Sunday, November 24, 2013

முந்திரி பக்கோடா

 முந்திரி பக்கோடா:   By Velammal Gurusamy





முந்திரி ஒரு காஸ்ட்லியான உணவில் சேர்க்கும்
பொருள் தான் , ஆனாலும் நாம் அதை என்றுமே
தவிர்த்ததில்லை, முதலில் அதன் சுவை, அதன்
அழகு சேர்க்கும் விதம் இவை அனைத்துமே காரணம்

சிலநேரங்களில் நம்மை அறியாமல் முந்திரி வீட்டில்
தீர்ந்து போவதும் உண்டு, அதிகபடியான அளவு
தேங்கி போய்விடுவதும் உண்டு .

முன்பெல்லாம் எங்கள் வீட்டில் பலசரக்கு வாங்கும்
கடையில் (சென்னையில் தான்) வீட்டிற்கு பலசரக்கு
வாங்க லிஸ்ட் கொடுத்து விட்டு வந்தால் , வீட்டிற்கு
லிஸ்ட் பிரகாரம் அனுப்பி வைத்து விடுவார்கள் , பார்த்தால்
அதில் முந்திரி , திராட்சை பொட்டலம் இருக்கும் நாம்
ஆர்டர் கொடுக்காமலே, கடைக்காரரின் இனாமாக.

இன்று நிலைமை மாறிவிட்டது அது வேறு விஷயம்
கூட்டு குடும்பமும் இல்லை, பொருட்களின் விளையும்
விண்ணை தாண்டி வருவாயா என்று கேட்கும் நிலை.

முந்திரி பகோடா செய்வது ஒரு எளிய முறை
எளிதில் எவரும் செய்யக்கூடியது , சுவை நிறைந்தது

வீட்டில் முந்திரி நிறைய இருந்தது. என்ன செய்வது என்று யோசனை. நினைவுக்கு வந்தது பக்கோடா.

ஒரு கப் முந்திரியை பாத்திரத்தில் கொட்டி இரண்டு கப் கடலைமாவு, ஒரு டேபிள் ஸ்பூன் அரிசிமாவு, சுவைக்கேற்ப உப்பு மிள்காய்த்தூள் கறிவேப்பிலை பெருங்காயப்பொடி தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து எண்ணெயில் கிள்ளிப்போட்டு பொரித்தெடுத்தேன் மொறு மொறு என்று சுவையான முந்திரி பக்கோடா கிடைத்தது.

சும்மாவா சுந்தரி செய்த முந்திரி பகோடா
சுவைத்து பாருங்கள், அழைத்து கூறுங்கள் 

No comments:

Post a Comment