Wednesday, May 15, 2013

வெஜிடபிள் இட்லி (Vegitable Idly)

வெஜிடபிள் இட்லி (Vegitable Idly)  by:- Savithri Vasan

இட்லி
ரவா இட்லி
கம்பு இட்லி
கேழ்வரகு இட்லி
ஓட்ஸ் இட்லி
குஷ்பு இட்லி
முருகன் இட்லி

இப்டி எவ்ளவோ இட்லி இருக்கு சாப்பிட நாமும்
கேளிவிபட்டிருக்கோம் சிலவற்றை ருசித்து இருக்கோம்
அந்த வகையில் வெஜிடபிள் இட்லி என்பது ஒன்று

சர்க்கரை நோய் தாக்கம் உள்ளவர்களுக்கு மருத்துவர்
பரிந்துரைப்பது 2 இட்லி அதுக்கு மேல சாப்பிடாதீங்க
ஏன்னா அதுல அரிசி சேர்ந்திருக்கு . அவர்களுக்காகவே
புரதம் நிறைந்த பருப்பு வகைகள், காய்கறிகள் , மற்றும் சில
தாவர வகை சேர்த்து தயாரிக்கப்படுவது இந்த வெஜிடபிள் இட்லி


தேவையானவை -

உளுத்தம்பருப்பு 1 கப்
பயத்தம்பருப்பு    1 கப்
ரவை                       2 டீஸ்பூன்

காய்கறிகள் :-

கேரட் 1
பீன்ஸ் 1௦௦ கிராம்
அவரைக்காய் 50 கிராம்
கொத்தமல்லி தழை கொஞ்சம்
கருவேப்பிலை கொஞ்சம்
பொதினா கொஞ்சம்

சரி தேவை தெரிந்தது , எப்படி தயாரிப்பது






 

மேலே சொன்ன பருப்பு வகை இரண்டையும் தனி தனியே
2 to 3 மணிநேரம் ஊறவைக்கவும் , தனி தனியே மிக்சியில்
அரைத்து (நன்றாக நைசாக)விடவும் . அரைத்த பின்பு
2 மாவையும் ஒன்றாக கலந்து 2 டீஸ்பூன் ரவை கலந்து
தேவைக்கேற்ப உப்பு சேர்த்து ,தட்டு போட்டு மூடி வைத்துவிடவும் .




இதற்கிடையில் , மேலே சொன்ன காய்கறிகளை
நன்றாக பொடி பொடியாக நறுக்கி வைக்கவும்
(காய்கறிகள் உங்கள் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளவும்)
இதனுடன் கொஞ்சம் , கொத்தமல்லி, கருவேப்பிலை, பொதினா
சேர்த்து துண்டு துண்டாக நறுக்கி வைக்கவும் .



3 மணி நேரம் மாவு நன்றாக பதப்பட்டதும் ( பொங்கி வரலாம்)
அதனுடன் நறுக்கி வைத்த காய் , தழைகளை சேர்த்து ,

பிறகு மாவை நன்றாக காய் தழைகள் சேரும் வரை கலந்து
பொதுவாக இட்லி செய்யும் முறையை பின்பற்றவும் .






இட்லி தட்டில்  எண்ணை தடவி , இந்த மாவை ஊற்றி
ஆவியில் (குக்கரில்) 20 நிமிடம் வைத்து இறக்கி விடவும்





இறக்கி 10 நிமிடம் ஆனதும் குக்கரை திறந்ததும்
உங்கள் முகம் மலரும் , வண்ண வண்ண வெஜிடபிள்
இட்லி சுவைக்க தயார்





இதற்க்கு எந்தவிதமான சட்னியும் ஏற்றதே , கொஞ்சம் காரம்
அதிகமாக இருக்கட்டும் சட்னியில்.

சாம்பார் ஒரு நல்ல சைடு டிஷ் இதற்க்கு



இப்டி தட்டுல 4 இட்லி போட்டு , கொஞ்சம் சட்னி சாம்பார்
தனி தனியே கப்ல வெச்சு வீட்டில் இருக்கு பெரியவர் சிறுவர்
அனைவருக்கும் குடுத்து அசத்துங்க . பக்கத்ல இதமாதிரி 1 கப்
பில்டர் காபி வைக்க மறந்துடாதீங்க


என்னங்க எங்க அதுக்குள்ள எழுந்து போறீங்க ,
வெஜிடபிள் என்ன என்ன இருக்குன்னு பாக்க
போறீங்களா,  அப்ப உங்க வீட்ல இன்னைக்கு
மாலை டிபன் வெஜிடபிள் இட்லின்னு சொல்லுங்க
சபாஷ் ஜமாய்ங்க


வெரி வெரி டேஸ்டி வெஜிடபிள் இட்லி .....வெரிகுட் வெரிகுட்





No comments:

Post a Comment