Friday, March 29, 2013

மணத்தக்காளி சூப் - Summer Special - 3

மணத்தக்காளி சூப்


தேவையானவை : 






மணத்தக்காளி கீரை - 1/2 கட்டு,

சின்ன வெங்காயம் -5,

பூண்டு - 3 முதல் 5 பல் வரை

தேங்காய்ப்பால் -ஒரு கப், (தேவை உள்ளவர்கள்)

உப்பு-தேவைக்கேற்ப

வர மிளகாய் - 1

மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்

எண்ணெய் -ஒரு டேபிள்ஸ்பூன்.




கீரையை சுத்தம் செய்து வெங்காயம், பூண்டு, தோலுரித்து பொடியாக நறுக்குங்கள். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து பூண்டு, வெங்காயம் சேர்த்து சிறிது வதக்கி, பிறகு கீரையையும் சேர்த்து மேலும் 5 நிமிடம் வதக்கி, 3 கப் தண்ணீர், உப்பு சேர்த்து ஒரு குக்கரில் வைத்து, குக்கரை மூடி 2 விசில் சத்தம் அளவுக்கு வைத்து இறக்குங்கள்.





5 நிமிடம் கழித்து, குக்கரை திறந்து மிளகுத்தூள், (தேங்காய்ப்பால்) சேர்த்துக்கலந்து பரிமாறுங்கள். வயிற்றுப்புண்ணுக்கு நல்ல மருந்து இந்த சூப்.


இது தேங்காய்பால் சேர்க்கப்படாத சூப்
வயிற்று புண் , வாய் புண் முதலியவற்றை தீர்க்கும்
இந்த சூப்.

No comments:

Post a Comment