Friday, August 23, 2013

பாம்பு போயிடுத்து . ஆனா.......


பாம்பு போயிடுத்து . ஆனா.......


தகவல்: மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள்
பாலு மாமா ஸ்ரீ மடம் காஞ்சி


நட்ட நடு நிசியில் யானை பயந்துகொண்டு பயங்கரமாக
பிளிறியது . சிஷ்யர்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள்.
யாரும் எழுந்திருக்கவில்லை.


யானைக்கு எலி தவளை, குருவி போன்ற சிறு
பிராணிகளிடம் அதிகமான பயம் உண்டு. இரவு
வேளையானதால் , எலி , தவளை வந்திருக்கக்கூடும்
என்று நினைத்து, யானை கொட்டகைக்குச் சென்றார்கள்


அங்கே ஒரு பெரிய நல்ல பாம்பு படம் எடுத்து ஆடிக்
கொண்டிருந்தது.


உடனே பெரியவா சிஷ்யர்களை எழுப்பினார்கள். தடி
கம்புடன் ஓடி வந்தார்கள் தொண்டர்கள். " பாம்பை
அடிக்காதே, நல்லெண்ணெய் விளக்கு ஏற்றி வை
போய்விடும்."


அவ்வாறே நல்லெண்ணெய் விட்டு ஓர் அகல் ஏற்றி
வைத்தவுடன், அதுவரை கன ஜோராகப் படமெடுத்துக்
கொண்டிருந்த நாகம், வெளியே ஊர்ந்து போய்விட்டது.


இதில் ஆச்சர்யம் என்னவென்றால், நன்றாகக் காது
கேட்கும் சிஷ்யர்களுக்கு, யானையின் பிளிறல்
கேட்கவில்லை; ஆனால், காது கேட்கவில்லை என்று
சொல்லிக் கொண்டிருந்த பெரியவாளுக்கு மட்டும் யானையின்
ஓலம் செவியில் விழுந்திருக்கிறது!


ஆமாம், கஜேந்திரனின் 'ஆதி மூலமே!' என்ற பிரார்த்தனைக்
குரல், ஸ்ரீமந்நாராயணனுக்கு மட்டும் தானே கேட்டு இருக்கிறது !.


பெரியவா உடனே யானையை வேறு இடத்தில் கட்டச்
சொன்னார்கள்.


"பாம்புதான் போயிடுத்தே?"


"பாம்பு போயிடுத்து....... யானைக்கு பயம் போயிருக்காதே!..."


யானை வேறு பத்திரமான இடத்திற்கு அழைத்துச்
செல்லப்பட்டது என்ற தகவல் கிடைத்த பிறகு தான்
பெரியவா ஓய்வெடுக்கச் சென்றார்கள் .

No comments:

Post a Comment