Wednesday, November 13, 2013

தினமும் ஒரு திருப்புகழ் - அருள் மறவாமை

தினமும் ஒரு திருப்புகழ் அறிவோம் - பாடல் (3)




ராகங்கள்: ஆரபி/ மோகனம்/பிலஹரி/சங்கராபரணம்

தாளம் : ஆதி

(அருள் மறவாமை )


பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை
பட்சியெனு முக்ரதுர ...... கமுநீபப்

பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
பட்டுருவ விட்டருள்கை ...... வடிவேலும்

திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு
சிற்றடியு முற்றியப ...... னிருதோளும்

செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு
செப்பெனஎ னக்கருள்கை ...... மறவேனே

இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய்
எட்பொரிய வற்றுவரை ...... இளநீர்வண்

டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள
ரிப்பழமி டிப்பல்வகை ...... தனிமூலம்

மிக்கஅடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு
விக்கிநச மர்த்தனெனும் ...... அருளாழி

வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்
வித்தகம ருப்புடைய ...... பெருமாளே.

கருத்துரை:- உலகங்களுக்கெல்லாம் தந்தையாகிய
சிவபெருமான் அருளிய ஒற்றைத் தந்தத்தை உடைய
ஞானவடிவினரே! மயில் வாகனத்தையும், கடம்ப
மலர் மாலையையும், கூர்மையான வேலாயுதத்தையும்
கோழிக் கொடியையும், திருவடிக் கமலங்களையும்,
பன்னிரு தோள்களையும், வயலூரையும் வைத்து
உயர்ந்த திருப்புகழை ஓதுவாய் என அடியேனுக்கு
திருவருள் புரிந்த அனுக்கிரகத்தை ஒருபோதும்
மறக்க மாட்டேன்.

தகவல், திருப்புகழ் திரட்டு  , நன்றி 

No comments:

Post a Comment