Pressure Cooker Rasam - Sadam ........................
by: Savithri Vasan (Courtesy Ms Saraswathi Jayaraman)
சிலநேரங்களில் வீட்டில் கணவன் மனைவி
இருவரும் ஒரு சேர அவசரநிமித்தம் வெளியே
செல்ல நேரிடும் முக்கிய வேலை காரணமாக
இப்படிதான் ஒருநாள் எனது மனைவியும் நானும்
காலை 7 மணிக்கு புறப்பட்டு சென்றோம் , விரைவில்
வேலை முடிந்து வந்து விடலாம் , வந்து சமையல்
செய்து சாப்பிடலாம் என்று கருதி. வீட்டில் இருந்த
பழைய சாதத்தை கரைத்து குடித்துவிட்டு
கிளம்பிவிட்டோம் .
எதிர் பாராதவிதமாக சென்ற இடத்தில நேரம் அதிகமாக
செலவிட வேண்டிய நிலை , வீட்டிற்கு வர மதியம்
1 மணி ஆகி விட்டது.
என்ன செய்யலாம், வீட்டிலே சமைக்கலாமா
அல்லது வெளியில் இருந்து ஏதாவது வாங்கி
வந்திருக்கலாமோ என்ற மனக்குழப்பம்
திடீர் என்று எனது மனிவியின் தோழி ஒருவர்
சொன்ன குறிப்பு நினைவில் வந்தது , சாதம், ரசம்
இரண்டும் 10 நிமிடத்தில் தயார் செய்து உடனே
சாப்பிடலாம் என்று .
அந்த குறிப்பை நினைவு படுத்தி செயல் படுத்தினாள்
என் மனைவி.
எப்படி என்று நீங்களும் பாருங்களேன்
எங்கள் இருவருக்குதான் சமையல்
குக்கரை எடுத்தாள் அதில் 1.1/2 ஆழாக்கு
அரிசியை போட்டாள், 2 தக்காளியை துண்டு
துண்டாக நறுக்கி போட்டாள், உப்பு , பெருங்காயம்
கடுகு , மிளகாய்வற்றல், கருவேப்பிலை, கொத்தமல்லி
கொஞ்சம் துவரம் பருப்பு, கொஞ்சம் பயத்தம்பருப்பு
(2 டீஸ்பூன் அளவு) அவ்வளவுதான் ,(புளி கரைசல் இருந்தால்
நலம்)
அவ்வளவுதாங்க, குக்கர்ல 7 விசில் சத்தம் வந்தது
அடுத்த 5 வது நிமிடத்தில், தட்டில் சுட சுட சுவையான
ரசம் சாதம், கைகளில் வந்தது. இந்த இடைப்பட்ட
நேரத்தில், 2 அப்பளம் எடுத்து சுட்டு தயாராக வைத்து
இருந்தாள்.
வீட்டிலே சுவையான விருந்து சாப்பிட்ட உணர்வு
இப்படி நேரடி குக்கர் சமையல் பலவிதமான
உணவுகள் தயாரிக்கலாம், இவற்றை நாம்
ஒன்றன்பின் ஒன்றாக பார்ப்போம் .
நீங்களும் செஞ்சு பாருங்க, சுவைத்து கூறுங்கள்
No comments:
Post a Comment