Saturday, April 13, 2013

பஞ்சாங்கம் என்றால் என்ன

பஞ்சாங்கம் என்றால் என்ன !!!




புத்தாண்டு அன்று கோயில்களில் , மடங்களில் , ஊர் பொது
இடங்களில் , பஞ்சாங்கம் வாசிப்பார்கள்.

திதி, வாரம்(கிழமை), நட்சத்திரம், யோகம், கரணம் என்னும்
பஞ்ச(ஐந்து) அங்கங்களை கொண்டதால் , இதற்க்கு பஞ்சாங்கம்
என்று பெயர் .

திதியை படிப்பதால் லட்சுமி கடாட்சம் ஏற்படும், கிழமை பற்றி
அறிவதால் நீண்ட ஆயுள் கிடைக்கும். நட்சத்திரம் பற்றி
படிப்பதால் முன் வினை பாவம் நீங்கும யோகத்தை பற்றி
வாசிப்பதால் நோயற்ற வாழ்வும் , காரணத்தை அறிவதால்
செயல்களில் வெற்றியும் கிடைக்கும்.

பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு 
பனைஓலையில் செய்த விசிறி கொடுப்பார்கள்.


பஞ்சாங்கம் வாசித்து முடிந்ததும் ஆண்டின் பலா பலன் சொல்லி 
அனைவருக்கும் பானகம் , நீர்மோர் , சுண்டல் கொடுத்து மகிழ்வார்கள்.

No comments:

Post a Comment