Thursday, November 21, 2013

உளிபடாத லிங்கத் திருமேனி

உளிபடாத லிங்கத் திருமேனி



கோவையின் வடக்கே அமைந்துள்ளது அக்ரஹார சாமக்குளம் கிராமம். கரிகால் சோழனின் முக்கிய மந்திரிகளில் ஒருவரான சாமய்யன் என்பவர் இங்கு சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் குளம் வெட்டி விவசாயம் செழிப்புற ஏற்பாடுகள் செய்தார். ஆகவே இந்த கிராமம் அக்ரஹார சாமக்குளம் என அழைக்கப்படுகிறது. இங்குதான் ஸ்ரீவிசாலாட்சி சமேஸத ஸ்ரீவிஸ்வேஸ்வர ஸ்வாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த சிவலிங்கம் உளிபடாத லிங்கத் திருமேனி.

ஈசானிய மூலையில் அமைந்துள்ள சிவன் கோயிலில் ஸ்வாமி மூலவர் கிழக்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் அமைந்துள்ளனர். மேலும் அதிகார நந்தி, பிரதோச நந்தி, விஷ்ணு நந்தி, கிழக்கே அக்னி மூலையில் சூரியன்,கன்னி மூலையில் ஸ்ரீவிநாயகப் பெருமான், மேற்குப் பிராகாரத்தில் ஸ்ரீஐயப்பன், வாயு மூலையில் வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்ரமண்ய ஸ்வாமி ஆகியோர் அருள்புரிகின்றனர்.

ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீ வைஷ்ணவி, ஸ்ரீதுர்க்கை ஆகியோர் சந்நிதிகளும் அமைக்கப்பட்டு சிறப்பாக பூஜைகள் நடக்கின்றன.

இத்தகைய பெருமை வாய்ந்த இவ்வாலயத்தில் நவ: 22 (இன்று) கும்பாபிஷேகம் நடக்கிறது.

அதைத் தொடர்ந்து மதியம் சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம், மாலையில் சுவாமி திருக்கல்யாண வைபவம், ஸ்வாமி திருவீதி உலா ஆகிய விசேஷங்களும் நடக்கின்றன.

தகவலுக்கு: 98438 00631

No comments:

Post a Comment