Saturday, April 13, 2013

மேஷ சங்கராந்தி - சித்திரை திருநாள்

மேஷ சங்கராந்தி - சித்திரை திருநாள்

சங்கராந்தி என்றதும் நமக்கு பொங்கல் பண்டிகையை
கொண்டுவரும் மகர சங்கராந்தி மட்டுமே நினைவில்
வரும்.

தமிழ் மாதங்கள் சித்திரை முதல் பங்குனி வரை வரும்
ஒவ்வொரு மாத முதல் நாளுமே சங்கராந்தி நாள்தான்

சித்திரையில் முதல் ராசியான மேஷத்தில் சூரியன்
நுழையும் இந்நாளே 'மேஷ சங்கராந்தி', இதனை மேஷரவி
என்றும் குறிப்பிடுவர்.

இவ்வாறே ஒவ்வொருமாதமும் ரிஷப சங்கராந்தி( ரவி),
மிதுன சங்கராந்தி(ரவி) என்ற பட்டியலிட்டு கூறலாம்.

ரவி என்றால் சூரியன். இருப்பினும் சித்திரையில் வரும் மேஷ
சங்கராந்தி தமிழ் புத்தாண்டு என்றும், ஐப்பசியில் வரும் துலா
ரவி ஐப்பசி விஷுவாகவும் தை முதல்நாளான மகர சங்கராந்தி
பொங்கலாகவும் கொண்டாட்டத்திற்குரியதாக உள்ளன.

சித்திரை மாதத்திற்கு மேஷம் , மது என்ற பெயர்களும் உண்டு.
இந்த மாதத்தில் சூரியன் 'ததா' என்று அழைக்கப்படுவார். இவர்
கைகளில் சங்கு சக்கரம் தாங்கியபடி சிகப்பு நிறத்தில்
பிரகாசித்து ஆனந்தம் அளிப்பவராக வீட்டிருக்கிறார். இவருக்கு
மதுபாலா என்ற பெயரும் உண்டு.

இவருக்கு தேரோட்டியாக 'வர்தகி'யும், 'கிருதஸ்தலீ' என்பவள்
அப்சரஸ் (தேவலோக மங்கை) ஆகவும் , தும்புரு என்பவர்
கந்தர்வராகவும், 'கராளி' என்பவள் சித்திரைக்குரிய சக்தி
தேவதையாகவும் இருப்பார்கள்.

சித்திரையில் ஆடு தானம் செய்தால் ஆண்டு முழுவதும்
சூரியன் அருளால் ஆரோக்கியம் நிலைக்கும். சித்திரையில்
படுக்கை, ஆசனம் போன்றவற்றை தானம் செய்யவேண்டும்
என பத்மபுராணம் கூறுகின்றது.

No comments:

Post a Comment