Thursday, March 28, 2013

கஞ்சி சூப் - Summer Special - 1

கஞ்சி சூப்

தேவை:-

சாதம் வடித்த கஞ்சி - 2 கப்,
மோர் - 1 கப்,
இஞ்சி - ஒரு துண்டு,
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை -  கொஞ்சம்
உப்பு -  தேவைக்கேற்ப
காய்கறிக் கலவை (விரும்பினால்) - கால் கப்,
மல்லித்தழை - கொஞ்சம் 
எண்ணெய் - ஒரு டீஸ்பூன் 





செய்முறை:-

பச்சை மிளகாய், இஞ்சியை மெல்லியதாக  நறுக்குங்கள். 

எண்ணெயைக் காயவைத்து பச்சை மிளகாய், இஞ்சி, 
கறிவேப்பிலையை போட்டு  வதக்கி, 
(காய்கறி சேர்ப்பதானால் இப்போது சேர்த்து வதக்கி), 
வடித்த கஞ்சி, அரை கப் தண்ணீர், உப்பு சேர்த்து 5 நிமிடம் 
கொதிக்கவிடுங்கள். பிறகு  இறக்கிவைத்துவிடவும்  
கடைந்த மோரை அதனுடன் சேருங்கள். 
கொத்தமல்லி போட்டு பரிமாறுங்கள்.
தேவை என்றால் மிளகுத்தூள் கொஞ்சம் மேலே தூவி 
பருகலாம் - ஆனால் பச்சை மிளகாய் நீக்கிவிடவும் 
(மிளகாய் காரத்தைவிட , மிளகு காரம் உடலுக்கு நல்லது)


வடித்த காஞ்சியில் சூப் குடித்தால் வயிறு நிரம்பும் 

No comments:

Post a Comment