Monday, November 11, 2013

திருப்புகழ் அறிவோம் - விநாயகர் துதி


தினமும் ஒரு திருப்புகழ் அறிவோம் - விளக்கங்களுடன் - (1)




தகவல்:- திருப்புகழ் திரட்டு, முருகன் திருவருட் சங்கம்


விநாயகர் துதி :-




கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுக ...... னடிபேணிக்

கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
கற்பக மெனவினை ...... கடிதேகும்

மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
மற்பொரு திரள்புய ...... மதயானை

மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே


முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய ...... முதல்வோனே

முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடிசெய்த ...... அதிதீரா

அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை ...... இபமாகி

அக்குற மகளுட னச்சிறு முருகனை
அக்கண மணமருள் ...... பெருமாளே.




கருத்துரை:- பார்வதியின் மைந்தராகிய விநாயகப்
பெருமானைத் துதிப்பவர்களுக்கு ,நினைத்த காரியம்
உடனே நிறைவேறும். அவ்வாறு அவரை நினையாத
சிவபெருமானது தேரின் அச்சையே ஒடித்து துகள்
செய்தவர் . தன்னை நினைத்த இளையவருக்கு
வள்ளியைத் திருமணம் முடித்து வைத்தவர்
ஆதலின் எடுத்த காரியம் கை கூடுவதற்கு மகா கணபதியை
தேனைச் சொரியும் புது மலர்களால் அர்ச்சித்து
வணங்க வேண்டும் .




தொடரும் , தினமும் , தொடர்ந்து வாருங்கள்

No comments:

Post a Comment