தினம் ஒரு திருப்புகழ் - நோய் அற ஞான நூல் ஓத - நாள் - 32
காவடி சிந்து ஆதி / சாபு
நாரி யென்பி லாகு மாக ...... மதனூடே
நாத மொன்ற ஆதி வாயில் நாட கங்க ளான ஆடி
நாட றிந்தி டாம லேக ...... வளராமுன்
நூல நந்த கோடி தேடி மால்மி குந்து பாரு ளோரை
நூறு செஞ்சொல் கூறி மாறி ...... விளைதீமை
நோய்க லந்த வாழ்வு றாமல் நீக லந்து ளாகு ஞான
நூல டங்க வோத வாழ்வு ...... தருவாயே
காலன் வந்து பால னாவி காய வென்று பாசம் வீசு
காலம் வந்து வோல மோல ...... மெனுமாதி
காம னைந்து பாண மோடு வேமி னென்று காணு மோனர்
காள கண்ட ரோடு வேத ...... மொழிவோனே
ஆல மொன்று வேலை யாகி யானை யஞ்சல் தீரு மூல
ஆழி யங்கை ஆயன் மாயன் ...... மருகோனே
ஆர ணங்கள் தாளை நாட வார ணங்கை மேவு மாதி
யான செந்தில் வாழ்வ தான ...... பெருமாளே.
கருத்துரை:
மார்கண்டேயருடைய உயிரை வருத்த வேண்டும் என்று யமன் பாசக் கையிற்றை வீசும் சமயம், "அஞ்சேல் அஞ்சேல்" என்று அருள் புரிந்த ஆதி முதல்வரும், நெற்றிக் கண்ணை திறந்து மன்மதன் அழிய காரணமான மோன தேசிகரும், திரு நீலகண்டரும், ஆகிய சிவமூர்த்தியுடன் வேத முதலாகிய பிரணவத்தின் பொருளைப் பேசியவரே! கஜேந்திரன் ஆதிமூலமே என்று அழைத்த பொது அவன் அச்சத்தைத் தீர்த்த நாராயண மூர்த்தியின் மறுகரே!
சேவற் கொடியை திருக்கரத்தில் ஏந்தி திருசெந்தூரில் வாழ்கின்ற பெருமை மிக்கவரே! இந்த உடம்புடன் கூடித் துன்புறாமல் ஞான வாழ்வை அருள்வீர்.
தொடரும் திருப்புகழ் .............................தொடர்ந்து வாருங்கள்
No comments:
Post a Comment