Thursday, December 12, 2013

பிரபஞ்சத்தின் ஆதாரம்

பிரபஞ்சத்தின் ஆதாரம்





தெருவிலே ஒரு பூமாலை கிடக்கிறது. பகல் வேளையில் போகிறவர்களுக்கு அது பூமாலை என்பது நன்றாகத் தெரிகிறது. பயம் இல்லாமல் போகிறார்கள். அரை இருட்டு. எவனோ அந்தப் பக்கம் வந்தவன் அதை மிதித்துவிட்டு, "'ஐயோ பாம்பு, பாம்பு'' என்று பயத்தால் கத்துகிறான்.

மாலையாக இருப்பதும் பாம்பாக இருப்பதும் ஒன்றுதான். இது மாலைதான் என்று தெரிந்தவுடன் அவனுக்கும் பாம்பு இல்லை என்று தெரிந்துவிடுகிறது. ஆனால் முதலில் பாம்புக்கு ஆதாரமாக இருந்தது என்ன? மாலைதான்.

"இந்தப் பிரபஞ்சத்திற்குள் நான் இருக்கிறேன். பிரபஞ்சம் என்னிடத்தில் இருக்கிறது'' என்று சொன்னால் என்ன அர்த்தம்? "மாலைக்குள்தான் பாம்பு இருக்கிறது. பாம்புக்குள்தான் மாலை இருக்கிறது'' என்பது எப்படியோ அப்படித்தான். பாம்பு என்று அலறுபவனுக்கு! பாம்புக்கு ஆதாரமாக இருப்பது மாலை. அஞ்ஞானம் நீங்க, "இது மாலைதான்' என்று உணர்ந்து கொண்டவனுக்கு மாலை பாம்பைத் தன்னுள் மறைத்து விடுகிறது. மாலைதான் தெரிகிறது.

மாயையினால் மூடப்பட்டுப் பிரபஞ்சத்தைச் சத்தியம் என்று பார்ப்பவனுக்கு, பிரபஞ்சத்துக்கு ஆதாரமாக இருந்து தாங்குபவன்தான் ஈசுவரன்.

- காஞ்சி ஸ்ரீமகாபெரியவர்

No comments:

Post a Comment