Tuesday, November 12, 2013

திருப்புகழ் அறிவோம் - அருள் பெற



தினமும் ஒரு திருப்புகழ் அறிவோம் - விளக்கங்களுடன் - (2)

அருள் பெற  -  

ராகங்கள் :- சக்ரவாகம் / பூர்விகல்யாணி / ஆனந்தபைரவி 

தாளம் : கண்டத்ரிபுடை




தகவல்:- திருப்புகழ் திரட்டு, முருகன் திருவருட் சங்கம்

உம்பர்தருத் தேநுமணிக் ...... கசிவாகி
ஒண்கடலிற் றேனமுதத் ...... துணர்வூறி

இன்பரசத் தேபருகிப் ...... பலகாலும்
என்றனுயிர்க் காதரவுற் ...... றருள்வாயே

தம்பிதனக் காகவனத் ...... தணைவோனே
தந்தைவலத் தாலருள்கைக் ...... கனியோனே

அன்பர்தமக் கானநிலைப் ...... பொருளோனே
ஐந்துகரத் தானைமுகப் ...... பெருமாளே.


கருத்துரை:- முருகப் பெருமான் வள்ளியை அடைய 
யானையின் வடிவில் கானகத்தில் தோன்றியவரே !
ததை வலம் வந்து அவரால் தரப்பட்ட பழத்தினை 
கையில் எந்தியவரே! அடியார்களுக்கு நிலைத்த 
பரம்பொருளே. ஐந்து கரங்களும், ஆணைமுகமும் 
உடைய பெருமைமிக்கவரே! விண்ணுலகில் உள்ள 
மரங்களைப் போல் என் உள்ளம் ஈகை குணமுடயதாகி
ஒளிவீசும் பாற்கடலில் தோன்றிய அமுதம் போன்ற 
ஞான உணர்வு ஊறி மெய்ஞான இன்பச் சாற்றினைப் 
பலகாலும் பருகி மகிழ, அடியேனுடைய உயிருக்கு 
ஆதரவைத் தந்து அருள்வாயாக!  

No comments:

Post a Comment