"தாத்தா பாட்டியை விட வேறே சிறந்த குரு யாரும் கிடையாது"
ஸ்ரீ சி. ஆர். சுவாமிநாதன் - மத்திய அரசில் பெரும் பதவி வகித்தவர் அவர் சொன்னதிலிருந்து:
சென்னை ஸம்ஸ்கிருத கல்லூரியிலே 1956-57லே மஹா பெரியவா சில நாள் தங்கி, சாயந்திரம் தினமும் பிரசங்கம் நடைபெறும். கேக்கணுமா. பெரியவா பேச்சை கேக்க கூட்டம் அலைமோதும். அன்று ராஜாஜி வந்திருந்தார். என்ன பேசறதுன்னு மகாபெரியவா முடிவு பண்ணலை. பக்கத்திலே ப்ரொபசர் சங்கரநாராயணன் நிக்கறதை பெரியவா பாத்து அவரை பக்கத்திலே கூப்பிட்டா.
அவர்கிட்ட ஒரு ஸ்லோகத்தைச் சொல்லி அதிலே முதல் ரெண்டு வரியை சொன்னா.
''உனக்கு அடு த்த ரெண்டு வரி இருக்கே அது தெரியுமா?
.
''பெரியவா க்ஷமிக்கணும். எனக்கு தெரியலை''
இப்படி பெரியவா ஒரு ஸ்லோகத்தை பத்தி பேசினது மைக்லே எல்லோருக்கும் கேட்டுடுத்து.
கூட்டத்திலே ஒருத்தருக்கு அந்த ஸ்லோகம் தெரிஞ்சிருந்தது. அவர் மெதுவாக மேடைக்கு அருகே வந்து ப்ரொபசர் சங்கரநாராயணன் கிட்டே '' சார், பெரியவா கேட்ட அந்த பாக்கி ரெண்டு அடி எனக்கு தெரியும் அது இதுதான் என்று அவரிடம் சொன்னதை ப்ரொபசர் சந்தோஷமா மேடையிலேறி பெரியவா கிட்ட
''பெரியவா அந்த மீதி ரெண்டு வரி இது தான் என்று சொன்னவுடன்
''நான் கேட்ட போது தெரியாதுன்னியே''?
''ஆமாம் பெரியவா. கூட்டத்திலே யாரோ ஒருவருக்கு தெரியும்னு வந்து எங்கிட்ட சொன்னதைத்தான் பெரியவா கிட்ட சொன்னேன். ''
''அவரை இங்கே அழைச்சிண்டு வா''
இந்த நிகழ்ச்சியை சொன்ன சி.ஆர். சுவாமிநாதனை மேடையில் தன் கிட்ட கூப்பிட்டு பெரியவா
''நீ தான் அந்த ரெண்டு வரியை சொன்னதா?''
''ஆமாம் பெரியவா''
''எங்க படிச்சே?''
''மெட்ராஸ்லே பிரெசிடென்சி காலேஜ்லே''
''நான் அதைக் கேக்கலே. இந்த ஸ்லோகத்தை எங்கே படிச்சே?''
''எங்க தாத்தா சொல்லிகொடுத்தது சின்ன வயசுலே''
''எந்த வூர் நீ, உங்க தாத்தா யார்?''
சுவாமிநாதன் விருத்தாந்தம் எல்லாம் சொன்னார்.
பெரியவா சுவாமிநாதன் பேசினது அத்தனையும் மைக் வழியா சகல ஜனங்களும் கேட்டிண்டு இருந்தா.
பெரியவா சொன்ன ஸ்லோகம் இது தான்
அர்த்தாதுரணாம் ந குருர் ந பந்து ,
க்ஷுதாதுராணாம் ந ருசிக்கி ந பக்வம் ,
வித்யாதுராணாம் , ந சுகம் ந நித்ரா ,
காமாதுராணாம் ந பயம் ந லஜ்ஜா
பணமே லக்ஷியம் என்று தேடுபவனுக்கு குரு ஏது பந்துக்கள் ஏது?
பசி காதடைக்கிறவனுக்கு ருசியோ, பக்குவமோ அவசியமா?
படித்து முன்னேர முனைபவனுக்கு வசதியோ தூக்கமோ ரெண்டாம் பக்ஷம் தானே?
காமாந்தகாரனுக்கு பயமேது வேடகமேது?
தான் பிறகு பேசும்போது பெரியவா கேநோபநிஷதிலிருந்து மேற்கோள்கள் காட்டினார். எப்படி பார்வதி தேவி தேவர்களுக்கு பிரம்மத்தை உபதேசித்தால் என்றெல்லாம் விளக்கிவிட்டு
இப்போ பேசுறதுக்கு முன்னாலே ஒருத்தரை மேடைகிட்ட கூப்பிட்டு ஒரு ஸ்லோகத்தின் முதல் ரெண்டு அடிகளை சொல்லி பாக்கி தெரியுமா என்றதற்கு தெரியும் என்றார். எங்கே தெரிஞ்சுண்டே என்று கேட்டதற்கு,சின்ன வயசிலே தாத்தா வீட்டிலே சொல்லிக்கொடுத்தார் என்றார். எனக்கு அவா குடும்பத்தை தெரியும்.
இந்த நிகழ்ச்சியிலிருந்து என்ன தெரிகிறது?
நான் எதுக்கு இதை பெரிசா எடுத்து சொல்றேன்னா, இதெல்லாம் வீட்டிலே பெரியவா கிட்டே தெரிஞ்சிக்கணும். இதெல்லாம் பள்ளிக்கூடத்திலேயோ, காலேஜ்லேயோ சொல்லித்தரமாட்டா. சேர்ந்து ஒண்ணா வாழற குடும்ப வாழ்க்கையிலே இது ஒரு பெரிய லாபம் என்பதைபுரிந்து கொள்ள உதவும்.
தாத்தா பாட்டிகள் ஒரு பொக்கிஷம். நிறைய விஷயங்களை அவா கிட்டேயிருந்து தெரிஞ்சிக்கலாம்
சின்ன வயசிலேயே சொல்லிக்கொடுக்க தாத்தா பாட்டியை விட வேறே சிறந்த குரு யாரும் கிடையாது. மனதில் நன்றாக படியும் . அது தான் பசுமரத்தாணி என்கிறது
No comments:
Post a Comment