டுமுன் ...... வரவேணும்

ஆலகா லம்பரன் பாலதா கஞ்சிடுந்
தேவர்வா ழன்றுகந் ...... தமுதீயும்

ஆரவா ரஞ்செயும் வேலைமேல் கண்வளர்ந்
தாதிமா யன்றனன் ...... மருகோனே

சாலிசேர் சங்கினம் வாவிசூழ் பங்கயஞ்
சாரலார் செந்திலம் ...... பதிவாழ்வே

தாவுசூ ரஞ்சிமுன் சாயவே கம்பெறுந்
தாரைவே லுந்திடும் ...... பெருமாளே.


கருத்துரை:-  ஆலகால விடத்தை சிவபெருமானிடஞ் சேர்த்த பின், 
அவ்விடத்தைக் கண்டு அஞ்சி ஓடிய தேவர்கள், வாழுமாறு, அமிர்தத்தை தேவர்களுக்கு  நல்கியவரும், பாற்கடலில் பள்ளி கொண்டு அறிதுயில் புரியும் சிவபெருமானது, ஆதிசக்தியும் ஆகிய நாராயணரது மருகரே! திருச்செந்தூர் என்ற அழகிய தலத்தில் , வாழ்பவரே! போர் புரிய வந்த சூரபண்மனை எதிர் நிற்க முடியாது கூறிய வேலாயுதத்தைச் செலுத்திய பெருமைமிக்கவரே! கால தூதர்கள் வந்து என்னை கொண்டுபோக, மைந்தரும் தாயாரும் ஏனைய உறவினரும், வாய்விட்டுக் கதறி அழுகின்ற மரண அவஸ்தையை அடையுமுன், சூலம் முதலிய ஆயுதங்களுடன் மயில் மேல் வந்து அருள் புரிய வேண்டும்.


தொடரும் திருப்புகழ் ................................ தொடர்ந்து வாருங்கள் 

No comments:

Post a Comment