Wednesday, October 30, 2013

லட்சுமி குபேர பூஜை!

ஆட்கொண்டநாதர் கோயிலில் லட்சுமி குபேர பூஜை!



கீழச்சீவல் பட்டி அருகே அமைந்துள்ளது ஆட்கொண்டநாதர் கோயில். இங்கு ஆட்கொண்டநாதர், சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார். இங்கு குபேரன் சுவாமியை வழிபட்டதாக ஐதீகம்.

இக்கோயிலில் லட்சுமி குபேர பூஜை வருகிற 9 மற்றும் 10ம் தேதிகளில் நடைபெற உள்ளது. நகர கோயில்கள் ஒன்பதில் ஒன்றான இக்கோயிலில் வருகிற 9ம்தேதி சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு கணபதி பூஜையும் அதனை தொடர்ந்து லட்சுமி கடாட்சத்தை யும், முன்னோர்கள் ஆசியையும் பெற்றுத் தரும் சிறப்பு கோ பூஜையும், புத பகவானுக்கு உகந்த பொருட்களால் சிறப்பு நவக்கிரஹ பூஜையும், குபேர தியானத்துடன் கூடிய குபேர அஷ்டோத்ர நாமாவளி பூஜையும் நடைபெறுகிறது.

இரண்டாம் நாள் விழா: 10ம்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு தன ஆகர்ஷன லட்சுமி, குபேர யாகத்துடன் தொடங்குகிறது. காலை 8 மணிக்கு புதனின் அதி தேவதையான குபேர பகவானுக்கும், மூலவருக்கும், நவக்கிரகங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களால் சிறப்பு குபேர பூஜை நடைபெற உள்ளது. மிகவும் பழமையான இந்த கோயிலில், நவக்கிரஹ சன்னதியின் அருகில் குபேர பகவானுக்கு உகந்த வடக்கு திசை நோக்கி குபேரரின் வாகனமான குதிரையில் அமர்ந்த நிலையில் குபேர பகவான் காட்சி தருகிறார்.

இங்கு குதிரையின் இரண்டு கால்களும் பாய்வது போல் இருப்பதும், அவர் கைகளில் உள்ள சாட்டை சுழல்வது போல் இருப்பதும் சிறப்பு. குபேர பூஜை மற்றும் யாகத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.

No comments:

Post a Comment