Saturday, December 21, 2013

தினம் ஒரு திருப்புகழ் - ஒன்றைப் பெற

தினம் ஒரு திருப்புகழ் - ஒன்றைப் பெற - நாள் - 36







ராகம்: ரஞ்சனி / ஹூஸேனி                          தாளம்: ஆதி(திச்ரம்)



புகரப் புங்கப் பகரக் குன்றிற்
புயலிற் றங்கிப் ...... பொலிவோனும்

பொருவிற் றஞ்சச் சுருதிச் சங்கப்
பொருளைப் பண்பிற் ...... புகல்வோனும்

திகிரிச் செங்கட் செவியிற் றுஞ்சத்
திகிரிச் செங்கைத் ...... திருமாலும்

திரியப் பொங்கித் திரையற் றுண்டுட்
டெளிதற் கொன்றைத் ...... தரவேணும்

தகரத் தந்தச் சிகரத் தொன்றித்
தடநற் கஞ்சத் ...... துறைவோனே

தருணக் கொங்கைக் குறவிக் கின்பத்
தையளித் தன்புற் ...... றருள்வோனே

பகரப் பைம்பொற் சிகரக் குன்றைப்
படியிற் சிந்தத் ...... தொடும்வேலா

பவளத் துங்கப் புரிசைச் செந்திற்
பதியிற் கந்தப் ...... பெருமாளே.


கருத்துரை: நல் இதயக் கமலத்தில் உரைகின்றவரே! 
வள்ளிப் பிராட்டிக்கு பேரின்பத்தை வழங்கி அருள் புரிந்தவரே!
கிரௌஞ்ச மலை பொடிபடுமாறு வேலாயுதத்தை விடுத்தருளியவரே!
செந்திலம்பதியில் உள்ள பெருமை மிக்கவரே! மலை போன்ற 
ஐராவதம் என்கிற வெள்ளை யானை மீதும், மேகத்தின் மீதும், 
விளங்குகின்ற இந்திரனும், வேதத்தின் தொகுதிக்குப் பொருள் 
கூறுகின்ற நான்முகக் கடவுளும், சர்ப்ப அரசின் மீது அறிதுயில் 
புரிகின்றவரும், சக்கரம், சங்கையுடையவருமான நாராயணரும்
உபதேசப் பொருள் கிடைக்கவில்லையே என்று உள்ளம் வருத்த 
என்ன அலைகள் ஓயவும், உள்ளம் தெளிவு பெறவும், ஒப்பற்ற ஒரு 
மொழியை, அடியேனுக்கு உபதேசித்து அருள் புரிய வேண்டும். 


தொடரும் திருப்புகழ் ----------------------------தொடர்ந்து வாருங்கள் 

No comments:

Post a Comment