Monday, December 16, 2013

தினம் ஒரு திருப்புகழ் - ஒன்றாகச் சேர

தினம் ஒரு திருப்புகழ் - ஒன்றாகச் சேர  - நாள் - 37  





ராகம்: மாண்ட                                     தாளம்: ஆதி 


மூளும்வினை சேர மேல்கொண்டி டாஐந்து
பூதவெகு வாய மாயங்கள் தானெஞ்சில்
மூடிநெறி நீதி யேதுஞ்செ யாவஞ்சி ...... யதிபார

மோகநினை வான போகஞ்செய் வேனண்டர்
தேடஅரி தாய ஞேயங்க ளாய்நின்ற
மூலபர யோக மேல்கொண் டிடாநின்ற ...... துளதாகி

நாளுமதி வேக கால்கொண்டு தீமண்ட
வாசியன லூடு போயொன்றி வானின்க
ணாமமதி மீதி லூறுங்க லாஇன்ப ...... அமுதூறல்

நாடியதன் மீது போய்நின்ற ஆநந்த
மேலைவெளி யேறி நீயின்றி நானின்றி
நாடியினும் வேறு தானின்றி வாழ்கின்ற ...... தொருநாளே

காளவிட மூணி மாதங்கி வேதஞ்சொல்
பேதைநெடு நீலி பாதங்க ளால்வந்த
காலன்விழ மோது சாமுண்டி பாரம்பொ ...... டனல்வாயு

காதிமுதிர் வான மேதங்கி வாழ்வஞ்சி
ஆடல்விடை யேறி பாகங்கு லாமங்கை
காளிநட மாடி நாளன்பர் தாம்வந்து ...... தொழுமாது

வாளமுழு தாளு மோர்தண்டு ழாய்தங்கு
சோதிமணி மார்ப மாலின்பி னாளின்சொல்
வாழுமுமை மாத ராள்மைந்த னேயெந்தை ...... யிளையோனே

மாசிலடி யார்கள் வாழ்கின்ற வூர்சென்று
தேடிவிளை யாடி யேயங்ங னேநின்று
வாழுமயில் வீர னேசெந்தில் வாழ்கின்ற ...... பெருமாளே.


கருத்துரை: ஆலகாலவிடத்தை உண்டவரும், மதங்க முநிவருக்கு
புதல்வியாகத் திரு அவதாரம் புரிந்தவரும், வேதங்களால், புகழப்படுபவரும்,
துர்கையாக அவதரித்தவரும், இயமன் உயிர் துறந்து வீழும்
வண்ணம் திருவடியால் உதைத்து வீழ்த்தியவரும், பஞ்ச பூதங்களின்
அந்தர் யாமியான உறைபவரும், ஆனந்த தாண்டவம் புரிபவரும், தரும் விடையின் மீது எழுந்தருளியவருமாகிய சிவபிரானின் இடப் பாகத்தில் அடர்ந்த ஒளி வீசுகின்ற திருமாலினது சகோதரியாகிய, உமா தேவியின் திருக்குமாரரே! சிவப்புதல்வரே! அடியாருடன் வாழும் மயில் வீரரே! செந்திலில் எழுந்தருளியுள்ள பெருமானே! பண்டை வினையால் அழியும்
அடியேன், சிவயோக சாதனையில் நின்று, மூலக்கனலை எழுப்பி, அமிர்த இன்பக் கலையின் பொழிவை நாடி, ஆனந்த மேலைப் பெருவெளியிற் சென்று , அங்கு நீ, நான் என்ற வேற்றுமையின்றி முத்தியடைந்து, சிவானந்தப் பெருவாழ்வில் சிவா போகத்தைத் துய்க்கும் பரம சுகப் பெருவாழ்வை அடையும் நாள் ஒன்று அடியேனுக்கு உண்டாகுமோ?



தொடரும் திருப்புகழ்   .......................................தொடர்ந்து வாருங்கள்

No comments:

Post a Comment