Sunday, November 24, 2013

சோழன் கட்டிய ஆலயம்!

சோழன் கட்டிய ஆலயம்!







ஒருமுறை கயிலை சென்று, கயிலாசநாதரை தரிசித்தால் பாவங்கள் அனைத்தும் சாம்பலாகின்றன'' என்கிறது கந்தபுராணம். ஆனால் எல்லோராலும் அப்படி சென்று வழிபட முடிவதில்லை.

எனவேதான் கருணையே வடிவான ஈசன், கயிலைநாதர் என்ற திருநாமத்தோடு ஆங்காங்கே எழுந்தருள்கிறார். இப்படியமைந்த ஓர் ஆலயம்தான் அரியலூர் மாவட்டம், அம்பளவர்கட்டை கிராமத்தில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் சமேத கயிலாசநாதர் திருக்

கோயில்.

இராஜேந்திரசோழனால் கட்டப்பட்டது இந்த ஆலயம். இங்கே சிறுதொண்ட நாயனார் குரு பூஜைநாளான சித்திரை அமாவாசை அன்று அமுது படையல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுகிறது.

இந்த ஆலயத்தில் சனி பகவான் தனி ஆலயத்தில் அருள்பாலிப்பது விசேஷம். எனவே இவ்வாலயம் சனி பகவானால் ஏற்படும் தோஷங்களுக்கு பரிகாரத் தலமாக விளங்குகிறது. மற்ற கிரகங்களுக்கு இவ்வாலயத்தில் சந்நிதி இல்லை.

இத்தகைய பெருமை வாய்ந்த இவ்வாலயத்தில் தற்போது திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தகவலுக்கு: 97509 49513

No comments:

Post a Comment