Friday, March 29, 2013

மாகாளி கிழங்கு ஊறுகாய்

மாகாளி கிழங்கு ஊறுகாய்

மலையில் விளைவது மாகாளி
நாட்டில் விளைவது நன்னாரி

இப்படி மலைபிரதேசத்தில் விளையக்கூடிய
மாகாளிக்கிழங்கு ஒரு நல்ல ரத்த விருத்தி
செய்யக்கூடிய  கிழங்கு வகை , இதை
ஊறுகாய் செய்து சாப்பிடுவதை தவிர
வேறு எந்த பயன்பாட்டுக்கும் தேவைப்படாது.

கடையில் வாங்கும்போது இப்படி இருக்கும் , இதை வாங்கும்போது
மேல்புற தொலை விரல் நகங்களால் கீறிப்பார்த்து வாங்கவேண்டும்
இளசாக இருந்தால் தோல் சுலபமாக உரிந்து வரும், முத்தலாக
இருந்தால் தோல் உரிந்து வருவது தாமதப்படும் (கடினமாக இருக்கும்)

வாங்கிய மாகாளியை இவ்வாறு தோல் சீவி வைத்துக்கொள்ளவும்

தோல் சீவிய மாகாளியை இவ்வாறு பொடி பொடியாக நறுக்கி
நீர் விட்டு நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

இவ்வாறு சுத்தம் செய்த மாகாளியை ஒரு பாத்திரத்தில் போட்டு
அதில் நன்றாக புளித்த தயிரை ஊற்றவும் (1 கிலோ மாகாளிக்கு 2
லிட்டர் தயிர்) தயிரை வீட்டில் பால் வாங்கி  தயிராக்கி புளிக்கவிடவும்
(குளிர் சாதன பெட்டியில் வைக்கவேண்டாம் ) இவ்வாறு ஊற்றியபின்
1 விரலி மஞ்சள், 1 டீஸ்பூன் கடுகு, 1௦ வரமிளகாய் , இது மூன்றையும்
மிக்சியில் நன்றாக அரைத்து மாகாளியுடன் சேர்த்துவிடவும்.

நன்றாக 2 முதல் 3 நாட்கள் வரை ஊறட்டும் , பிறகு எடுத்து
உபயோகப்படுத்தவும். இதன் ஆயுட்காலம் குறைந்தது 1 முதல்
2 வருடம் வரை.


இதுபோன்ற நல்ல மஞ்சள் நிறத்தில் இந்த ஊறுகாய் இருக்கும்

இதை எல்லாவிதமான உணவிற்கும் ஊறுகாய் போல் தொட்டுக்கொள்ளலாம்

மேலும் , எல்லாவிதமான உப்புமாவிற்கும் சைடு டிஷ்ஆக உபயோகிக்கலாம்

பருப்பு பொடி சாதம் பிசைந்து , இந்த மாகாளி சாரு கொஞ்சம் இலையில்
போட்டு , குழம்பு போல தொட்டுக்கொண்டு சாப்பிட்டு பாருங்கள் , சுவை
நாக்கை விட்டு அகலாது.

No comments:

Post a Comment