Wednesday, December 11, 2013

தினம் ஒரு திருப்புகழ் - மெய்ஞ்ஞானத் தவம் பெற

தினம் ஒரு திருப்புகழ் - மெய்ஞ்ஞானத்  தவம் பெற  - நாள் 31 




ராகம்: தோடி / ஜோன்புரி                                தாளம்: ஆதி 


தோலொடு மூடிய கூரையை நம்பிப்
பாவையர் தோதக லீலைநி ரம்பிச்
சூழ்பொருள் தேடிட வோடிவ ருந்திப் ...... புதிதான

தூதொடு நான்மணி மாலைப்ர பந்தக்
கோவையு லாமடல் கூறிய ழுந்தித்
தோமுறு காளையர் வாசல்தொ றும்புக் ...... கலமாருங்

காலனை வீணனை நீதிகெ டும்பொய்க்
கோளனை மானமி லாவழி நெஞ்சக்
காதக லோபவ்ரு தாவனை நிந்தைப் ...... புலையேனைக்

காரண காரிய லோகப்ர பஞ்சச்
சோகமெ லாமற வாழ்வுற நம்பிற்
காசறு வாரிமெய்ஞ் ஞானத வஞ்சற் ...... றருளாதோ

பாலன மீதும னான்முக செம்பொற்
பாலனை மோதப ராதன பண்டப்
பாரிய மாருதி தோள்மிசை கொண்டுற் ...... றமராடிப்

பாவியி ராவண னார்தலை சிந்திச்
சீரிய வீடணர் வாழ்வுற மன்றற்
பாவையர் தோள்புணர் மாதுலர் சிந்தைக் ...... கினியோனே

சீலமு லாவிய நாரதர் வந்துற்
றீதவள் வாழ்புன மாமென முந்தித்
தேமொழி பாளித கோமள இன்பக் ...... கிரிதோய்வாய்

சேலொடு வாளைவ ரால்கள்கி ளம்பித்
தாறுகொள் பூகம ளாவிய இன்பச்
சீரலை வாய்நகர் மேவிய கந்தப் ...... பெருமாளே.


கருத்துரை:  நான்முகனை பிரணவ அர்த்தம் கேட்டு அதற்க்கு 
விழித்தமையால், தண்டனை புரிந்தவரே!  இராவணனை 
புரிந்த இரகு வீரரது, மருகரே! நாரதர் புகல வள்ளியை மணந்தவரே! 
செந்தில் மாநகரத்தில் வாழும் சுந்தரமூர்த்தியே! பெருமை மிக்கவரே !
தோலால் மூடிய சிறு குடிலை நம்பி, மாதர் மயலுற்று, பொருள் 
தேடுமாறு நரதுதி செய்து அலையும் தீயவனாகிய அடியேன் 
விரும்பினால், உலக துன்பமற மெய்ஞ் ஞானத்தோடு கூடிய 
தவநிலையை உண்டாகத் திருவருள் சிறிது அருள் புரியாதோ ?

தொடரும் திருப்புகழ் ........................... தொடர்ந்து வாருங்கள்

No comments:

Post a Comment