Sunday, December 29, 2013

தினம் ஒரு திருப்புகழ் - திருவடி பெற

தினம் ஒரு திருப்புகழ் - திருவடி பெற  - நாள்  - 43






ராகம்: பாகேஸ்ரீ                                       தாளம்: கண்டசாபு 


அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து
அழகுபெற வேந டந்து ...... இளைஞோனாய்

அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று
அதிவிதம தாய்வ ளர்ந்து ...... பதினாறாய்

சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர்
திருவடிக ளேநி னைந்து ...... துதியாமல்

தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று
திரியுமடி யேனை யுன்ற ...... னடிசேராய்

ராகம்: காமவர்த்தினி

மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை
மணிமுடியின் மீத ணிந்த ...... மகதேவர்

மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த
மலைமகள்கு மார துங்க ...... வடிவேலா

பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து
படியதிர வேந டந்த ...... கழல்வீரா

பரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்து
பழநிமலை மேல மர்ந்த ...... பெருமாளே.



கருத்துரை: வேதாகமங்களின் உண்மையை வாய்திறந்து 
கூறாமல் மௌன முத்திரையைக் காட்டிய நன்கு 
விளங்குமாறு உபதேசித்து அருளியவரும்; சந்திரனையும், 
அருகம் புல்லையும், கங்கா நதியையும், தும்பைப் 
பூவையும், சடை முடியின் மீது தரித்துள்ள சிவமூர்த்தியின் 
இடப்பாகத்தில் உள்ள திருமகளாகிய, உமையம்மையாருடாய 
குமாரரே! கூர்மையுடைய வேலாயுதத்தை கரத்தில் தரித்தவரே!
மயிலின் மீது பவனி வரும் கழல்வீரா! செந்திலாதிபா! 
பழனி மலை மீது எழுந்தருளியவரே! அடியேன் உலகில் 
பிறந்து, வளர்ந்து, வாழப் பருவமடைந்து, வேதங்களை ஓதுகின்ற 
மேய்யன்பர்களுடைய திருவடிகளை துதிக்காமல், பெண் 
மயக்கத்தில்  சிக்கி வீணே அலையாமல் தேவரீரது 
திருஅடித் தாமரைகளில் சேர்ந்தது அருள்புரிவீர் .


தொடரும் திருப்புகழ் ............................தொடர்ந்து வாருங்கள் 

No comments:

Post a Comment