Sunday, November 24, 2013

அப்பளப்பொறியல் .

அப்பளப்பொறியல் . by: Velammal Gurusamy



வீட்ல பொறியல் செய்யலைன்னா , பிள்ளைங்களோ
கணவன்மார்களோ கேப்பாங்க , என்னம்மா ஒரு அப்பளம்
சுட்டோ , காய்ச்சியோ வெச்சிருக்க கூடாதா அப்டின்னு

அப்படி அப்பளம் நமது அன்றாட வாழ்வில் இணைந்துவிட்ட ஒன்று .
காலை உணவில் இட்லி எப்படியோ அப்படியே மதிய உண்வில் அப்பளம் அப்பளமில்லாமல், அன்னாளில் எந்த விருந்துச்சாப்பாடும் இருந்ததில்லை திருமணம், மற்றும் பலவித சடங்குகளும் அவரவர் சொந்த வீட்டிலேயே நடக்கும். ஆயிரக்கணக்கில் அப்பளங்கள் பொரிப்பார்கள். சாப்பிடும் போது எத்தனை அப்பளம் வேண்டுமானாலும் கேட்டு வாங்கிக் கொள்ள்லாம்.

சிலர் ரசம் சாதத்தோடு பிசைந்து சாப்பிடுவார்கள்.
சிலர் பாயசத்தோடு, சிலர் தயிர்சாதத்தோடுசேர்த்து சாப்பிடுவார்கள். இப்பெல்லாம் இலைக்கு ஒன்றுதான் வரும் .அதுவும் கடைசி இலைக்கு இருக்காது. ஆனையடி அப்பளம் என்று சொல்வார்கள் .அது நாம் சாப்பிடும் இலையின் அகலத்துக்கு பெரிதாக இருக்கும்.
அப்பெல்லாம் விஷேஷம்முடிந்த வீட்டில் நூற்றுக் கணக்கில் அப்பளங்கள் மீந்துவிடும். அப்போ உருவானதுதான் இந்த அப்பளப் பொரியல்.

தஞ்சாவூர் பக்கம், பாயசம் இலையில் போடும் பொழுது
அடுத்து உடனே ஒருவர் அப்பளம் போட்டுக்கொண்டே வருவார்
பாயசத்தில் அப்பளத்தை போட்டு நொறுக்கி சாப்பிடுவது தனி சுவை

அப்பளத்தை நன்கு நொறுக்கி  அதோடு பொடியாக நறுக்கிய வெங்காயம் , பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து,துருவிய தேங்காயும் போட்டு கிளறினால் கிடைப்பதுதான் சுவையான அப்பாளப் பொரியல்.