ராகம் : கமாஸ் தாளம்: ஆதி
வரியார் கருங்கண் ...... மடமாதர்
மகவா சைதொந்த ...... மதுவாகி
இருபோ துநைந்து ...... மெலியாதே
இருதா ளினன்பு ...... தருவாயே
பரிபா லனஞ்செய் ...... தருள்வோனே
பரமே சுரன்ற ...... னருள்பாலா
அரிகே சவன்றன் ...... மருகோனே
அலைவா யமர்ந்த ...... பெருமாளே.
கருத்துரை: எல்லா உயிர்களையும் காத்தருல்பவரே! சிவமூர்த்தியின் குமாரரே! மால் மருகரே! செந்தூரில் விரும்பி எழுந்தருளியுள்ள பெருமிதம் உடையவரே! மனைவி, மக்கள், குழந்தைகள் என்ற பாசத்தினால் அடியேன் மெலியாமல், உமது சரணார விந்தத்தின் மீது உண்டாகும் அன்பைத் தந்தருள்வீர் .
தொடரும் திருப்புகழ் ............................. தொடர்ந்து வாருங்கள்
No comments:
Post a Comment