Sunday, December 1, 2013

தினம் ஒரு திருப்புகழ் - வாழ்வு பெற

தினம் ஒரு திருப்புகழ்  - வாழ்வு பெற    -   நாள் 21



ராகம் : நாத நாமக்ரியை / நவரோஸ்         தாளம் :-  ஆதி


ஏவினை நேர்விழி மாதரை மேவிய
ஏதனை மூடனை ...... நெறிபேணா

ஈனனை வீணனை ஏடெழு தாமுழு
ஏழையை மோழையை ...... அகலாநீள்

மாவினை மூடிய நோய்பிணி யாளனை
வாய்மையி லாதனை ...... யிகழாதே

மாமணி நூபுர சீதள தாள்தனி
வாழ்வுற ஈவது ...... மொருநாளே

நாவலர் பாடிய நூலிசை யால்வரு
நாரத னார்புகல் ...... குறமாதை

நாடியெ கானிடை கூடிய சேவக
நாயக மாமயி ...... லுடையோனே

தேவிம நோமணி ஆயிப ராபரை
தேன்மொழி யாள்தரு ...... சிறியோனே

சேணுயர் சோலையி னீழலி லேதிகழ்
சீரலை வாய்வரு ...... பெருமாளே.

கருத்துரை :- புலவர்கள் பாடிய நூல்களை இசையினால் பாடிப்
பரப்பி வருகின்ற நாரதமுநிவர் அறிவித்த வள்ளி பிராட்டியை 
மருவிய வீரரே! மயில் வாகனரே! உமையம்மை பெற்ற இளம் 
புதல்வரே! திருசெந்தூரில் எழுந்தருளியுள்ளவரே! 

கூறிய கண்களையுடைய பெண்களை விரும்பிய குற்றமுடையவனும் 
அறிவில்லாதவனும், நல்லவழி விரும்பாதவனும், வீண் பொழுது
போக்குவபனும், ஏடு எடுத்து எழுதாத முட்டாளும், மடையனும், 
நோய்களால் கட்டுண்டவனும், உண்மையில்லாதவனுமாகிய
அடியேனை இகழ்ந்து தள்ளி விடாமல், உயர்ந்த இரத்தின மணிகள் 
பதித்த சிலம்பணிந்த குளிர்ந்த திருவடியை அடியேனுக்கு ஒப்பில்லாத 
உயர்ந்த வாழ்வைப் பெறுமாறு தருகின்ற நாள் என்று உண்டாகுமோ?

தொடரும் திருப்புகழ் ........................ தொடர்ந்து வாருங்கள்

No comments:

Post a Comment