Wednesday, October 30, 2013

ஸ்ரீரங்கம் பெருமாள் திருவடியை தரிசிக்கலாம்!



நவ.1 முதல் ஸ்ரீரங்கம் பெருமாள் திருவடியை தரிசிக்கலாம்!



ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் பெரிய பெருமாளுக்கு சாத்தப்பட்ட தைலக்காப்பு நவம்பர், 1ம் தேதி நீக்கப்படுகிறது. திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் கடந்த, 22ம் தேதி துவங்கியது. ஏழாம் நாளான நேற்று முன்தினம், நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சி நடந்தது. உற்சவ நிறைவு நாளான இன்று, நம்பெருமாள் காலை, 9.15 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, 9.45 மணிக்கு சந்திரபுஷ்கரணி குளத்தில் தீர்த்தவாரி, ஊஞ்சல் மண்டபத்தில், 11.30 மணி முதல் மதியம், 1.30 மணி வரை, திருமஞ்சனம் கண்டருள்கிறார். மாலை, 6 மணி முதல், இரவு, 8 மணி வரை, நம்பெருமாள் ஊஞ்சல் ஸேவை சாதிக்கிறார். பெரிய பெருமாளுக்கு தற்போது தைலக்காப்பு போடப்பட்டுள்ளது.

நவ., 1ம் தேதி பெரிய பெருமாள் தைலக்காப்பு நீக்கப்பட்டு, திருவடி ஸேவையை தரிசிக்கலாம்.

No comments:

Post a Comment