Monday, December 2, 2013

தினம் ஒரு திருப்புகழ் - திருவடி பெற

தினம் ஒரு திருப்புகழ் - திருவடி பெற  - நாள் 22





ராகம்: செஞ்சுருட்டி                                   தாளம்: ஆதி 


கமல மாதுடன் இந்திரை யுஞ்சரி
சொலவொ ணாதம டந்தையர் சந்தன
களப சீதள கொங்கையில் அங்கையில் ...... இருபோதேய்

களவு நூல்தெரி வஞ்சனை அஞ்சன
விழியின் மோகித கந்தசு கந்தரு
கரிய ஓதியில் இந்துமு கந்தனில் ...... மருளாதே

அமல மாகிய சிந்தைய டைந்தகல்
தொலைவி லாதஅ றம்பொருள் இன்பமும்
அடைய ஓதியு ணர்ந்துத ணந்தபின் ...... அருள்தானே

அறியு மாறுபெ றும்படி அன்பினின்
இனிய நாதசி லம்புபு லம்பிடும்
அருண ஆடக கிண்கிணி தங்கிய ...... அடிதாராய்

குமரி காளிப யங்கரி சங்கரி
கவுரி நீலிப ரம்பரை அம்பிகை
குடிலை யோகினி சண்டினி குண்டலி ...... எமதாயி

குறைவி லாள்உமை மந்தரி அந்தரி
வெகுவி தாகம சுந்தரி தந்தருள்
குமர மூஷிக முந்திய ஐங்கர ...... கணராயன்

மமவி நாயகன் நஞ்சுமிழ் கஞ்சுகி
அணிக ஜானன விம்பனொர் அம்புலி
மவுலி யானுறு சிந்தையு கந்தருள் ...... இளையோனே

வளரும் வாழையு மஞ்சளும் இஞ்சியும்
இடைவி டாதுநெ ருங்கிய மங்கல
மகிமை மாநகர் செந்திலில் வந்துறை ...... பெருமாளே.

கருத்துரை:- உமாதேவியார் அருளிய விநாயகப் பெருமானது 
இளைய சகோதரரே! செந்தில் வாழும் பெருமானே! பெண்களின் 
அவயங்களில் மயங்காது, தூயசிந்தையடைந்து
புருஷார்த்தங்களைப் பெற்று, தேவரீரது திருவருளை அடையுமாறு 
இனிய நாத சிலம்புகள் ஒலிப்பதும், சிவந்த நிறத்தோடு கூடியதும், 
பொன்னாலாகிய கின்கிணிகளை யனிந்துள்ளதுமாகிய 
திருவடிகளை அடியேனுக்கு அன்புடன் தந்தருள்வீர் 


தொடரும் திருப்புகழ்                                தொடர்ந்து வாருங்கள் 

No comments:

Post a Comment