Thursday, March 28, 2013

முருங்கைகீரை சூப் - Summer Special - 2


முருங்கைகீரை சூப்  - Summer Special - 2      By: s.s.vasan








தேவையானவை:

முருங்கைக்கீரை - ஒரு கையளவு

புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி எல்லாம் சேர்த்து - ஒரு கையளவு ,

மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்,

சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்,

உப்பு - தேவைக்கேற்ப,

தேங்காய்ப் பால் - கொஞ்சம் (தேவைப்பட்டால்)

மஞ்சள் பொடி - கொஞ்சம்



செய்முறை :-



4 கப் தண்ணீரில் கீரை மற்றும் புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி எல்லாவற்றையும் சேர்த்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.

கீரையின் சாறெல்லாம் இறங்கியதும், அடுப்பை அணைத்து வடிகட்டவும். லேசாக ஆறியதும் அதில் (தேங்காய்ப் பால் சேர்த்து) மிளகு, சீரகத் தூள் கலந்து பரிமாறவும்.


சிலருக்கு தேங்காய் ஒத்துக்கொள்ளாது ஆகவே

தேவைபட்டவர் சேர்த்துகொள்ளவும்.

No comments:

Post a Comment