Tuesday, November 19, 2013

அச்சு முருக்கு

அச்சு முருக்கு .....by Velammal Gurusamy


இது ஒரு ஸ்ரீ லங்கன் ஸ்நாக்ஸ் .நமது தீபாவளியைப்போல அவர்கள் புத்த ஜெயந்தி அன்று இதைச் செய்வார்கள். இதற்கு அவர்கள் சொல்லும் பெயர் கொக்கிஸ். 

நம் நாட்டில் அச்சு முறுக்கு என்கிறோம். சிலர் இதை ரோஸ் குச்சி என்கிறார்கள்.
இதைச் செய்ய கண்டிபாக அச்சு (மோல்ட் )வேண்டும் .இது விதவிதமான டிசைன்களில் கடையில் கிடைக்கும்.

பச்சரிசியை ஊறவைத்து பொடித்து அதோடு கொஞ்சம் சர்க்கரை தேங்காப்பால் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலக்க வேண்டும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து முறுக்கு அச்சை எண்ணெய்யில் மூழ்கும் படியாக வைக்க வேண்டும். அச்சு நன்கு 
சூடானதும், அதை மாவில் முக்கால் பாகம் மூழ்கும் படியாக முக்கி எண்ணெய்க்குள் வைத்து லேசாக அசைக்க வேண்டும்.

முறுக்கு அச்சிலிருந்து கழன்று எண்ணெய்க்குள் விழும்.
உடனே திருப்பிப் போட்டு ,எடுத்துவிட வேண்டும் .ஒவ்வொரு 
முறுக்காக மாவில் சூடான அச்சை முக்கி சுடவேண்டும்.
கொஞ்சம் பொறுமை வேண்டும். 

சுட்ட முறுக்குகள் வெள்ளைவெளெரென்று மொறுமொறுப்பாக வாயில் போட்டதும் கரையும் .குட்டிக் குழந்தைகள் அச்சு முறுக்கை வச்சு வாங்குவாங்க .

No comments:

Post a Comment