தினம் ஒரு திருப்புகழ் - உனை ஏவர் புகழ்வார் - நாள் - 44
ராகம்: சுத்தஸாவேரி / மோஹனம் / துர்கா / ஹிந்தோளம்
தாளம்: கண்டசாபு
ஆறுமுகம் ஆறுமுகம் ...... என்றுபூதி
ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி
யார்கள்பத மேதுணைய ...... தென்றுநாளும்
ஏறுமயில் வாகனகு காசரவ ணாஎனது
ஈசஎன மானமுன ...... தென்றுமோதும்
ஏழைகள்வி யாகுலமி தேதெனவி னாவிலுனை
யேவர்புகழ் வார்மறையு ...... மென்சொலாதோ
நீறுபடு மாழைபொரு மேனியவ வேலஅணி
நீலமயில் வாகவுமை ...... தந்தவேளே
நீசர்கட மோடெனது தீவினையெ லாமடிய
நீடுதனி வேல்விடும ...... டங்கல்வேலா
சீறிவரு மாறவுண னாவியுணு மானைமுக
தேவர்துணை வாசிகரி ...... அண்டகூடஞ்
சேருமழ கார்பழநி வாழ்குமர னேபிரம
தேவர்வர தாமுருக ...... தம்பிரானே.
கருத்துரை: திருநீறு படிந்துள்ள திருமேனியை உடையவரே
வேலாயுதரே! நீலமயில் வாகனரே! உமாதேவியின் புதல்வரே!
அசுரர்களுடைய தீவினைகள் முழுதும் அழிந்து போக வேற்படையை
விடுத் தருளியவரே! கஜமுகாசுரனது ஆவியைப் போக்கிய
கணபதியின் சகோதரரே! பழனியில் உரைபவரே! வரதரே!
ஆறுமுகம், ஆறுமுகம், என்று ஆறுமுறை ஓதி திருநீற்றை அணியும்
பெருந்தவமுடையவர்களது பாதமலரே உற்ற துணை என்று,
தொண்டர்களுடைய திருவடியையே பற்றுக் கோடாகக் கொண்டு
உம்மைத் துதித்து முறையிடும் ஏழைகளது, துன்பத்தை நீக்கியருளல்
வேண்டும்.
தொடரும் திருப்புகழ் தொடர்ந்து வாருங்கள்
No comments:
Post a Comment