Thursday, November 21, 2013

பேர்ட்ஸ் நெஸ்ட் - Birds Nest

பேர்ட்ஸ் நெஸ்ட்    By Velammal Gurusamy 

ஆங்காங்கே பறவைகள் கட்டிய கூட்டை 
நாம் பார்த்து இருக்கோம்,  கட்டிய கூட்டில் 
பறவைகள் முட்டை இட்டு குஞ்சு பொரித்து 
குட்டிகளுக்கு உணவு ஊட்டுவதை பார்த்திருப்போம் 

இங்கே அந்த "பறவைகள் கூடு" என்ற ஒருவகையான 
உணவே நம் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக 



கைப்பக்குவம் என்னும் ஆலமரத்தில் ஒரு சின்னப்பறவை கட்டிய கூட்டை பார்த்தீங்க .இதோ இன்னொரு பறவையின் கூடு .இந்தகூட்டைக் கட்ட நான் எடுத்துக்கொண்டவை ,



பெரிய உருளைக்கிழங்கு  ஒன்று ,
பொரிக்க வலைக் கரண்டி ,
எண்ணெய்,
உப்பு, மிளகுப்பொடி, சிப்ப்ஸ் கட்டிங் போர்டு .



உருளைக்கிழங்கை  நன்கு தோல்நீக்கி, தீக்குச்சி வடிவில் 
வெட்டிக்கொள்ளவேண்டும் .அதை அரைமணி நேரம் குளிர்ந்த நீரில் ஊறவிடவேண்டும்.
பிறகு அதை நன்கு வடிகட்டி,ஈரம் போக துடைத்து, வலை 
கரண்டியின் உள்பாகத்தில் நன்கு அழுத்தி வைக்க வேண்டும். 



கரண்டியின் வெளிபாகத்தில் நீட்டிக்கொண்டிருக்கும் 
பகுதியை வெட்டிவிட வேண்டும். 

அடுப்பில் வாணலியில் மிதமான சூட்டில் எண்ணை 
வைத்து , கரண்டி முழுவதுமாக எண்ணையில் மூழ்கும்படி 
வைத்து வேகவிடவேண்டும் .பொன்னிறமானதும் மெதுவாக 
எடுத்து விடவேண்டும். 

ஆறியதும் ஒரு பிளேட்டில் தலைகீழாக  கவிழ்தினால்  
'பேர்ட்ஸ் நெஸ்ட்' அங்கெ இருக்கும் .உப்பு,மிளகு தூவி
விட்டால் போதும், வீட்டிலுள்ள குட்டிப் பறவைகள் 
கூட்டைனோக்கி பறந்தோடிவரும்.


No comments:

Post a Comment