Monday, May 20, 2013

'ஸத்யம் ப்ருயாத்'

'ஸத்யம் ப்ருயாத்'








விஷ்ணுபுரம் ராமமூர்த்தி அய்யர் என்பவர்
ஸ்ரீ மடத்தின் அத்யந்தசிஷ்யர். பெரியவாளிடம்
வேதா விசுவாசம் உடையவர். வாத்யமார்களைக்
கொண்டு ஸ்ரீ மடத்துக்கு ஏராளமாகத் தொண்டு செய்தவர்.

ஒருசமயம் பெரியவாளிடம் இப்படிப் பிரார்த்திதுக் கொண்டார்.

"என்னுடைய நெருங்கிய பந்துவுக்கு சித்த ஸ்வாதீனம்
இல்லாமல் கஷ்டப்படுகிறார். பெரியவா அனுக்கிரஹத்தால்
அந்த துன்பம் நீங்கனும்....."

ஸ்ரீ பெரியவா, " வாரணாசியிலே இருக்கும் பிரும்ம ஸ்ரீ
ராமச்சந்திர தீட்சதரிடம் போய், பகவத் கீதை பாஷ்யம்
முழுவதும் படிச்சுட்டு வா" என்றார்கள்.

ராமமூர்த்தி அய்யர், மனம் நிறைந்து திரும்பிச்
சென்றவுடன் அருகிலிருந்த ஒரு வித்வானைப் பார்த்து

"ஸத்யம் ப்ருயாத் ப்ரியம் ப்ருயாத்,
ஸத்யமயி அப்ரியம் ந ப்ருயாத் - என்கிறது சாஸ்திரம்.

புத்தி ஸ்வாதீனம் இல்லாமல் போனதற்கு காரணம்
முன் ஜன்மத்தில் அவர் செய்த புண்ணியம்! சத்யம்
பேசுவதற்கு இரண்டு பேர்களால் தான் முடியும் -
'பாலோன்மத்தவத்' என்கிறார் ஆசார்யாள். குழந்தை,
பொய் பேசாது.

அப்பா இல்லேன்னு, சொல்லச் சொன்னா! - என்று சொல்லும்.
புத்தி ஸ்வாதீனமில்லாதவனும் அப்படியேதான். பொய்
சொல்லத் தெரியாது. (அதனாலே பாவம் சம்பவிக்காது)

" ராமமூர்த்தியின் பந்துவுக்குப் புத்தி ஸ்வாதீனம் இல்லை
என்பதற்குக் காரணம், அவர் செய்த புண்ணியம் - என்பது
சத்யம். ஆனால், அப்படி சொன்னேனேயானால் அது
ராமமூர்த்திக்கு அப்பிரியம் (சந்தோஷத்தை கொடுக்காது)
"சாஸ்திரம், 'ஸத்யமேயானாலும் பிரியமில்லாததைச்
சொல்லாதே' (ஸத்ய மயி அப்ரியம் ந ப்ருயாத்) என்கிறது.
அதனால் நான் பிரியத்தைச் சொல்லிவிட்டேன்


பண்டிதர் பரவசத்தில் வியந்து நின்றார் ,
பண்டிதர் மட்டுமா , படித்த நாமனைவரும் அன்றோ




தகவல்:- தரிசன அனுபவங்கள் - பகுதி - 3

No comments:

Post a Comment